Smart Tv-லாம் இனி வேஸ்ட்.. ரூ.10,000 விலைக்குள் 7 அடி பெரிய டிஸ்பிளே.. 5 பெஸ்ட் HD Projector இதோ..
வீட்டுக்கு வீடு ஸ்மார்ட் டிவி (Smart TV) இருப்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இப்போது சில வீடுகளில் ஸ்மார்ட் டிவிகளுக்கு பதிலாக எச்டி ப்ரொஜெக்டர்களை (Projector) மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ரூ.10,000 செலவில் உங்கள் வீட்டில் குட்டி தியேட்டரை உருவாக்கலாம்.
எல்லோரும் பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட் டிவியை அதிக காசு கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு சில சாமர்த்தியசாலிகள் மட்டும் குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவில் HD தரத்தில் படங்கள் பார்க்கும் அனுபவத்தை ருசித்து வருகிறார்கள். உண்மையை சொல்ல போனால், ஸ்மார்ட் டிவியை விட ப்ரொஜெக்டர்கள் பல வகையில் சிறப்பானதாக இருக்கிறது.

உதாரணமாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் டிவியை வால் மவுண்ட் செய்ய சுவர்களில் துளையிட வேண்டியதில்லை. டிஸ்பிளே அளவிற்கு ஏற்ப அதிக பணம் செலவிட வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் இருக்கும் வீட்டில் டிவி கீழே விழுந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் இருக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு புறம் பெரிய சுவர் இருந்தால் போதும். அதை நீங்கள் பெரிய டிவியாக மாற்றலாம்.
ஸ்மார்ட் டிவியை விட ப்ரொஜெக்டர் ஏன் சிறந்தது?
மற்றொரு சிறப்பம்சம் இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கையுடன் எடுத்து செல்லலாம். இப்போது குறைந்த விலையிலேயே HD அம்சத்தை ஆதரிக்கும் தரமான ப்ரொஜெக்டர்கள் எல்லாம் சந்தையில் வாங்க கிடைக்கிறது. வாங்க கிடைக்கும் பலதரப்பட்ட ப்ரொஜெக்டர் மாடல்களில் இருந்து சிறந்த மதிப்பெண்களை பெற்ற, முத்துபோன்ற பெஸ்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை உங்களுக்காக இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1. சியோமி எக்ஸ்மிங் கியூ3 நியோ ஃபுல் எச்டி ப்ரொஜெக்டர் (Xiaomi Xming Q3 Neo Full HD Projector):
இது இந்தியாவிற்குள் அடுத்த மாதம் களமிறங்கவிருக்கும் புதிய ப்ரொஜெக்டர் மாடல் ஆகும். இதில் இருக்கும் அம்சங்களுக்கு நிகர் எதுவுமே இல்லை என்று கூறலாம். ரூ.9,999 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் LCD ப்ரொஜெக்டர் மாடலாக இருக்கிறது. இது 1000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (Contrast Ratio) மற்றும் 230 lm உயர் பிரைட்னஸ் (Max. Brightness) உடன் வருகிறது. இது வயர்லெஸ் (Wireless Support) அம்சத்தை ஆதரிக்கிறது.
2. ஜாட்கோ யுவா பிளஸ் ஃபுல் எச்டி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (Wzatco Yuva Plus Full HD Portable Projector):
இது இப்போது அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரூ. 9,490 விலையில் வாங்க கிடைக்கிறது. இதுவும் LCD ப்ரொஜெக்டர் ஆகும். இது 4500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (Contrast Ratio) மற்றும் 6600 உயர் பிரைட்னஸ் (6600 lm Max. Brightness) உடன் வருகிறது. இது 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது.
3. ஜாட்கோ பிக்சல் எச்டி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் (Wzatco Pixel HD Portable Projector):
இது ஒரு போர்ட்டபிள் LCD ப்ரொஜெக்டர் மாடலாகும். இது 2000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (Contrast Ratio) உடன் வருகிறது. இது 2000 உயர் பிரைட்னஸ் (2000 lm Max. Brightness) அம்சத்தை ஆதரிக்கிறது. இது 1 வருட உத்திரவாதத்துடன் வெறும் ரூ.6,490 என்ற விலையுடன் அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது.
4. க்ரோவியூ 818சி ப்ரொஜெக்டர் (Groview 818C Projector):
இது LED ப்ரொஜெக்டர் மாடலாகும். இது அதிகப்படியாக 15000 உயர் பிரைட்னஸ் (15000 lm Max. Brightness) அம்சத்தை ஆதரிக்கிறது. இதில் இன்பில்ட் குரோம்காஸ்ட் (Chromecast) அம்சமும் உள்ளது. இதனால், உங்கள் போனில் இருக்கும் தகவலை நேரடியாக ப்ராஜெக்ட் செய்து மகிழலாம். இது வயர்லெஸ் ஆதரவுடன் ரூ.8,399 என்ற விலையுடன் 2 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது.
5. ஜெப்ரானிக்ஸ் ஜெப்-பிக்சல் பிளே 10 LED ஃபுல் எச்டி ப்ரொஜெக்டர் (Zebronics Zeb-PixaPlay 10 LED Full HD Portable Projector):
மிகவும் குறைந்த விலையில் போதுமான அம்சங்களுடன் ஒரு HD ப்ரொஜெக்டரை வாங்க விரும்புவோருக்கு இந்த LED ப்ரொஜெக்ட்ர் ஒரு சிறந்த தேர்வாகும். இது வெறும் ரூ.5,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ப்ரொஜெக்டர்களை உங்கள் வாங்கி, உங்கள் சாதாரண வீட்டை தியேட்டர் போல மாற்றுங்கள்.


Click it and Unblock the Notifications








