மைக்கில் ஜாக்ஸனை மறக்காத கூகுள்..!
நமக்கு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அல்லது ஏதாவது மறந்து விட்டது அதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாம் நேராக கூகுள் உதவியை நாடுவோம், அப்படித்தானே..!
இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!
சில நேரம் கூகுள் எந்த கேள்வியையும் கேட்காமல் சில முக்கியமான விடயங்களையும், முக்கியமான நாட்களையும் ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கும். அது என்ன என்று ஞாபகத்திற்கு வருகிறதா..??? அது தான் கூகுள் டூடல்..!

அடிக்கடி :
கூகுள், தன் தேடுபொறி வலைதளத்தில், அடிக்கடி கூகுள் டூடுல் வடிவமைத்து, சில முக்கியமான நிகழ்வுகளையும், மறக்க முடியாத மனிதர்களையும், சிறப்பான நாட்களையும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்..!

மறக்க முடியாத :
அப்படியான கூகுள் டூடுலில் மிகவும் சிறந்த சில மறக்க முடியாத கூகுள் டூடுல்களை தான், பின் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..!

மைக்கில் ஜாக்ஸன் :
பாப் ஸ்டார் மைக்கில் ஜாக்ஸன் இறந்த சில மாதங்கள் கழித்து வெளியான கூகுள் டூடுல்..!

வீடியோ கேம் :
பாக் மேன் (Pac-Man) வீடியோ கேமின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா கூகுள் டூடுல்..!

மொழி :
பார்வையற்றவர்களின் மொழியான 'ப்ரேயிலி'யை (Braille) உருவாக்கிய லுயிஸ் ப்ரேயிலியின் 197-வது பிறந்த தினம் அன்று வெளியான கூடுள் டூடுல்..!

பறக்கும் தட்டு :
யூஎஃப்ஓ (UFO) எனப்படும் வேற்றுகிரக வாசிகாளின் பறக்கும் தட்டை உருவாக்கிய எச்ஜி வெல்ஸ்-ன் (HG Wells) 143-வது பிறந்தநாள் அன்று வெளியான கூகுள் டூடுல்..!

இறுதிப்போட்டி ":
2010-ஆம் ஆண்டு ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி அன்று வெளியான கூகுள் டூடுல்..!

நிகழ்ச்சி :
பிரபல கார்ட்டூன் கதையான ப்லின்ஸ்டோன்ஸ் (Flintstones) நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு 50-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளியான கோகுள் டூடுல்..!

தொலைநோக்கி :
தொலைநோக்கி கண்டுப்பிடிக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் வெளியான கூகுள் டூடுல்..!

சார்லஸ் டார்வின் :
இயற்கையியலாளர் ஆன சார்லஸ் டார்வின் அவர்களின் 200வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் வெளியான கூகுள் டூடுல்..!

பை :
கணித்த்தில் பயன்படுத்தப்படும் விகிதாச்சாரம் - பை (3.14), அதை சிறப்பிக்கும் நாளான 'பை டே' (Pi Day) அன்று வெளியான கூகுள் டூடுல்..!


Click it and Unblock the Notifications