Subscribe to Gizbot

வாவ் சொல்ல வைக்கும் சூப்பர் சுட்டிஸ்

Posted By: Muthuraj

யாருக்கு பிள்ளையாக பிறந்தோம், எந்த குலத்தில் பிறந்தோம், அமாவாசையில் பிறந்தோமா அல்லது செவ்வாய்க்கிழமை பிறந்தோமா என்பதெல்லாம் கணக்கே இல்லை, எல்லோரும் சாதிக்க பிறந்தவர்கள்தான் அதை நம்பி உணர்ந்துவிட்டால் போதும், கடவுளின் நேரடி வாரிசாகிவிடலாம்.

சென்னையை சேர்ந்த கூகுள் துணை தலைவர் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்

அந்த உணர்தலை மிக இளம் வயதிலேயே பெற்று கடவுளின் குழந்தைகளாக கருதப்படும் குட்டி மேதாவிகளை கண்டுதான் இங்கே வியக்கவிருக்கிறோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ப்ரியான்ஷி சோமானி

ப்ரியான்ஷி சோமானி

இந்தியாவைச் சேர்ந்த இச்சிறுமி ஒரு மென்டல் கால்குலேட்டர். இதுவரை கலந்து கொண்ட 5
மென்டல் கால்குலேட்டர் உலக சாம்பியன்ஷிப்பிலும் 100% துல்லியத்தை பதிவு செய்த ஒரே
போட்டியாளர். நம்மூர் புள்ள, பெருமைப் பட்டுக்கோங்க..!

எலைனா ஸ்மித்

எலைனா ஸ்மித்

உலகின் மிக இளம் ஒளிபரப்பாளர். பிரட்டனைச் சேர்ந்த இச்சிறுமி உள்ளூர் ரேடியோ ஒன்றில்
வாராவாரம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு
அறிவுரையும், தீர்வும் வழங்கி வரும் - அந்த ஊர் ஐடியா மணி..!

மைக்கேல் கெவின் கெர்னே

மைக்கேல் கெவின் கெர்னே

பிறந்த நான்கே மாதங்களில் பேச தொடங்கி, 10 மாதங்களில் வார்தைகளை படிக்க ஆரம்பித்த
இச்சிறுவன்தான் உலகின் இளம் பட்டதாரி.

க்ரிகொரி ஆர் ஸ்மித்

க்ரிகொரி ஆர் ஸ்மித்

12 வயதிலேயே நோபல் பரிசு பெற்ற அமெரிக்கரான இவர், பிறந்த 14 மாதங்களில் மனப்பாடம்
செய்து ஒப்புவிக்கும் திறனைப் பெற்றிருந்தார்

சால் ஆரோன் க்ரிப்கீ

சால் ஆரோன் க்ரிப்கீ

6 வயதில் பண்டைய கால ஹிப்ரூ மொழியை தாமாகவே கற்று, தன் ஒன்பதாம் வயதில்
ஷேக்ஸ்ப்பியரின் அத்துணை படைப்புகளையும் படித்து முடித்த நியூயார்க்காரர் இவர்.

எலிட்டா ஆன்ரே

எலிட்டா ஆன்ரே

9 மாத குழந்தையாக இருக்கும்போதே கைகளில் தூரிகையை எடுத்து ஒவியம் பழகிய இந்த
ஆஸ்த்திரேலிய குட்டி தேவதை, 2 வயதில் தன் ஒவியங்களை காட்சிப்படுத்தினாள்.

கிளியோபாட்ரா ஸ்ட்ராடன்

கிளியோபாட்ரா ஸ்ட்ராடன்

3 வயதிலேயே ஒரு பாட்டுக்கு 1000 யூரோக்கள் வாங்கும் இளம் பாடகி. மொல்டோவாவை
சேர்ந்த இச்சிறுமிதான் மிக இளம் வயதிலேயே எம் டிவி விருது பெற்றவராவார்.

அர்ஃபா கரீம்

அர்ஃபா கரீம்

பாகிஸ்தானை சேர்ந்த இச்சிறுமி ஒரு கம்ப்யூட்டர் மேதை, 9 வயதிலேயே மைக்ரோசாப்ட்
நிறுவனத்தில் இணைந்த இவரை பில் கேட்ஸ்சே, மைக்ரோசாப்ட் தலைமையகத்துக்கு வர
அழைப்பு விடுத்தார். இவர் தன் பதினாறாம் வயதில் மரணமடைந்தார் என்பது
வருத்தத்திற்க்குரியது.

அக்ரிட் ஜஸ்வால்

அக்ரிட் ஜஸ்வால்

உலகின் மிக ஸ்மார்ட் பாய், இந்தியாவைச் சேர்ந்த இச்சிறுவனின் ஐ.க்யூ லெவல் 146 ஆகும்.

கிம் உங் யாங்

கிம் உங் யாங்

1962-ல் கொரியாவில் பிறந்த இவரின் ஐ.க்யூ லெவல் 210, இதுதான் இன்றுவரை கின்னஸ் சாதனை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Check out here some most genius kids. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot