Jio, Airtel, Vi, BSNL: கம்மி விலையில் லாபகரமான 1 வருட திட்டம்.. ஆண்டுக்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்
நீங்கள் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன்-ஐடியா (Vi) அல்லது பிஎஸ்என்எல் (BSNL) என்று எந்த டெலிகாம் ஆப்ரேட்டரின் பயனராக இருந்தாலும் சரி, இந்த பதிவு உங்களுக்கானது. கம்மி விலையில் எப்படி ஒரு வருட வேலிடிட்டியுடன் அட்டகாச நன்மைகளை பெறுவது என்ற விபரத்தை பார்க்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டூயல் சிம் கார்டு ஸ்லாட்டுகளுடன் வருகின்றன. சில போன்கள் ஃபிசிக்கல் ஸ்லாட்டுகளுடனும், சிலவை eSIM ஆதரவையும் கொண்டுள்ளன. இரண்டு சிம் கார்டுகளை கம்மி செலவில் பராமரிக்க முடியாமல் சிலர் தத்தளித்து வருகின்றனர். ஆனால், கொஞ்சம் சாமர்த்தியமாக யோசித்தால் கம்மி விலையில் ஒரு வருடம் முழுக்க நன்மையை அனுபவிக்க ஒரு சூப்பர் வழி இருக்கிறது என்ற உண்மையை தான் உங்களுக்கு சொல்லித்தரப்போகிறோம்.

வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும், 365 நாட்களுக்கு அட்டகாசமான நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம். நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டம் என்றால் விலை அதிகம் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால், இங்குள்ள திட்டங்கள் அணைத்தும் மலிவான விலையில் வருகிறது. மலிவு விலையா? என்று நீங்கள் கேள்வி கேட்கலாம்.
மாதம் தவறாமல், தனித்தனியாக நீங்கள் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தின் விலையைவிட, ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்களை ரீசார்ஜ் செய்வது மிகவும் லாபகரமானது. சரி, இப்போது குறைந்த செலவில் எப்படி ஏர்டெல், ஜியோ, விஐ மற்றும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை அதிக நன்மையோடு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. ஏர்டெல் இன் மிகவும் மலிவான 1 வருட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Most Affordable 1 Year Airtel Prepaid Recharge Plan):
ஏர்டெல்லின் ரூ.1,799 ரீசார்ஜ் திட்டம் சிறந்த பலன்களுடன் வருகிறது. இதில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, 3,600 எஸ்எம்எஸ் மற்றும் 24ஜிபி 4ஜி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டமானது ஒரு மாதத்திற்கு ரூ.150க்கு குறைவான செலவில் வருகிறது. இது Wynk மியூசிக் மற்றும் ஹலோ ட்யூன்களுக்கான இலவச அணுகல் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
2. ஜியோவின் மலிவான 1 வருட ரீசார்ஜ் திட்டம் (Most Affordable 1 Year Jio Prepaid Recharge Plan):
இந்த திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. அதாவது, இது 11 மாதங்கள் செல்லுபடியாகும். இது 24ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 3,600 SMS (ஒரு நாளைக்கு 100 மட்டுமே) ஆகியவற்றை வழங்குகிறது. இதில் கூடுதலாக இலவச 5G டேட்டாவும் கிடைக்கிறது. இது தவிர, இந்தத் திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.
3. பிஎஸ்என்எல் இன் மிகவும் மலிவான 1 வருட ரீசார்ஜ் திட்டம் (Most Affordable 1 Year BSNL Prepaid Recharge Plan):
அரசுக்கு சொந்தமான BSNL ப்ரீபெய்டு பயனர்களுக்கு மிகவும் மலிவு விலையில் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. இது ரூ.1,251 விலையில், மாதத்திற்கு 0.75 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மீண்டும், குறைந்தபட்ச தொகையை செலவழித்து தங்கள் தொலைபேசி எண்ணை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது சிறந்த திட்டமாகும்.
4. Vi இன் மிகவும் மலிவான வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் (Most Affordable 1 Year Vi Prepaid Recharge Plan):
இந்த திட்டம் ரூ.1,799 விலையில் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஏர்டெல் போன்ற பலன்களை வழங்குகிறது. இதில் இலவச அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு, 24ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 3,600 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். கூடுதலாக, பயனர்கள் Vi மூவீஸ் மற்றும் டிவிக்கான அணுகலை இலவசமாக தருகிறது.
இந்த திட்டங்கள் மிகவும் குறைந்த விலையில் 365 நாள் வேலிடிட்டியை வழங்கி, ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் பயனை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








