"விண்ணுக்கு செல்லும் ஜெப் பெசோஸ்"- சார்., அங்கேயே தங்கிருங்க திரும்ப வராதீங்க: 70000+ மக்கள் கையெழுத்து மனு!
அமேசான் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் ஜூலை 20 ஆம் தேதி விண்வெளிக்கு செல்ல இருக்கிறார். அவர் பூமிக்கு திரும்ப வேண்டாம் என வலியுறுத்தி 70000-க்கும் மேற்பட்டோர் மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்
அமேசான் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் முக்கியவரான ஜெப் பெசோஸ் ஜூலை 20 ஆம் தேதி விண்வெளிக்கு செல்ல இருக்கிறார். அவர் பூமிக்கு திரும்ப வேண்டாம் என வலியுறுத்தி 70000-க்கும் மேற்பட்டோர் மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர். வெளியான மனுக்களில் என்ன இருந்தது, இதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

பெசோஸ் பூமிக்கு திரும்ப அனுமதிக்காதீர்கள்
ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு செல்வதாக அறிவித்த சில நாட்களுக்கு பிறகு சேஞ்ச் ஆர்ஜில் இரண்டு மனுக்கள் வெளிவந்தன. அதில் ஜெஃப் பெசோஸ் பூமிக்கு திரும்ப அனுமதிக்காதீர்கள் என்ற தலைப்பில் 40,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் உள்ள விளக்கத்தில் "பில்லியனர் இருக்கக்கூடாது... பூமியிலும் விண்வெளியிலும் இருக்கக்கூடாது, அவர்கள் முடிவு செய்தால் அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆதிக்கத்தில் ஒரு தீய மேலதிகாரி"
20,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுக்களில் தெரிவித்த கருத்துகளை பார்க்கையில், "அவர் உண்மையாக உலகளாவிய ஆதிக்கத்தில் ஒரு தீய மேலதிகாரி. இதை நாங்கள் பல ஆண்டுகளாகவே உணர்ந்துள்ளோம். எப்ஸ்டின்ஸ், நைட்ஸ் டெம்ப்லர் மற்றும் ஃப்ரீ மேஷன்ஸ் உடன் இணைந்து ஜெஃப் பெசோஸ் உலகை கட்டுப்படுத்துகிறார். இதுவே அவர் பூமியில் இருந்து வெளியேற கூறும் காரணம் ஆகும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

ப்ளூ ஆரிஜின் நிறுவனர் ஜெப் பெசோஸ்
உலகளவில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளங்களில் முன்ணிகளில் ஒன்றாக இருப்பது அமேசான். இதன் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்கும் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சகோததர் மார்க்கும் விண்வெளி பயணம்
ப்ளூ ஆர்ஜின் நிறுவனரான ஜெப் பெசோஸ், தனக்கு ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என கனவு கண்டதாக குறிப்பிட்டார். ஜெப் பெசோஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பறக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவரது அவரது சகோததர் மார்க்கும் செல்கிறார். இந்த பயணம் ஜூன் 20 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மேலே செலவழிக்கும் நான்கு நிமிடங்கள் உட்பட 10 நிமிடங்கள் பயணம் நீடிக்கும்.

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்
கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மற்றும் காப்ஸ்யூல் காம்போ ஆறு பயணிகளுடன் பூமியில் இருந்து 62 மைல்-க்கு மேலாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து வயது கனவு நிறைவேறுகிறது
ஐந்து வயது முதல் விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டேன். விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேறுவிதமான உருவத்தை கொடுக்கிறது. நான் இதில் பறக்க விரும்புகிறேன். காரணம் இது வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒரு விஷயம் ஆகும் என ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications