அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஃபிரான்ஸ்..!!

Posted By:

ஐரோப்பா கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஃபிரான்ஸ் நாடு என்றால் மற்றவர்களை போன்றே, முதலில் நினைவிற்கு வருவது அழகு, அருங்காட்சியகம், மற்றும் உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் என நினைத்தால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக நீங்கள் நினைக்கும் பட்சத்தில் இந்த பட்டியலில் ஃபிரான்ஸ் நாட்டிற்கும் ஒர் இடம் ஒதுக்குங்கள், ஃபிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
க்ரோடேல்

10 க்ரோடேல்

தரையில் இருந்து வான் நோக்கி தாக்கும் இந்த க்ரோடேல் ஏவுகணை தற்சமயம் ரஷ்யா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளிடம் மட்டுமே இருக்கின்றது. க்ரோடேல் ஏவுகணை விமானம் மற்றும் ஏவுகணைகளை தகர்க்கும் திறன் கொண்டதாகும்.

ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணை

09 ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணை

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்த இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மூன்றாவது நாடாக ஃபிரான்ஸ் இருக்கின்றது. இந்த ஏவுகணையானது 1000 மற்றும் அதற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாகும்.

ஹாரிசான் கிளாஸ் டிஸ்ட்ராயர்

08 ஹாரிசான் கிளாஸ் டிஸ்ட்ராயர்

இத்தாலி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் நான்கு அதிநவீன கப்பல்களில் இருக்கும் ஏவுகணைகளை கொண்டு வாண்வெளியில் 150 கிமீ வரை தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் ஒன்றை உருவாக்க முடியும்.

மிஸ்ட்ரல் கிளாஸ் (எல்எச்டி)

07 மிஸ்ட்ரல் கிளாஸ் (எல்எச்டி)

இந்த காலத்து எல்எச்டி கப்பல் ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் டாக் கொண்டிருக்கின்றது. 200 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 21,000 டன் வரை எடையை தாங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் சுமார் 35 ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.

சார்லஸ் டீ கௌல்லீ

06 சார்லஸ் டீ கௌல்லீ

உலகின் சக்தி வாய்ந்த அணு சக்தி விமானதளங்களில் ஒன்றாக சார்லஸ் டீ கௌல்லீ விளங்குகின்றது. இதில் ஃரேபிள்-எம் மற்றும் சூப்பர் என்டென்டார்டு ஃபைட்டர் விமானங்களும், ஈ-2 ஏர்போன் விமானம், என்எச்90, கேஸெல் மற்றும் பூமா ஹெலிகாப்டர்களை கொண்டிருக்கின்றது.

லெக்லெர்க்

05 லெக்லெர்க்

ஃபிரான்ஸ் நாட்டு ராணுவத்திற்காக ஏஎம்எக்ஸ் தயாரித்த மிகவும் அதிநவீன , விலை உயர்ந்த பீரங்கி தான் லெக்லெக். இந்த120 எம்எம் துப்பாக்கிகள், 8 சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கின்றது. இந்த வகை பீரங்கி 1992 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதனை பராமரிப்பதும் எளிமையாக இருப்பதோடு பராமரிப்பு செலவும் குறைவாகும்.

ஃபாமஸ் ஃபெலின்

04 ஃபாமஸ் ஃபெலின்

1980களில் ஃபிரான்ஸ் ராணுவத்தில் நுழைந்த இந்த துப்பாக்கியில் வீடுயோ கேமரா, இரவிலும் தொந்தரவின்றி பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்கள் இந்த துப்பாக்கியை அதிநவீனமாக்கப்பட்டுள்ளது.

ஏஸ்டர் 15 / 30

03 ஏஸ்டர் 15 / 30

இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட விமான ஏவுகணைகள் தரையில் இருந்து ஏவும் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் எவ்வித வித்தியாசமும் இல்லை என்றாலும் இந்த ஏவுகணைகள் உலகளவில் பிரபலமாக இருக்கின்றன.

டசால்ட் ரேஃபிள்

02 டசால்ட் ரேஃபிள்

ஏஈஎஸ்ஏ ரேடார், ஆப்ட்ரானிக்ஸ், ஈஎஸ்எம் போன்ற அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கும் இந்த விமானம் பல விதங்களில் தாக்குதல்களை நிகழ்த்தும் வல்லமை கொண்டாதகும்.

எக்ஸோசெட்

01 எக்ஸோசெட்

பார்க்க சிறியதாக இருக்கும் இந்த ஏவுகணை மூலம், விலை உயர்ந்த பெரிய ஏவுகணைகளை செயல் இழக்க செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
MOST POWERFUL WEAPONS OF THE FRENCH MILITARY. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot