உங்ககிட்ட Candy Crush கேம் இருக்கா? கதை முடிந்தது! Carrom Pool மட்டும் சும்மாவா? வெளியான பகீர் அறிக்கை!
நீங்கள் நாள்தோறும் விளையாடும் டாப் கேமிங் ஆப்ஸ் (Gaming Apps) உங்களுக்கு தெரியாமலேயே உங்களது போன்களில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை விபிஎன் (VPN) சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான சர்ப்ஷார்க் (Surfshark) புட்டுப்புட்டு வைத்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களை பார்த்தால், "இவ்வளவு நாளா இது தெரியாமல் இருந்துட்டோமே" என்று நினைக்க வைக்கிறது.
இதுகுறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் விளையாடும் கேமிங் ஆப்ஸ்களில், லுடோ கிங் (Ludo King), சப்வே சர்ஃபர்ஸ் (Subway Surfers), கால் ஆஃப் டூட்டி மொபைல் (Call of Duty Mobile), கேண்டி க்ரஷ் சாகா (Candy Crush Saga), கேரம் பூல் டிஸ்க் கேம் (Carrom Pool Disc Game) ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.

இந்த கேம்ஸ்களை யாராவது தங்களது போன்களில் வைத்திருந்தால், அவர்கள் அந்த கேம்ஸ்களை ஒரு நாள் கூட விளையாடாமல் வைத்திருக்க மாட்டார்கள். ஏன்? நீங்களே கூட கேண்டி க்ரஷ் சாகா, கேரம் பூல் டிஸ்க் கேம், சப்வே சர்ஃபர்ஸ் கேம்களில், ஏதாவதொரு கேமை கண்டிப்பாக விளையாடி இருக்க வாய்ப்புள்ளது அல்லது இன்றும் விளையாடி கொண்டிருக்கலாம்.
இப்படி 8 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கூறிய கேம்கள், மக்களின் மொபைல் போன்களைவிட்டு பிரித்து பார்க்க முடியாத உச்சத்துக்கு சென்றுவிட்டன. சொல்லப்போனால், பல பேர் இந்த கேம்களுக்கு அடிமையாக கூட இருப்பார்கள். கொஞ்சம் ப்ரீ டைம் கிடைத்தாலும், மொபைலை எடுத்து விளையாட தொடங்கி விடுவார்கள். இந்த கேம்ஸ்கள் வெளியில் பார்ப்பதற்கு உங்களுக்கு சாதரணமாக தோன்றலாம்.
ஆனால், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் டேட்டா (Mobile Data) மற்றும் பர்சனல் டேட்டாவில் (Personal Data) அந்த கேம்ஸ்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்தப் புள்ளிவிவரங்களை விபிஎன் சர்வீஸ் புரொவைடர் நிறுவனமான சர்ப்ஷார்க் வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் (Googe Play Store) கிடைக்கும் கேமிங் ஆப்களில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் டாப் 50 ஆப்ஸ் குறித்து சர்ப்ஷார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அதில், கால் ஆஃப் டூட்டி மொபைல், கேண்டி க்ரஷ் சாகா, கேரம் பூல் டிஸ்க் கேம் ஆகிய 3 கேம்களும் மோசமான தனியுரிமை கொள்கைகளை கொண்டுள்ள கேம்ஸ் வரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்த கேம்கள் மூலம் அந்த கேம் விளையாடுபவரின் போனில் இருக்கும் போட்டோஸ் (photos), வீடியோஸ் (videos), கான்டாக்ட் (contact) மற்றும் லொகேஷன் (location) தகவல்கள் எளிதில் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நீங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, கல்லூரியிலோ என எங்கெல்லாம் அந்த கேம்களை விளையாடுவீர்களோ அந்த இடங்களின் லொகேஷன் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இதையடுத்து மொபைல் டேட்டாவை அதிகம் சுரண்டும் ஆப்ஸ்களின் பட்டியலில் சப்வே சர்ஃபர்ஸ் 7ஆவது இடத்திலும், லுடோ கிங் 38ஆவது இடத்திலும் உள்ளது.
குறிப்பாக சப்வே சர்ஃபர்ஸ் உங்களது டேட்டா பயன்பாட்டில் மூன்றில் ஒரு பங்கு டேட்டாவை சுரண்டுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








