Home
News

உலகளவில் மாஸ் "Delete".. 2023ல் அதிகமாக டெலீட் செய்யப்பட்ட Mobile App-ஸ்கள்.. ரேங்கிங்கில் யார் ஃபர்ஸ்ட்?

இந்த 2023ம் ஆண்டில் உலகளவில் அதிகமாக ஸ்மார்ட்போன்களில் இருந்து டெலீட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ் பற்றிய விபரங்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உண்மையில், நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள ஆப்ஸை நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் என்பதே ஷாக் மக்களே.

உலகளவில் இப்போது சுமார் 4.8 பில்லியன் மக்கள் சமூக வலைத்தளங்களை (Social media) தொடர்புடைய மொபைல் ஆப்ஸ்களை (Mobile App) பயன்படுத்துகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் கணக்கெடுப்பு விபரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, சராசரியாக, 6 முதல் 7 பயனர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 மணிநேரம் 24 நிமிடங்கள் அவர்களுக்கு பிடித்த சமூக ஊடகத்தை பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

உலகளவில் மாஸ்

என்னதான் மக்கள் தினமும் சில குறிப்பிட்ட நேரம் சமூக ஊடகங்களில் அவர்களுடைய நேரத்தை செலவழித்தாலும், சமூக ஊடகங்களின் தடம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே மறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. உண்மையை சொல்ல போனால், இந்த ஆண்டில் ஜூலை 2023 இல் பேஸ்புக் (Facebook) 100 மில்லியன் புதிய பயனர்களை அதன் தளத்தில் பெற்றுள்ளது.

ஆனால், புதிய பயனர்களை பெற்ற அடுத்த 5 நாட்களில் நிறுவனம் 80% சரிவை கண்டுள்ளது. பேஸ்புக் ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்தியவர்கள் 5 நாட்களுக்குள் அதை உடனே டெலீட் (Delete) செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. 100 மில்லியன் என்பது பெரியளவு சரிவாக பார்க்கப்படுகிறது. இதேபோல், மற்ற மிகவும் பிரபலமான தளங்களில் இருந்தும் மக்கள் தங்கள் தடத்தை அழிக்க முயன்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவலின் படி, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தை உலகளவில் பல பில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். இன்ஸ்டாகிராம் தளத்திற்குள் புதிதாக வந்தவர்களில் பலர், எப்படி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட்டை டெலீட் (How to delete Instagram account) செய்வதென்று கூகுள் (Google) மற்றும் பிற வெப் பிரௌசர்களில் சர்ச் (Web browser search) செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகளவில் மாஸ்

இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் சுமார் 1 மில்லியன் எண்ணிக்கையை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உலகளவில் 1,00,000 நபர்களுக்கு 1சுமார் 2,500-க்கும் மேற்பட்ட தேடல்களை பதிவு (Search History) செய்துள்ளது. இதை வைத்து பார்க்கையில், இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் (Instagram Apps) இந்த ஆண்டில் அதிகமுறை டெலீட் செய்யப்பட்ட மொபைல் ஆப்ஸாக இருக்கிறது. உலகளவில் பல கோடி மக்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், உலகவில் அதிகமாக டெலீட் செய்யப்பட்ட ஆப்ஸ்களின் ரேங்கிங் விபரங்கள் (Most deleted mobile apps in 2023) இப்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த 2023ம் ஆண்டில் அதிகமாக டெலீட் செய்யப்பட்ட மொபைல் ஆப்ஸ்களின் பட்டியல் இதோ..

9. வீசாட் (WeChat)
8. வாட்ஸ்அப் (WhatsApp)
7. டிக்டாக் (TikTok)
6. யூடியூப் (YouTube )
5. பேஸ்புக் (Facebook)
4. டெலெக்ராம் (Telegram)
3. டிவிட்டர் அல்லது எக்ஸ் (Twitter or X)
2. ஸ்னாப்சாட் (Snapchat)
1. இன்ஸ்டாகிராம் (Instagram)

இந்த ஆண்டில் அதிகமான பயனர்கள் டெலீட் செய்த ஆப்ஸ்கள் ரேங்கிங் (Most deleted mobile apps ranking details) விபரங்கள் இப்படி தான் அமைந்துள்ளது என்று அமெரிக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பயனர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக அவர்களின் சாதனங்களில் இருந்த ஆப்ஸ்களை டெலீட் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. உங்கள் போனில் உள்ள எந்த ஆப்ஸை நீங்கள் டெலீட் செய்ய நினைக்கிறீர்கள் மற்றும் அதன் காரணத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Most Deleted Mobile App In 2023 Instagram Facebook WhatsApp Snapchat Twitter X WeChat YouTube
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X