பென் ட்ரைவில் அருள்பாலிக்கும் கடவுள்கள்: தீபாவளி ஸ்பெஷல்!

By Super
|

பென் ட்ரைவில் அருள்பாலிக்கும் கடவுள்கள்: தீபாவளி ஸ்பெஷல்!
தீபாவளி கொண்டாட்டமாக கண்களை கவரும் புதிய புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்திறங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் மாஸர் பேயர் நிறுவனம் ஒரு புதிய பென் ட்ரைவை வடிவமைத்திருக்கிறது. நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்புகளை வழங்குவது எப்போதும் செய்யும் விஷயம் தான்.

மாஸர் பேயர் நிறுவனம் கனேஷா மற்றும் லக்ஷ்மியின் வடிவமைப்பை பென் ட்ரைவில் வழங்குகிறது. தீபாவளி திருநாளுக்கு ஒத்த வகையில் இந்த பென் ட்ரைவ்களின் வடிவம் பொருந்தி வருகிறது. இப்படி கனேஷாமற்றும் லக்ஷ்மி டாலர் போன்ற தோற்றமளிக்கும் இந்த புதிய வடிவமைப்பு கொண்ட பென் ட்ரைவ்கள் நண்பர்களுக்கு வழங்க சிறப்பான சாய்ஸ்.

தீபாவளி ஸ்பெஷலாக டாப்-10 எலக்ட்ரானிக் சாதனங்கள்...

இதில் 4 ஜிபி மற்றும் 8 ஜிபி வெர்ஷன் மெமரி வசதியினை பெறலாம். இதன் வடிவமைப்பு சொன்னவுடன் எடை அதிகமானதாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் இந்த பென் ட்ரைவ்கள் 15.6 கிராமிலிருந்து 16.7 கிராம் வரையிலான எடை கொண்டதாக இருக்கும்.

அட! அப்போது இதை ஃபேஷனாக கழுத்தில் கூட அனிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. தங்க நிறத்தில் கடவுளின் வடிவத்தை மாடர்னாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பென் ட்ரைவ்களில், வெள்ளை நிறத்தில் கற்கள் வைத்தும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தீபாவளி டாப்-5 லேப்டாப்கள் டீலா...நோ டீலா...

பார்ப்பதற்கு மிக அழகாக கண்களை நொடியில் கவர்ந்துவிடும் இந்த பென் ட்ரைவ் சிறப்பான தொழில் நுட்ப வசதியினையும் வழங்கும். அப்படி என்றால் இந்த பென் ட்ரைவ் 2 இன் 1 என்று சொல்லலாம். அதாவது டாலர் + பென் டைரவ்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X