ஆபத்துக்கு அதிக வாய்ப்பு- பூமியை நோக்கி வரும் சிறுகோள்- எப்போது பூமியை மோதும்?

|

நாசாவின் தகவல்படி பென்னு என்று சிறுகோள் 2135 ஆம் ஆண்டு பூமியுடன் மிக நெருக்கமான அணுகுமுறையை உண்டாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளின் பாதையை விஞ்ஞானிகள் நுட்பமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவு

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவு

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுகோள் பென்னு என அழைக்கப்படுகிறது. இது அபாயகரமான பொருள் என்பதை வகைப்படுத்தப்படுகிறது. விஞ்ஞானிகள் கணிப்புப்படி 2021 மற்றும் 2300-க்கு இடையில் பூமியை நெருங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் 1750-களில் இதுவும் ஒன்றாகும்.

கிரக பாதுகாப்பு பணி

கிரக பாதுகாப்பு பணி

நாசா 2135ல் மோதக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. நாசாவின் கிரக பாதுகாப்பு பணி பூமிக்கு அருகில் வரக்கூடிய சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கலை கண்டறிந்து கண்காணிப்பதே நமது கிரகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என வாஷிங்டனில் இருக்கும் நாசா தலைமையகத்தின் பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் கண்காணிப்பு திட்டத்தின் திட்ட மேலாளர் கெல்லி ஃபாஸ்ட் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அறியப்படாத பொருட்களை கண்டறிந்து அவற்றின் சுற்றுப்பாதைகளையும் தொடர்புகளை கண்டறியும் வானியல் ஆய்வுகளை மேற்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பூமிக்கு நெருக்கமான அணுகுமுறை

பூமிக்கு நெருக்கமான அணுகுமுறை

பென்னு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பூமிக்கு நெருக்கமான அணுகுமுறையை உருவாக்கும்., அப்போது அது எங்கு இருக்கும் என்பதை நன்கு கணிக்கு மிஷன் உதவுகிறது என OSIRIS-REx என்ற மிஷன் உதவுவதாக கூறப்படுகிறது.

நாசா தகவல்படி, பென்னு என்ற சிறுகோள் 2135 ஆம் ஆண்டில் பூமியுடன் நெருக்கமான அணுகுமுறையை ஏற்படுத்தும். பூமிக்கு அருகில் உள்ள பொருள் அந்த நேரத்தில் நமது கிரகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும் அந்த சந்திப்பின் போது பென்னுவின் சரியான பாதையை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியீர்ப்பு சூரியனை சுற்றியுள்ள சிறுகோளின் பாதையை எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றும்.

டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர் மாடல்

டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர் மாடல்

நிறுவனம் தனது டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர் மாடல்களை பயன்படுத்தி பென்னுவின் சுற்றுப்பாதையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை கணிசமாக குறைக்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பென்னு நமது சூரிய மண்டலத்தில் மிகவும் ஆபத்தான இரண்டு சிறுகோள்களில் ஒன்றாகும்.

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம்

விண்கலன் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

பில்லியன் கணக்கில் சிறு கற்கள்

பில்லியன் கணக்கில் சிறு கற்கள்

எரிகல் அல்லது எரி நட்சத்திரம் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிர்ந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள்

சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருக்கும் கற்கள் சில நேரங்களில், வியாழனின் ஈர்ப்பு விசை காரணமாக உள் சூரிய மண்டலத்தை நோக்கி பயணிக்கிறது, அதில் சிலவற்று பூமியை அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Most Hazardous Bennu Asteroid May Hitting Earth on 2135

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X