Home
News

ஆண்ட்ராய்டு தளத்தை குறிவைத்த புதிய மால்வேர்: உஷார் மக்களே.!

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி ஒரு கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் புதிய வகைய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான சிம்பெரியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் புதிய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

க்ரிப்ட்ஹார்ஸ் என்று அழைக்கப்படுகிறது

க்ரிப்ட்ஹார்ஸ் என்று அழைக்கப்படுகிறது

குறிப்பாக இந்த மால்வேர் க்ரிப்ட்ஹார்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்பு இது உலகளாவிய ஆண்ட்ராய்டு பயனர்களை பாதித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த மால்வேர் பரவி இருக்கிறது. மேலும் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மால்வேர் பரப்பிய செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 க்ரிப்ட்ஹார்ஸ் மால்வேர்

அதேபோல் க்ரிப்ட்ஹார்ஸ் மால்வேர் செயலிகளின் குறியீடுகளில் நுழைந்து பயனர்களை தீங்கு விளைவிக்கும் இணைய முகவரிகளை கிளிக் செய்ய வைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மோசமான இணைய முகவரிகள் பயனர் பணத்தை திருடி ஹேக்கர்களின் அக்கவுண்ட்களுக்கு பரிமாற்றம் செய்கின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த தகவலின்படி இந்த புதிய மால்வேர்

வெளிவந்த தகவலின்படி இந்த புதிய மால்வேர் ஆனது பயனர்கள் அனுமதியின்றி பிரீமியம் சேவைகளுக்கு சந்தாதாரர் ஆக மாற்ற வைக்கிறது. பின்பு இந்த மால்வேர் உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல கோடி பேரை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் பயனர்களை ஏமாற்ற ஏமாற்ற உள்ளூர் மொழியிலும் மால்வேர் செயல்பட வைக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூகுள் பிளே

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து ஆபத்தான மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம்செய்யப்பட்டன. மேலும் 8 ஆபத்தான ஆப்ஸ்களும் கிரிப்டோகரன்சி உடன் தொடர்புடையது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆபத்தான ஆப்ஸ்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடியவை, மற்றும் உங்கள் பணத்தைச்சுரண்டக்கூடியவை என்பதால் கவனமுடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு பிட் ஃபண்ட்ஸ், பிட்காயின் மைனர், பிட்காயின், பிட்காயின் (BTC) போன்ற பல ஆப்ஸ்களை உள்ளடக்கிய 8 ஆபத்தான செயலிகளைக் கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

ஹேக்கர்களின் முயற்சியால் இப்போது

அதாவது ஹேக்கர்களின் முயற்சியால் இப்போது ஏராளமான போலி மால்வேர் ஆப்ஸ்கள் இணையதளத்தில் உலவுகிறது. உங்கள் ஸ்மார்ட்போன்களில் அபாயகரமான தீம்பொருள் மற்றும் ஆட்வேர் கொண்ட தீங்கிழைக்கும் செயலிகளை நிறுவி ஹேக்கர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர். இதில் சில ஆப்ஸ்கள் உங்களிடமிருந்து பணத்தையும் சுரண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட 8 தீங்கிழைக்கும் ஆப்ஸ்களின் பட்டியல்

பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட 8 தீங்கிழைக்கும் ஆப்ஸ்களின் பட்டியல்

BitFunds - Crypto Cloud Mining
Bitcoin Miner - Cloud Mining
Bitcoin (BTC) - Pool Mining Cloud Wallet
Crypto Holic - Bitcoin Cloud Mining
Daily Bitcoin Rewards - Cloud Based Mining System
Bitcoin 2021
MineBit Pro - Crypto Cloud Mining & BTC miner
Ethereum (ETH) - Pool Mining Cloud

அதேபோல் புதிய புதிய ஆப் வசதிகள் இப்போது அதிகமாக வருகின்றன. எனவே அவற்றை பயன்படுத்தும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
More than 10 million Android users affected by Grifors malware: Full detailsRead more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X