அட இதையுமா செல்பீ எடுப்பீங்க.!?

By Meganathan
|

செல்பீ : துவக்கத்தில் வினோதமாக பார்க்கப்பட்டு இன்று பெரும்பாலானோர் இதை விசித்திரமாக செய்ய முயற்சித்து தங்களது உயிரை மாய்த்து கொள்கின்றனர். முதலில் டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்டு மெல்ல மொபைல்களில் இடம் பிடித்து, இன்று அனைத்து மொபைல்களிலும் அத்தியாவசியமான ஒன்றாக செல்பீ கேமரா வழங்கப்படுகின்றது.

இதோடு இல்லாமல் செல்பீ எடுக்க வசதியாக செல்பீ ஸ்டிக் எனும் குச்சியும் சந்தையில் இன்று அதிகம் விற்பனை செய்யப்படுகின்றது. நம்ம வீட்டில் முருங்கை காய் பறிக்க பயன்படுத்தும் குச்சியை போன்றே செல்பீ எடுக்க உதவும் செல்பீ ஸ்டிக் அதிவேகமாக பிரபலம் அடைந்திருக்கின்றது.

அந்த வகையில் உலகளவில் தற்சமயம் கிடைப்பதில் மிகவும் கேலிக்குரிய செல்பீ ஸ்டிக் வகைகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

லைட்சேபர் செல்பீ ஸ்டிக்

லைட்சேபர் செல்பீ ஸ்டிக்

இது தான் ஸ்டார் வார்ஸ் புகழ் டார்த் வேடெர் லைட்சேபர் செல்பீ ஸ்டிக்.

பெல்ஃபீ ஸ்டிக்

பெல்ஃபீ ஸ்டிக்

பெல்ஃபீ ஸ்டிக் கொண்டு பின் அழகை செல்பீ எடுத்து கொள்ளலாம்.

செல்பீ ப்ரஷ்

செல்பீ ப்ரஷ்

சீப் கொண்டு தலை சீவி பின் அதிலேயே ஸ்மார்ட்போன் பொருத்தி செல்பீ எடுத்து கொள்ளலாம்.

சோம்பீ

சோம்பீ

செல்பீ ஸ்டிக் கருவியில் இணைத்து கொண்டு செல்பீ எடுத்தால் சோம்பி உங்களை நெருங்கி வருவது போன்று காட்சியளிக்கும்.

செல்பீ ஆர்ம்

செல்பீ ஆர்ம்

தனிமையில் செல்பீ எடுத்தாலும் செல்பீ ஆர்ம் இருந்தால் துணையுடன் இருப்பது போன்று செல்பீ எடுக்க முடியும்.

கியூரியோசிட்டி செல்பீ

கியூரியோசிட்டி செல்பீ

250 கோடி அமெரிக்க டாலர் செலவில் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அனுப்பட்ட கியூரியோசிட்டி அதிக செல்பீக்களை எடுத்திருக்கின்றது.

மேக்புக் செல்பீ

மேக்புக் செல்பீ

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்ட செல்பீ ஸ்டிக் தற்சமயம் மேக்புக் கருவிகளுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது. இனி லேப்டாப் கொண்டும் செல்பீ எடுக்கலாம், அடுத்து கணினிக்கும் செல்பீ ஸ்டிக் கண்டுபிடிப்பார்களோ.?

ஸ்டெல்தி செல்பீ ஸ்டிக்

ஸ்டெல்தி செல்பீ ஸ்டிக்

கையில் செல்பீ ஸ்டிக் எடுத்து செல்ல வெட்கமாக இருந்தால் பாப் ஸ்டிக் பயன்படுத்தலாம். இதை கையில் பிரேஸ்லெட் போன்று அணிந்து கொண்டு செல்பீ எடுக்கும் போது ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொள்ளலாம்.

செல்ஃபீ ஸ்டிக்

செல்ஃபீ ஸ்டிக்

சுவரில் ஒட்டி வைக்க பயன்படுத்தும் கருவி போன்று காட்சியளிக்கும் செல்பி ஸ்டிக் கொண்டு கார் மற்றும் உணவகங்களில் புகைப்படம் எடுத்து கொள்ள முடியும்.

பெரிய செல்பீ ஸ்டிக்

பெரிய செல்பீ ஸ்டிக்

இது தான் இன்று வரை உலகின் மிக பெரிய செல்பீ ஸ்டிக் என்ற பெருமை கொண்டிருக்கின்றது. இந்த செல்பீ ஸ்டிக் நீளம் மட்டும் சுமார் 32 அடி.

Best Mobiles in India

English summary
most ridiculous selfie sticks ever created Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X