2022 Google இல் இந்தியர்கள் அதிகம் தேடிய திரைப்படங்கள்! லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் படம்.!

|

2022 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் 2022 இன் பட்டியலை Google வெளியிட்டுள்ளது. பல மொழிகளின் திரைப்படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இதில் பெரும்பாலானவை பிரபலமான திரைப்படங்கள் தான். இந்த பட்டியலில் ஒரு ஒரு தமிழ் படம் மட்டும் இடம்பிடித்திருக்கிறது.

திரைப்பட ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டு

திரைப்பட ரசிகர்களுக்கு அற்புதமான ஆண்டு

இரண்டு வருடங்களாக திரையரங்குகள் மூடிய நிலையில் 2022 என்பது திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. லாக்டவுன் இல் பல நல்ல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அடடா இந்த திரைப்படம் மட்டும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வேற லெவல் வரவேற்பு கிடைத்திருக்கும் என பல படங்கள் விமர்சனங்களை பெற்றன.

கூகுள் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்கள்

கூகுள் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்கள்

அதன்படி லாக் டவுன் முடிந்து இந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டு அதில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. திரை ரசிகர்களுக்கு இந்த ஆண்டு வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏணைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும், கூகுளில் அதிக பேர் தேடிய திரைப்படங்களின் பெயர் குறித்த தகவலை கூகுள் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் பல மொழி படங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து படங்களும் பிரபலமான திரைப்படமாக தான் இருக்கிறது. இதில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என ஒரு தமிழ் படமும் இருக்கிறது.

கூகுள் 2022 இல் அதிகம் தேடப்பட்ட திரைப்படம்

கூகுள் 2022 இல் அதிகம் தேடப்பட்ட திரைப்படம்

2022 ஆம் ஆண்டு திரைப்படத் துறைக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது. இரண்டு ஆண்டுகள் இயங்காமல் இருந்து திரையரங்குகள் இந்த ஆண்டு தான் ஓபன் ஆகின. கூகுளில் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியல் குறித்து பார்க்கையில், இதில் முதல் இடத்தில் இருப்பது ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரா இருக்கிறது.

அமிதாப் பச்சன், ஷாருக் கான், நாகார்ஜுனா, ஆலியா பட், ரன்பீர் கபூர் என பல முக்கிய புள்ளிகள் நடித்த Brahmastra: Part One - Shiva இதில் முதல் இடத்தில் இரு்கிறது. இந்த திரைப்படம் தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

K.G.F: Chapter 2

K.G.F: Chapter 2

இரண்டாவது இடத்தில் இருப்பது K.G.F: Chapter 2. முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற கேஜிஎஃப் இன் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் அமோக வரவேற்பை பெற்றது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம். கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இந்த படத்திற்கு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

The Kashmir Files

The Kashmir Files

அடுத்த இடத்தில் இருப்பது The Kashmir Files திரைப்படமாகும். சமீப காலமாக பல விவாதங்களுக்கு இந்த திரைப்படம் உட்படுத்தப்பட்டு வருகிறது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தி காஷ்மீர் ஃபைலஸ் ஆகும். 90களின் முன் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.

RRR

RRR

பிரமாண்ட இயக்குனர் பாகுபலி படைப்பாளர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் RRR. இந்த திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டை புரிந்தது. ஜுனியர் என்டிஆர், ராம் சரன், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வெளியான திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்த படம் இந்தாண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை விவாதம் நடந்து வருவதாகவும் இயக்குனர் ராஜமௌலி குறிப்பிட்டார். இந்த படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

Kantara

Kantara

சைலண்டாக குறைந்த பட்ஜெட் இல் வெளியாகி நாடு முழுவதும் அமோக வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் காந்தாரா. கன்னட மொழியில் வெளியான இந்த திரைப்படம் அடுத்தடுத்து பல மொழிகளில் வெளியானது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.16 கோடியில் தயாரான இந்த திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இந்த திரைப்படமும் கூகுளில் அதிகம் தேடிய படங்களின் பட்டியலில் இருக்கிறது. Kantara படத்தை அமேசான் பிரைம் இல் பார்க்கலாம்.

Pushpa: The Rise

Pushpa: The Rise

அடுத்த இடத்தில் இருக்கும் திரைப்படம் Pushpa: The Rise ஆகும். நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இந்த படம் கூகுளில் அதிக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

Vikram

Vikram

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சக்கப்போடு போட்ட விக்ரம் படம் இந்த பட்டியலில் இருக்கிறது. இந்த ஆண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியானாலும் கூகுளில் அதிக தேடிய திரைப்படங்களில் இடம்பிடித்த ஒரு தமிழ் திரைப்படம் Vikram தான்.

Laal Singh Chaddha, Drishyam 2, Thor: Love and Thunder

Laal Singh Chaddha, Drishyam 2, Thor: Love and Thunder

Laal Singh Chaddha திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. ஆமிர் கான் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மலையாளத்தில் மோகன் லால், தமிழில் கமல் ஹாசன், இந்தியில் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த த்ரிஷ்யம் (பாபநாசம்) படத்தின் இரண்டாம் பாகம் தான் Drishyam 2. இந்த படம் கூகுள் தேடல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

அடுத்த இடத்தில் இருப்பது Thor: Love and Thunder. மார்வல் வரிசையில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது அதேபோல் தான் இந்திய ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது. கூகுள் தேடல் பட்டியலில் இடம்பெற்ற டாப் 10 இடத்தில் இது கடைசி இடத்தில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Most Searched Google Movies of India in 2022: Brahmastra, Vikram, Kantara in Top 10 List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X