உஷார் : உயிரை பறிக்கும் மொபைல் போன்.??

By Meganathan
|

கைபேசி எனப்படும் மொபைல் போன் கருவிகள் அடிப்படை தகவல் பரிமாற்றத்தில் துவங்கி இன்று அனைத்து வித பயன்பாடுகளையும் வழங்க துவங்கியுள்ளது எனலாம். தகவல் பரிமாற்றத்தையும் தான்டி இவை இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாக முக்கிய காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி தான்.

இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மொபைல் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என்பதே உண்மை. அப்படியாக மொபைல் போன் மூலம் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

உறக்கம்

உறக்கம்

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளிகள் உறங்கும் போதும் தங்களது அருகிலேயே மொபைலை வைத்து கொள்கின்றனர், இதை தவிர்த்து உறங்கும் போது மட்டுமாவது கைபேசியை தொலைவில் வைப்பது நல்லது.

சார் அளவு

சார் அளவு

மொபைல் போன்களை வாங்கும் போது குறைந்த சார் அளவு கொண்ட கருவிகளை வாங்கலாம். இதன் மூலம் மொபைல் போன்களின் சிக்னல் உடலில் அதிகளவு ஊடுறுவுவதை தவிர்க்க முடியும்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

அழைப்புகளில் பேசுவதை குறைத்து முடிந்த வரை குறுந்தகவல் அனுப்பலாம், இதன் மூலம் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் அதிகளவு குறையும்.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

குறுந்தகவல் அனுப்ப முடியாது, நிச்சயம் அழைப்புகளை மேற்கொள்வோம் என்பவர்கள் பாதுகாப்பான ஹெட்செட் அல்லது ஸ்பீக்கர் மோடு பயன்படுத்தலாம்.

கேஸ்

கேஸ்

பாதுகாப்பான கேஸ் கொண்டு மொபைல் போனினை பாதுகாத்திடலாம் இல்லையேள் கேஸ் இல்லாமல் கவனமாக பார்த்து கொள்ளலாம்.

ஃப்ளைட் மோடு

ஃப்ளைட் மோடு

மொபைல் போனினை வாரம் ஒரு நாள் மட்டுமாவது ஃப்ளைட் மோடில் வைக்கலாம்.

சிக்னல்

சிக்னல்

குறைந்த அளவு சிக்னல் இருக்கும் போது மொபைல் போனினை பயன்படுத்த கூடாது.

பயணம்

பயணம்

பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது, இவ்வாறான நேரங்களில் அதிகப்படியான சிக்னல் பரிமாற்றம் அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தும்.

அழைப்பு

அழைப்பு

அழைப்புகளை மேற்கொள்ளும் போது மறுப்பக்கம் இருப்பவர் அழைப்பை ஏற்கும் வரை மொபைலை சற்றே தூரமாக வைத்து கொள்ளலாம்.

உடல்

உடல்

முடிந்த வரை மொபைல் போனினை உடல் அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Most useful cell phone safety tips. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X