போனில் அதிகமாக தொல்லை கொடுக்கும் நிறுவனங்கள்!!!
செல்போன் வைத்திருப்பவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை இந்த கஸ்டமர் கேர் பிரச்சனை தான். டெலி காலிங் நிறுவனங்களின் தொல்லையும் இதில் அடங்கும். நேரங்கெட்ட நேரங்களில் இவர்களின் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனர்.
இந்தியாவில், தொல்லை தரும் இதுபோன்ற அழைப்புகள் டாடா, ரிலையன்ஸ், ஏர்செல் போன்ற நெட்வொர்க்கில் தான் அதிகமாக வருகிறதாம். தொல்லை தரும் அழைப்புகளில் 80 சதவீதம் இந்த மூன்று நெட்வொர்க்கில் இருந்து தான் வந்துள்ளன.

செப்டம்பர் 27, 2011 முதல் ஆகஸ்ட் 21, 2013 வரை நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு நடந்த காலகட்டத்தில் தொல்லை தரும் அழைப்புகள் பற்றி 6,27,384 கம்பிளையன்டுகள் பதிவாகியுள்ளதாம்.
டாடா நெட்வொர்க் மேல் 2,45,700 கம்பிளையன்டுகளும், ரிலையன்ஸ் நெட்வொர்க் மேல் 1,78,000 கம்பிளையன்டுகளும், ஏர்செல் நெட்வொர்க் மேல் 57,000 கம்பிளையன்டுகளும் பதிவாகியுள்ளன. மற்ற நெட்வொர்க்களான, வோடபோன் மேல் (52,00), ஏர்டெல் மேல்(40,00) கம்பிளையன்டுகள் பதிவாகியுள்ளன.
இந்த பிரச்சனைக்கு பதிலளித்த டாடா நெட்வொர்க், விரைவாக இது சரிசெய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நெட்வொர்க் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications