உலகின் முதல் பிரவுசர் இதுதான்...

By Keerthi
|

இன்று நாம் எத்தனேயோ வகையான பிரவுசர்கலை பயன்படுத்தலாம் ஆனால் முதன் முதலில் வந்த பிரவுசர் எது என்று உங்களுக்கு தெரியுமா? அதுதான் மொசைக் பிரவுசர்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் பிரவுசரை உருவாக்கி நமக்கு அளித்தனர்.

இதுதான் கிராபிகல் முறையில் நமக்குக் கிடைத்த முதல் பிரவுசர். இதன் பின்னரே, இதனைப் பின்பற்றி மற்ற பிரவுசர்கள் நமக்குக் கிடைத்தன. இப்போது நீங்கள் எந்த சாதனத்தையும் ஒரு நிமிடம் இயக்கினால் போதும். இணையத்தில் நீங்கள் இருப்பீர்கள்.

மொசைக் பிரவுசர் வருவதற்கு முன்னால், இணையம் உங்களுக்குக் கிடைக்க பெரும்பாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்க வேண்டும். அப்போது கேரக்டர் அடிப்படையிலான இன்டர்பேஸ் புரோகிராம் மூலம் தான், நமக்கு இணையம் கிடைத்து வந்தது.

மொசைக் தொடங்கிய பிரவுசர் வரிசை, இன்று நன்றாக வளர்ந்து, பலத்த போட்டியுடன், நீயா? நானா? என்ற வகையில் கம்ப்யூட்டர் பயனாளர்களைப் பிடிக்க தொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு இயங்கி வருகின்றன. தொடக்க காலத்தில் வந்த பிரவுசர்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

மொசைக் பிரவுசரை உருவாக்கியவர்கள் மார்க் ஆண்ட்ரீசென் மற்றும் எர்க் பினா (Marc Andreessen and Eric Bina) ஆவார்கள். ஆனால், முதன் முதலில் உருவான பிரவுசர் Mosaic அல்ல. அதற்கு முன்னால், ஒரு பிரவுசர் யூனிக்ஸ் சிஸ்டங்களில் பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் இயக்கத்தில் முதல் பிரவுசராக செல்லோ (Cello) வெளியானது. பின்னரே மொசைக் வெளியானது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

மொசைக் பிரவுசர் அவ்வளவு எளிய நடைமுறையைப் பெற்றிருக்கவில்லை. 1990 வரை இதனைப் பயன்படுத்துவது, ஏதோ மேஜிக் போல இருக்கும். அப்போதிருந்த விண்டோஸ் இயக்கமும், இன்டர்நெட் வழிமுறையான டி.சி.பி/ஐ.பி இயக்கத்தினை அவ்வளவாக சப்போர்ட் செய்திடவில்லை.

#2

#2

விண்டோஸ் 95 சிஸ்டம் தான், இணைய வழிமுறைக்கேற்ற பயன்படுத்துவதற்கு எளிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வெளியானது. இன்டர்நெட் பக்கம் மக்களின் விருப்பம் செல்வதனை அறிந்த, மொசைக் பிரவுசர் தயாரித்த இருவரும், இதன் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்த திட்டமிட்டு, பிரவுசர் ஒன்றை உருவாக்கினார்கள்.

#3

#3


அப்போது கிடைத்ததுதான் Netscape. மைக்ரோசாப்ட் நிறுவனமும், மக்களின் இணைய ஆர்வத் தினைத் தாமதாமாகவே புரிந்து கொண்டது. மொசைக் குறியீடுகளைப் பயன்படுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் முதல் பதிப்பினை, ஆகஸ்ட் 1995 மாதம், விண்டோஸ் 95 சிஸ்டத்துடன் தந்தது. ஆனால், இன்றும் வெளியாகும் அனைத்து பிரவுசர்களிலும் மொசைக் பிரவுசரின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது

#4

#4


ஏறத்தாழ பத்து ஆண்டுகள், 1991 வரை இன்டநெட் நமக்கு கேரக்டர் அடிப்படை யிலேயே கிடைத்து வந்தது. இன்றைய இன்டர்நெட் என்பது அப்போது கற்பனை யாகக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. 1993 வரை, தொழில் நுட்ப வல்லுநர்களான சிலரே இன்டர்நெட் பெற்று பயன்படுத்த முடிந்தது.

#5

#5

பின்னரே, வேர்ல்ட் வைட் வெப் World Wide Web (WEB) என அழைக்கப்படும் வெப் உலகம் நம்மை அழைத்தது. இதன் காரண கர்த்தா டிம் பெர்னர்ஸ் லீ ஆகும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X