2021 இதெல்லாம் வேறலெவல்- கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ!
சாம்சங் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் பிரபலமான பிராண்ட்களில் ஒன்றாகும். சாம்சங் இந்தியா அனைத்து விலை பிரிவுகளிலும் பரந்த அளவிலான உயர்நிலை ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. 2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாம்சங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு என வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்திய சந்தையில் சியோமி நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு என தனி மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது. இந்த நிலையில் 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனத்தின் எஃப் சீரிஸ், எஸ் சீரிஸ், ஏ சீரிஸ் மற்றும் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த அனைத்து சாதனங்களும் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகும் சாதனங்கள் ஆகும். 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு என வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில் 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம். 2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சாம்சங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Samsung Galaxy F62
விலை: ரூ. 20,499
6.7-இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்டி ஓ சூப்பர் அமோலெட் ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் சாம்சங் எக்ஸினோஸ் 9 சீரிஸ் 9825 7என்எம்-ஜிபி ஆதரவு, 6 ரேம், 128ஜிபி உள்சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய வசதி, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.1, டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி), 64எம்பி + 12எம்பி + 5எம்பி + 5எம்பி பின்புற கேமராக்கள் 32எம்பி முன்பக்க கேமரா டூயல் 4ஜி வோல்ட், 7,000 எம்ஏஎச் பேட்டரி வசதி உடன் இந்த சாதனம் கிடைக்கிறது.

Samsung Galaxy M02s
விலை: ரூ. 8,999
6.5-இன்ச் (1560 × 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் எல்சிடி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் பிளாட்ஃபார்ம், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு, ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான சாம்சங் ஒன் யூஐ, இரட்டை சிம், 13MP, 2MP, 2MP பின்புற கேமராக்கள், 5 மெகாபிக்சல் முன்புற கேமரா, இரட்டை 4G வோல்ட், 5,000எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப்12
விலை: ரூ.10,999
6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே ஆதரவு, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 4ஜிபி ரேம் 64GB உள்சேமிப்பு மற்றும் 128GB உள்சேமிப்பு வசதி, மைக்ரோSD உடன் விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஸ்லாட் வசதி, டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி), ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன்யுஐ 3.1, 48 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் பின்புற கேமராக்கள், 8 மெகாபிக்சல் முன்புற கேமரா 4G வோல்ட், 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

Samsung Galaxy A12
விலை: ரூ. 12,999
6.5-இன்ச் HD + டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஹீலியோ பி35 செயலி, 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம்,6 ஜிபி ரேம், 32 உள்சேமிப்பு 64 உள்சேமிப்பு 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 48 மெகாபிக்சல், 5 எம்பி, 2 எம்பி, 2 எம்பி கேமராக்கள் எல்இடி பிளாள் வசதி, 8 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா, இரட்டை 4ஜி வோல்ட், வைஃபை வசதி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் கிடைக்கிறது ஸ்மார்ட்போன்.

Samsung Galaxy M42
விலை: ரூ.21,999
6.6-இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி யூ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வசதி, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி 8 என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் வசதி, 6 ஜிபி ரேம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வசதியுடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.1, ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி), 48 எம்பி, 8 எம்பி, 5 எம்பி, 5 எம்பி பின்புற கேமராக்கள், 20 எம்பி முன்புற செல்பி கேமரா, 5,000 mAh பேட்டரி வசதியோடு கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

Samsung Galaxy A32
விலை: ரூ. 21,999
6.4-இன்ச் முழு எச்டி ப்ளஸ் இனிபினிட்டி யு டிஸ்ப்ளே, ஆக்டோகோர் மீடியாடெக் G80 12nm ப்ராசசர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு வசதி, 1 GB வரை விரிவாக்கக்கூடிய எஸ்டி கார்டு ஸ்லாட், 64 எம்பி + 8 எம்பி + 5 எம்பி + 5 எம்பி பின்புற கேமராக்கள், 20 எம்பி முன்புற செல்பி கேமரா. 5,000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications