மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!

Posted By:

இரவு-பகல், சூரியன்-சந்திரன், விஜய்-அஜித், இப்படி உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு எதிர் துருவம் இருக்கும். அது போலவே தான் உலகின் அதிமேதாவிகளுக்கு எதிராக ஒரு பெரிய கிறுக்கு கூட்டமே இருக்கு. அவர்களின் படைப்புகளும் அவர்களை போலவே கிறுக்குத்தனமாகத்தான் இருக்கும்..!

ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

அப்படியாக, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகளிலேயே மிகவும் 'பயனற்ற' கருவிகளின் பட்டியலை தான் நாம் இங்கே காண இருக்கின்றோம். பாருங்க..! "ஏன் உனக்கு இந்த தேவை இல்லாத வேலை" என்ற கவுண்டமணி டயலாக் அடிக்கடி ஞாபகம் வரும். ரெடியா..!

ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஏசி ஷூ :

ஏசி ஷூ :

தி கூல் பிரிஸ் என்ற பெயர் கொண்ட இது ஜப்பானின் கண்டுப்பிடிப்பு, யானைக்கும் அடி சறுக்கும்டா சாமி..!

லைக்-ஏ-ஹக் இன்ஃபளாட்டபிள் ஜாக்கெட் :

லைக்-ஏ-ஹக் இன்ஃபளாட்டபிள் ஜாக்கெட் :

மழைக்கு போடுற கோர்ட் போல தெரியும் இது உங்கள் ஃபேஸ் புக் போஸ்டை யாராவது லைக் செய்தால் இது உப்பி விரிந்து கொள்ளுமாம்.

ஐஸ் மெய்ஸ்டர் ஸ்லைசர் :

ஐஸ் மெய்ஸ்டர் ஸ்லைசர் :

இந்த சறுக்கு பலகையின் அடியில் பொருத்தப்பட்டு இருக்கும் ஐஸ் கட்டிகளானது சறுக்கியத்தை விட பல்லை உடைத்ததுதான் அதிகமாம்.

ரோல் என் பௌர் :

ரோல் என் பௌர் :

ஜூஸ் அல்லது பாலை சிந்தாமல் ஊற்ற 'கண்டுபிடிக்க' பட்டதுதான் இது.!

என்இஸ்(NES) விர்ச்சுவல் பாய் :

என்இஸ்(NES) விர்ச்சுவல் பாய் :

மூழ்கிய நிலையை அடைய செய்யும் 3டி வீடியோ கேம் சுவாரசியத்தை விட தலைவலி, குமட்டுதலையும் அதிகம் ஏற்படுத்துமாம்..!

சோலா ஃபீட் :

சோலா ஃபீட் :

பாதங்களை மஞ்சள் நிறம் கலந்த பழுப்பாக்க இது உதவும். விலைதான் மேட்டர் - 291 டாலர்..!

2 இன் 1 ஐப்பாட்டி :

2 இன் 1 ஐப்பாட்டி :

குழந்தைகள் விளையாடிக் கொண்டே 'கக்கா' போக கண்டுபிடிக்கப்பட்ட இது, குழந்தைகளை விளையாட மட்டுமே செய்கிறதாம், மற்றதை நிறுத்தி விடுகிறதாம்..!

அஸ்-சீன்-ஆன் டிவி ஹாட் :

அஸ்-சீன்-ஆன் டிவி ஹாட் :

மொபைல் போனுடன் இணைக்க பர்சனல் டிவியை உருவாக்கி கொடுக்கும் இந்த தொப்பி, மாட்டிக்கொண்டு இருப்பவரை பார்த்து சிரிப்பவர்களையும் சேர்த்து மறைக்குமாம்..!

தி ஹப்பி ஃபோர்க் :

தி ஹப்பி ஃபோர்க் :

இந்த ஃபோர்க் ஸ்பூன் நீங்கள் வேகமாக, அல்லது அதிகமாக சாப்பிடும் போது பொறுமையாக, குறைவாக சாப்பிட சொல்லி 'வைப்ரேட்' ஆகி உணர்த்துமாம்..!

பப்பி ட்வீட்ஸ் :

பப்பி ட்வீட்ஸ் :

நாய்களின் கழுத்தில் மாட்டக் கூடிய இது உங்கள் நாய் என்ன செய்கிறது என்பதை அதன் குரல் மற்றும் அசைவுகள் மூலம் உங்களுக்கு ட்வீட் செய்யும். அதில் பாதி தவறாகத்தான் இதில் இருக்குமாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some Most Useless Gadgets. This are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot