Home
News

ஒரு புது உலகம்.. GTA 6-க்கு தேதி குறிச்சாச்சு.. 12 வருட காத்திருப்பு.. இப்போது நேரம் வந்துவிட்டது.. தேதி லீக்!

ஒட்டுமொத்த கேமிங் உலகமும் 12 வருடங்களாக எதற்காக காத்து கொண்டிருந்ததோ அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. ராக்ஸ்டார் கேம்ஸ் (Rockstar Games) நிறுவனத்தின் ஜிடிஏ 6 (GTA 6) வெளியீட்டு தேதி கசிந்துள்ளது. ஏற்கனவே, 2025ஆம் ஆண்டில் வெளியாவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டதால், இந்த தேதி கேமிங் பிரியர்களுக்கு திருவிழா தேதியை போல மாறிவிட்டது. இந்த ஜிடிஏ 6 எப்போது வெளியாகிறது? விலை எப்படி இருக்கும்?

கேமர்கள் மட்டுமல்ல, கேமிங் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் கிராண்ட் தெப்ட் ஆட்டோ - ஜிடிஏ (Grand Theft Auto - GTA) பற்றி தெரியாமல் இருக்காது. இந்த கேமின் முதல் வெர்ஷன் 1997ஆம் ஆண்டு வெளியாகியது. ஓரிரு ஆண்டுகளில் மிகப்பெரும் கவனம் பெற்றது. முதல் வெர்ஷனுக்கு பிறகு ஜிடிஏ லண்டன் 1969 (GTA London 1969), லண்டன் 1961 (London 1961) என்று வர தொடங்கியது.

ஒரு புது உலகம்.. GTA 6-க்கு தேதி குறிச்சாச்சு.. 12 வருட காத்திருப்பு!

பிறகு கிராண்ட் தெப்ட் ஆட்டோ 1, கிராண்ட் தெப்ட் ஆட்டோ 2 என்றும் அடுத்தடுத்து வெளியாகின. இருப்பினும், உலகளவில் கவனம் பெறவில்லை. ஆனால், 2002ஆம் ஆண்டு வெளியான ஜிடிஏ வைஸ் சிட்டி (GTA Vice City) கேமானது, பட்டி தொட்டியெங்கும் இருக்கும் கேமிங் பிரியர்களின் கனவு விளையாட்டாக மாறியது. அப்போதுதான், பிளேஸ்டேஷன் வளர்ச்சியும் அதிகரித்தது.

இதற்கு அடுத்து வந்த ஜிடிஏ சான் ஆண்ட்ரியாஸ் (GTA San Andreas) கேமுக்கு இந்தியாவிலேயே மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. இதிலிருந்து ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் ஜிடிஏ சீரிஸ்கள் உலகளவில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறின. இந்த ஜிடிஏ கேமை விளையாடுவதற்கே பிளேஸ்டேஷன் வாங்கும் அளவுக்கு இந்தியாவில் ரசிகர்கள் இப்போது இருக்கிறார்கள்.

இப்படி ஜிடிஏ 4 (GTA IV), ஜிடிஏ 5 (GTA 5) அடுத்தடுத்து வந்த கேம்கள் இன்றளவும் விளையாடப்படுகின்றன. அதிலும், ஜிடிஏ 5 கேமானு, ரியல்-வேர்ல்டு கேமிங்கில் புது அனுபவத்தை கொடுத்து ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இந்த ஜிடிஏ 5 கேமானது, 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகியது. இப்போது, 12 ஆண்டுகள் கடந்தும், டாப் சேல் லிஸ்ட்டில் இது இருக்கிறது.

இதனிடையே ஜிடிஏ 6 கேம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், புது கேமிங் உலகுக்கு தயாராக இருங்கள் என்றும் ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், பல வருடங்களுக்கு முன்பே இதை சொல்லி, 2025ஆம் ஆண்டுதான் அது வெளியாகும் என்றும் தெரிவித்தது. இருப்பினும், ஜிடிஏ பிரியர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருந்தனர்.

இவர்களை 2024ஆம் ஆண்டு வெளியான ஜிடிஏ 6 ட்ரெய்லர் மேலும் தூண்டிவிட்டது. ஏனென்றால், 12 வருடங்களுக்கு முன்பு வெளியான ஜிடிஏ 5 கேமே ரியல்-வேர்ல்டு அனுபவத்தில் புதிய மைல்கல்லை எட்டியது. அந்த கேமைவிட 100 மடங்கு ரியல்-வேர்ல்டு கிராபிக்ஸ்களை இந்த ஜிடிஏ 6 கொண்டிருந்தது, இதனால், எதிர்பார்ப்பும் பல மடங்கு உயர்ந்தது.

2025ஆம் ஆண்டில் வெளியாவது உறுதி செய்யப்பட்டாலும், விலை மற்றும் எந்த தேதியில் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்படவில்லை. இப்போது, ஆன்லைனில் தேதி மற்றும் விலை விவரங்கள் கசிந்து, மீண்டும் ஜிடிஏ மோகத்தை தூண்டி விட்டிருக்கிறது. இந்த ஜிடிஏ 6 வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்த மாதத்தில் 17ஆம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், ஜிடிஏ 5 அதே மாதம் மற்றும் தேதியில் வெளியாகியது. ஆகவே, இதே தேதியில் ஜிடிஏ 6 வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த கேமின் விலை 100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,659) ஆக இருக்க வாய்ப்புள்ளதாம், இந்தியாவில் மாற்றம் இருக்கும்.

Image Credit: Rockstar Games

More from GizBot

Best Mobiles in India

English summary
Most Long Awaited Rockstar Games GTA 6 Release Date Tipped May Launch On September Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X