Vivo போன் பயனர்களுக்கு இப்படி ஒரு அப்டேட்டா.! அதிலும் நீங்க Jio யூஸர்னா டபுள் சந்தோசம்.!

|

இந்த மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் (5G Network) சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்து, இந்தியாவில் எங்கு திரும்பினாலும் 5ஜி தொடர்பான செய்திகளைத் தான் நாம் அதிகம் காண முடிகிறது.

என்ன தான் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்னும் பல ஸ்மார்ட்போன் பயனர்களின் கையில் 5ஜி டிவைஸ் இருந்தும் 5ஜி நெட்வொர்க்குடன் அவர்களால் இணைய முடியவில்லை.! குறிப்பாக Vivo ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இதே சிக்கல் தான்.!

5G அறிமுகம் செய்த பின்னரும் ஏன் 5ஜி நெட்வொர்க் கிடைக்கவில்லை?

5G அறிமுகம் செய்த பின்னரும் ஏன் 5ஜி நெட்வொர்க் கிடைக்கவில்லை?

இது பெரும்பாலும் எல்லா ஸ்மார்ட்போன் பிராண்ட்களிலும் நிகழ்ந்த ஒரு பொதுவான சிக்கலாக இருக்கிறது.

இதற்கான முக்கியமான காரணம் என்றால், OEM நிறுவனங்கள், அவர்களின் தயாரிப்புகளில் 5ஜி நெட்வொர்க்கை செயல்படுத்த அனுமதிக்கும் அப்டேட்களை இன்னும் வெளியிடாமல் இருப்பதாகும்.

டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் அரசின் உத்தரவிற்கு இணங்க, இப்போது சில பிராண்ட்கள் 5ஜி இணக்கத்திற்கான அப்டேட்களை வெளியிட துவங்கியுள்ளன.

Vivo அறிவித்த புதிய அப்டேட் ரோல் அவுட் விபரம்.!

Vivo அறிவித்த புதிய அப்டேட் ரோல் அவுட் விபரம்.!

அந்த வரிசையில், இப்போது விவோ (Vivo) நிறுவனம் அதன் பல ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு எப்போது 5ஜி அப்டேட்டை வெளியிடவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த அக்டோபர் 2022 இறுதிக்குள், விவோவின் பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் அப்டேட்டை பெரும் என்று Vivo அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புடன் விவோ இன்னும் சில தகவல்களை பகிர்ந்துள்ளது. அது என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.!

LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! LPG கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய புது விதி.! "இது" தெரியலான சிக்கல் வரலாம் மக்களே.!

விவோ மட்டுமே இப்படி ஒரு தனித்துவமான அப்டேட்டை கொண்டுள்ளதா?

விவோ மட்டுமே இப்படி ஒரு தனித்துவமான அப்டேட்டை கொண்டுள்ளதா?

Vivo போன்களுக்கான 5G ஆதரவின் இந்த அறிவிப்பு ஜியோவின் 5G சேவைகளைப் பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு அருமையான செய்தியாகும்.

காரணம், விவோ 5ஜி SA நெட்வொர்க் அப்டேட்டை வெளியிடுகிறது. தெரியாதவர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி SA நெட்வொர்க்கை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SA என்பது ஸ்டாண்ட் அலோன் (Stand alone) என்பதை குறிக்கிறது.

5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்க புது அப்டேட்.!

5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்க புது அப்டேட்.!

ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை இன்னும் ஆதரிக்காத 5ஜி கைபேசிகளுக்கு OEMகள் அதன் OTA அப்டேட்டை வெளியிட தயாராகி வருகின்றன.

இந்தியாவில், Vivo பல்வேறு 5G ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. இதில் என்ட்ரி லெவல் 5ஜி போன்கள், பட்ஜெட் மற்றும் பிளாக்ஷிப் 5ஜி போன்கள் என்று பல விலை வரம்புகளில் சாதனங்கள் கிடைக்கிறது.

விரைந்து 5ஜி அப்டேட்டை வெளியிடும் விவோவின் 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo Technology Day 2022 நிகழ்வில் நிறுவனம் என்ன சொன்னது?

Vivo Technology Day 2022 நிகழ்வில் நிறுவனம் என்ன சொன்னது?

இது தவிர, Vivo டெக்னாலஜி டே 2022 (Vivo Technology Day 2022) நிகழ்வில் ஸ்மார்ட்போன் சந்தையில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 5G, போட்டோகிராபி எடுத்தல் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் விவோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விவோ போன்களின் ஆற்றல், மேம்படுத்தல், மல்டி சிம் செயல்பாடு மற்றும் ஆண்டெனா தொழில்நுட்பம் ஆகியவற்றில் தனித்துவமான பயனர்-மைய வளர்ச்சிகளைக் காட்சிப்படுத்தியது.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

ஜியோ ட்ரூ 5ஜி பயனர்களுக்கு எப்படி டபுள் சந்தோசம்.!

ஜியோ ட்ரூ 5ஜி பயனர்களுக்கு எப்படி டபுள் சந்தோசம்.!

சமீபத்தில், விவோ நிறுவனம் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G), ஜியோ கேம்ஸ்க்ளவுட் (Jio Games Cloud) மூலம் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் கேமிங் தளத்துடன் ஒரு கூட்டாண்மையை அறிவித்தது.

ஜியோவின் 5G நெட்வொர்க்கில் கிளவுட் கேமிங்கை நிரூபிக்க நிறுவனம் அதன் முதன்மை ஸ்மார்ட்போனான Vivo X70 Pro+ ஐப் பயன்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே இந்தியாவில் நான்கு நகரங்களில் 5G சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ 5ஜி சேவையை பெறுவது எப்படி?

ஜியோ 5ஜி சேவையை பெறுவது எப்படி?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 5G சேவைகள் தற்போது இன்வைட் (invite) மூலம் மட்டுமே கிடைக்கும்.

உங்களுக்குக் கிடைக்கும் இன்விடேஷனை சரிபார்க்க, நீங்கள் தகுதியான நகரத்தில் வசிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்யவும்.

MyJio ஆப்ஸ் மூலம் உங்கள் நகரத்தில் 5ஜி கிடைக்கிறதா இல்லை என்று செக் செய்யலாம். விவோ 5ஜி போன் பயனர்களுக்கு இன்னும் சில தினங்களில் அப்டேட் வெளியிடப்படும்.

Best Mobiles in India

English summary
Most Vivo Smartphones Will Support 5G SA -Standalone Network In India Before October 2022 Ends

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X