ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 40 மொபைல்கள் திருட்டு! மொத்தமும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள்.. நடந்தது என்ன?

|

சனிக்கிழமை இரவு MMRDA மைதானத்தில் நடந்த கச்சேரியில் பங்கேற்ற ஏராளமானோர் தங்களது மொபைல் திருடப்பட்டு விட்டதாக காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். தொடர்ச்சியாக சுமார் 40க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்துக்கு மொபைல் தொலைந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி

மும்பையில் நடந்த நிகழ்ச்சி

மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் பிரெஞ்சு இசை வல்லுனர் டிஜே ஸ்னேக்கின் சன்பரன் அரீனா கச்சேரி நடைபெற்றது. ஹிட்மேக்கர் சன்பர்ன் அரீனாவின் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அகமதாபாத், டெல்லி, புனே மற்றும் ஐதராபாத் போன்ற பல இடங்களில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.

புகழ் பெற்ற டிஜே ஸ்னேக்

மைக்கேல் ஜாக்சன், பார்க் டெஸ் பிரின்சஸ் போன்று டிஜே ஸ்னேக் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். அவரது இந்திய சுற்றுப்பயணம் என்பது இந்தியாவின் இந்தாண்டு மிகப் பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என இசை ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி மும்பையில் நடைபெற்ற டிஜே ஸ்னேக் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து பங்கேற்றனர்.

40க்கும் மேற்பட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் திருட்டு

40க்கும் மேற்பட்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் திருட்டு

இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட உயர் ரக மொபைல் போன்கள் திருடப்பட்டுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் நான்கு முதல் ஐந்து எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

திருடப்பட்ட மொபைல் போன்கள்

திருடப்பட்ட மொபைல் போன்கள்

சன்பர்ன் அரீனா கச்சேரியில் 40 ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியானது மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (எம்எம்ஆர்டிஏ) மைதானத்தில் நடந்தது. இந்த மைதானத்தில் இருந்த கூட்ட நெரிசலை குற்றவாளிகள் பயன்படுத்தி கொண்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணவும் கைது செய்யவும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

தொடரும் செல்போன் திருட்டு

தொடரும் செல்போன் திருட்டு

செல்போன் திருட்டு என்பது சராசரி நிகழ்வாக மாறி திருட்டுச் சம்பவம் ஆங்காங்கே தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கண் இமைக்கும் நேரத்தில் செல்போன் திருட்டு சம்பவம் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதுவும் கூட்டம் அதிகமாக கூடும் இடத்தில் செல்போன் திருட்டு தவிர்க்க முடியாத ஒன்றாக தற்போது மாறி வருகிறது. பணம், நகை திருட்டு என்பதை விட செல்போன் திருட்டு என்பது மோஷமான விஷயம், செல்போன் தானே திருடப்பட்டுள்ளது என்ற சிறு மனஉளைச்சலோடு வேறு செல்போன் வாங்குவதற்கு நாம் சென்று விடுகிறோம்.

பல்வேறு உள்நோக்கத்துடன் திருடப்படும் மொபைல்கள்

பல்வேறு உள்நோக்கத்துடன் திருடப்படும் மொபைல்கள்

செல்போன் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக கடந்துவிட முடியாது. புகைப்படங்கள், வங்கி கணக்கு விவரங்கள் முதல் அனைத்து தகவலும் செல்போனில் தான் இருக்கிறது. செல்போன் திருட்டு என்பது பணத்திற்காக மட்டும் நடக்கவில்லை. அதையும் தாண்டி பல்வேறு உள்நோக்கத்துடன் அரங்கேறுகிறது. ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போனால் முறையாக புகார் பதிவிடுவது அவசியமான விஷயமாகும். உடனே தொலைந்து போன ஸ்மார்ட்போனை பிளாக் செய்ய வேண்டும் என்பது மிக கட்டாயம்.

புகார் அளிப்பது அவசியம்

புகார் அளிப்பது அவசியம்

ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போகும் பட்சத்தில் அந்த பகுதி காவல்நிலையத்துக்கு சென்று FIR பதிவு செய்ய வேண்டும் என்பது மிகக் கட்டாயம். அதேபோல் சிலர் Find My Phone போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி தங்களது மொபைல் போன் அணுகல் குறித்த தகவலை பெறுகிறார்கள். ஆனால் இதோடு உங்கள் பணி நிறைவடைந்துவிடுவது இல்லை.

CEIR போர்ட்டல்

CEIR போர்ட்டல்

ஸ்மார்ட்போன்கள் தொலைந்து போகும் பட்சத்தில் அரசுக்கு சொந்தமான CEIR போர்ட்டலை அணுகலாம். இதன்மூலம் தொலைந்து போன ஸ்மார்ட்போனை பிறர் அணுகாத வகையில் பயனர்கள் தடுக்க முடியும். திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களைக் கண்காணிக்க பயனர்கள் CEIR தளத்தை அணுகலாம். CEIR என்பது மத்திய உபகரண அடையாள பதிவேட்டு எண்ணைக் குறிக்கிறது. இந்த தளமானது போலி மொபைல் போன் சந்தையை தடுக்க DoT மூலம் உருவாக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
More than 40 Premium Smartphones Stolen in DJ Snake Concert at Mumbai: Police Registered FIR

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X