Home
News

இதிலும் தலைசிறந்து விளங்கும் ஜப்பான்..!!

ரோபோட்டிக்ஸ் மற்றும் மின்சாதன தொழில்நுட்பங்களில் உலகையே வியக்க வைக்கும் நாடு ஜப்பான் தான் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. ஜப்பான் காரங்க மூளை மிகவும் வித்தியாசமாக யோசிக்கும் என்றும் ஓர் நம்பிக்கை இருக்கின்றது.

இதை தவிற ஜப்பான் நாட்டின் ராணுவ பலம் குறித்து தெளிவான தகவல்கள் மிகவும் அரிதான ஒன்றே. அந்த வகையில் ஜப்பான் ராணுவத்தின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

மேனுவர் காம்பாட்

மேனுவர் காம்பாட்

போர் தளங்களில் வேகமாக பயணித்து தாக்க கூடிய இவ்வகை டேன்க்கர்களில் அதிநவீன ஃபயர் கண்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்டிருப்பதோடு டேன்க்கரை சுற்றி 12.7 எம்எம் இயந்திர துப்பாக்கிகளும் இருக்கின்றது.

டைப் 3 சூ-சாம்

டைப் 3 சூ-சாம்

தரையில் இருந்து வாணில் பறக்கும் ஏவுகணைகளை தகர்க்கும் திறன் கொண்ட இவ்வகை ஏவுகணைகள், ஆக்டிவ் எலக்ட்ரானிக்கல்லி ஸ்கேனிங் அர்ரே எனும் ரேடார் பயன்படுத்தி இலக்குகளை தேடி துல்லியமாக தாக்க முடியும்.

இசுமோ அன்டு ஹியுகா கிளாஸ்

இசுமோ அன்டு ஹியுகா கிளாஸ்

ஆபத்து காலங்களில் கடல் வழியாக பாதுகாப்பு வழங்க இந்த வகை கப்பல்கள் உதவியாக இருக்கின்றன. அதிகபட்சம் 14 ஹெலிகாப்டர் வரை தாங்கும் இந்த கப்பலில் ஏஈஎஸ்ஏ ரேடார், ஃபாள்நாக்ஸ் மற்றும் சீரேம் சிஐடபுள்யூஎஸ், இருப்பதோடு இவை எதிர் தாக்குதல் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஃப்-15ஜெ

எஃப்-15ஜெ

உலகளவில் எஃப்-15ஜெ ரக விமானங்களை தயாரிக்கும் உரிமம் ஜப்பான் மட்டுமே வைத்திருக்கின்றது. இவ்வகை விமானம் தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகிஸுகி-கிளாஸ் டிஸ்ட்ராயர்

அகிஸுகி-கிளாஸ் டிஸ்ட்ராயர்

சக்திவாய்ந்த அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களுக்கு, ஜப்பான் அமெரிக்க ரேடார்களையே சார்ந்திருக்கின்றது. அகிஸூகி வகை போர் கப்பல்களில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடார் தொழில்நுட்பமானது இலக்கினை ஸ்கேன் செய்வதோடு, ட்ராக் செய்து தாக்கும் திறன் கொண்டவையாகும்.

டைப் 10 எம்பிடி

டைப் 10 எம்பிடி

அவசர காலங்களில் முக்கிய டேன்க்கரான டைப் 10 மேம்படுத்தப்பட்ட நெட்வர்க்கிங், மற்றும் அதி நவீன போர் கவசமாகவும் இருக்கின்றது. இதை முன்வைத்து இந்த டேன்க்கரில் தாக்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சி41 எனும் அம்சமானது தகவல்களை மற்ற டேன்க்கர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றது.

கவாசக்கி பி-1

கவாசக்கி பி-1

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக கடல்சார் போர் விமானம் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை ட்ராக் செய்யும் திறன் கொண்ட விமானங்களை ஜப்பான் மட்டுமே வைத்திருக்கின்றது. இலக்குகளை குறி தவராமல் தாக்கும் சர்ச் அன்டு ட்ராக் தொழில்நுட்பம் கொண்ட இந்த வகை விமானங்கள் நீண்ட தூரம் பயணிப்பதோடு 9 டன் எடை கொண்ட ஆயுதங்களை சுமக்கும்.

மிட்சுபிஷி எஃப்-2

மிட்சுபிஷி எஃப்-2

இந்த வகை போர் விமானமானது மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கின்றது. இதன் கிளாஸ் காக்பிட் 3 பெரிய மல்டி பன்க்ஷனல் டிஸ்ப்ளே கொண்டிருக்கின்றதால் கடுமையான தாக்குதல்களில் மிகவும் சிறப்பாக செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடாகோ கிளாஸ் டிஸ்ட்ராயர்

அடாகோ கிளாஸ் டிஸ்ட்ராயர்

வாண்வெளி தாக்குதல்களை சமாளிப்பதோடு, நீர்மூழ்கி தாக்குதல்களை கண்டறியும் அதிநவீன சென்சார்களையும் அடோகோ கிளாஸ் போர் கப்பல்கள் கொண்டிருக்கின்றது.

சோர்யூ கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்

சோர்யூ கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்

உலகின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் சோர்யூ வகை கப்பல்கள் அணுசக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
MOST POWERFUL Hi Tech WEAPONS OF THE JAPANESE MILITARY. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X