இந்த பெஸ்ட் திட்டங்களை தான் Jio மக்கள் அதிகமா ரீசார்ஜ் செய்றாங்களா? அடேங்கப்பா.! இவ்வளவு கம்மி விலையா?
ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்யப்பட்ட குறைந்த விலை பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Low Price Best Recharge Plans) இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.
இந்த திட்டங்கள் அனைத்தும் ரூ.300 விலைக்குள் தினசரி 1ஜிபி டேட்டா நன்மை உடன் கூடுதல் நன்மைகளை வழங்கும் திட்டங்களாகத் திகழ்கின்றன. இந்த பட்டியலில் உள்ள பெஸ்ட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ரூ. 300 விலைக்குள் மக்கள் அதிகம் ரீசார்ஜ் செய்த டெய்லி டேட்டா திட்டங்கள் இவை தானா?
உங்கள் பட்ஜெட்டிற்கு எந்த பாதிப்பும் வராமல், உங்கள் பாக்கெட்டில் ஓட்டை விழாமல் மிகவும் சிக்கனமாகத் தினமும் 1ஜிபி டேட்டா வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயம் இந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பார்க்க வேண்டும்.
இந்த ரீசார்ஜ் திட்டங்கள் ஏறக்குறைய உங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான டேட்டா நன்மை, வாய்ஸ் கால் நன்மை மற்றும் SMS நன்மையை வழங்குகிறது. இத்துடன் ஜியோவின் இலவச நன்மைகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ. 149 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு வெறும் 149 ரூபாய் விலையில் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையுடன் வருகிறது.
இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் வருகிறது. தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டம் 20 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds போன்ற இலவச நன்மைகளுடன் வருகிறது.

ஜியோ ரூ. 179 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்குத் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வெறும் 179 ரூபாய் விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டம் 24 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds போன்ற இலவச நன்மைகளுடன் வருகிறது.

ஜியோ ரூ. 209 திட்டம்
இந்த ரீசார்ஜ் திட்டம் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் போல் இல்லாமல், 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவின் மற்ற திட்டங்கள் 20 நாள் மற்றும் 24 நாள் வேலிடிட்டி உடன் வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் வருகிறது. இதுவும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds போன்ற இலவச நன்மைகளுடன் வருகிறது.

ஜியோ ரூ. 299 திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வெறும் 299 ரூபாய் விலையில் வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS நன்மைகளுடன் வருகிறது.
இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதல் இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.

ஜியோ ரூ. 296 திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு தினசரி டேட்டாவை வழங்காது ஆனால், ஒட்டுமொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு ஒரு முழு மாதத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
அதாவது இந்த திட்டம் 30 நாள் நீடிக்கும் முழுமையான 1 மாத வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.
இலவச நன்மைகளாக இத்துடன் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioClouds நன்மைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications