மாணவர்களுக்கான சூப்பர் Laptop கம்மி விலையில் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
இந்தியாவில் கொரோனாவின் வரவுக்கு பின்னர் கல்வியில் ஆன்லைன் வகுப்புகளின் பங்களிப்பு அதிகரித்து விட்டது என்றே கூறலாம். இந்த ஆன்லைன் வகுப்புகள் மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது போல ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
இதற்கு காரணம் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஸ்மார்ட் போன் (Smart Phone), லேப்டாப் (Laptop) போன்ற உபகரணங்கள் இல்லாததே. சில மாநில அரசுகள் ஏழை மாணவர்களின் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலவசமாக அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்கினர்.

மாணவர்களுக்கான கம்மி விலை Laptop சாதனம் Primebook 4G!
இன்றைய சூழ்நிலையில் கல்விக்கு தொழில்நுட்பம் மிகவும் அத்தியாவசியம் என்பதையும், அது ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பது மிகவும் கடினமானதாக இருப்பதையும் உணர்ந்த டெல்லி IITயின் முன்னால் மாணவர்கள் அமன் வெர்மா (Aman Verma) மற்றும் சித்ரான்சு மகந்த் (Chitranshu Mahant) என்பவர்கள் மலிவான விலையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் லேப்டாப் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
ப்ரைம்புக் 4ஜி (Primebook 4G) என்று பெயர் சூட்டப்பட்டு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இந்த லேப்டாபானது இந்தியாவில் வரும் மார்ச் 11ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த ப்ரைம்புக் 4ஜி லேப்டாப், 11.6 இன்ச் 720p HD IPS டிஸ்பிலே மற்றும் தொடுவதற்கு மிருதுவான மூடியையும், பிளாஸ்டிக்கால் (Plastic) உருவாக்கப்பட்ட வெளிப்புறத்தை கொண்டுள்ளது.

ப்ரைம்புக் 4ஜி (Primebook 4G) உள்ள அம்சங்கள் என்னென்ன?
மீடியாட்டிக் எம்டி8788 (MediaTek MT8788) சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆண்ட்ராய்டு ப்ரைம்புக் 4ஜி லேப்டாப் 4ஜிபி RAM மற்றும் 64 ஜிபி சேமிப்பு அம்சத்தை கொண்டுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டை (MicroSD) பயன்படுத்தி சுமார் 128 ஜிபி வரை இந்த லேப்டாப்பின் சேமிப்பை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும்.
ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ராஜெக்ட் (Android Open Source Project) கொண்டு உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 11 தளத்தில் இயங்கும் ப்ரைம்புக் 4ஜி லேப்டாப்பில் ஸ்மார்ட் போனை போல எங்கு வேண்டுமானாலும் இணைய வசதியை பயன்படுத்தவும், அழைப்புகளை செய்து கொள்ளவும் வசதியாக பிரத்தியேகமான சிம்கார்டு ஸ்லாட்டும் (Sim Card Slot) கொடுக்கப்பட்டுள்ளது.

Primebook 4G லேப்டாப் விலை என்ன? எப்போது முதல் வாங்கலாம்?
இத்துடன் சேர்த்து இந்த ப்ரைம்புக் 4ஜி லேப்டாப்பில் வை-ஃபை (Wi-Fi) ப்ளூடூத் 5.0 சப்போர்ட் (Bluetooth 5.0 Support) மற்றும் 2 எம்பி வெப் கேமராவும் (2MP Web Camera) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டவுன்வார்ட் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Downward Firing Speakers), இரண்டு மைக்ரோஃபோன்கள் (Microphone), இரண்டு யூஎஸ்பி போர்ட்கள் (USB port), ஒரு மினி ஹச்டிஎம்ஐ போர்ட் (HDMI port) ஆகியவையும் இந்த லேப்டாப்பில் உள்ளன.
கருப்பு மற்றும் நீளம் என்று இரண்டு நிறங்களில் வரும் இந்த ப்ரைம்புக் 4ஜி லேப்டாப் ரூ. 16,990 என்ற அறிமுக விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. பிரத்தியேகமாக ப்ளிப்கார்ட் (Flipkart) தளம் ரூ. 14,990-க்கு தள்ளுபடி விலையில் இந்த லேப்டாப்பை விற்பனை செய்ய உள்ளது. மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ (No cost EMI) மூலமும் இந்த லேப்டாப்பை வாங்கி பயன்படுத்தலாம்.
இந்தியாவில் ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சுமார் 23 கோடிக்கு மேலான குழந்தைகளிடம் அந்த ஆன்லைன் வகுப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள லேப்டாப்புகள் இல்லை. மலிவான விலைக்கு இப்படி லேப்டாப்பை விற்பனை செய்வதன் மூலம் கல்விக்காக செலவிடும் தொகையில் 85% குறையும் என்று இந்த பிரைம் புக் 4ஜி லேப்டாப்பை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








