800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

|

விண்வெளி ஆராய்ச்சி என்பது இன்று முக்கிய ஆய்வுத் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஆதரிக்கப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் ஊகங்கள் மனித வாழ்க்கைக்கு புதிய காட்சிகளைத் திறக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு மத்தியில், நிலவில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கான சிறந்த வழியைக் கண்டறிய நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நிலவில் ஆக்சிஜன் இருக்கிறது என்றும், இந்த ஆக்சிஜன் 800 கோடி மக்களை நிலவில் வாழவைப்பதற்கு அனுமதிக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

800 கோடி மக்கள் நிலவில் 1,00,000 ஆண்டுகள் உயிர் வாழ முடியுமா?

800 கோடி மக்கள் நிலவில் 1,00,000 ஆண்டுகள் உயிர் வாழ முடியுமா?

மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. சந்திரனின் பாறைகளின் அடுக்கு, ரெகோலித் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உயிர்களைத் தக்கவைக்க போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு புதிய ஆய்வு நம்பப்பட வேண்டுமானால், சந்திரனின் மேற்பரப்பில் 8 பில்லியன் அல்லது 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வைத்திருக்க போதுமான ஆக்ஸிஜன் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிலவில் ஆக்சிஜன் இருக்கு.. ஆனால் வாயு வடிவில் இல்லையா? அப்போ என்ன பயன்?

நிலவில் ஆக்சிஜன் இருக்கு.. ஆனால் வாயு வடிவில் இல்லையா? அப்போ என்ன பயன்?

இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த ஆக்ஸிஜன் இன்னும் வாயு வடிவத்தில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனை இந்த பாறைகளில் இருந்து நிலையான முறையில் பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்திய கணிப்புப் படி, விண்கல் தகவல் அறிக்கை செயின்ட் லூயிஸ் வாஷிங்டன் பல்கலைக்கழக வலைத்தளத்தில் நிலவின் பறைப்படிவில் 41 முதல் 45 சதவீதம் வரை ஆக்சிஜன் உருவாக்க முடியும் என்று கூறுகிறது.

1000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் 1000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் "இன்று".. எப்போது துவங்குகிறது?எங்கெல்லாம் பார்க்கலாம்

விஞ்ஞானிகளின் எலெக்ட்ரோலிஸிஸ் செயல்முறை திட்டம் இதற்குக் கைகொடுக்குமா?

விஞ்ஞானிகளின் எலெக்ட்ரோலிஸிஸ் செயல்முறை திட்டம் இதற்குக் கைகொடுக்குமா?

Space.com இல் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை, சந்திரனில் இருந்து பயன்படுத்தக்கூடிய ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க, விஞ்ஞானிகள் எலெக்ட்ரோலிஸிஸ் (electrolysis) என்ற செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. பூமியில், உலோகங்களை அவற்றின் கனிம தாதுவிலிருந்து பிரித்தெடுக்க இந்த எலெக்ட்ரோலிஸிஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆக்ஸிஜன் ஒரு துணை தயாரிப்பு ஆகும். ஆனால், சந்திரனில், ஆக்ஸிஜன் தான் மனிதர்களுக்குத் தேவையான முக்கிய பொருளாக இருக்கும் மற்றும் உலோகம் ஒரு பயனுள்ள துணை தயாரிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நிலவின் பாறையில் ஆக்சிஜனுடன் இன்னும் என்னென்ன தாது வகைகள் எல்லாம் காணப்படுகிறது?

நிலவின் பாறையில் ஆக்சிஜனுடன் இன்னும் என்னென்ன தாது வகைகள் எல்லாம் காணப்படுகிறது?

சந்திரனின் வளிமண்டலம் மிகவும் மெல்லியதாகவும் ஆக்ஸிஜனின் தடயங்களை மட்டுமே கொண்டுள்ளது. இது பெரும்பாலும் ஹைட்ரஜன், நியான் மற்றும் ஆர்கான் ஆகியவற்றால் ஆனது. இருப்பினும், பூமியில் உள்ள பாறைகளைப் போலவே, சந்திரனில் உள்ள ரெகோலித் தாது வடிவத்தில் கலந்த ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. அங்கு, சிலிக்கா, அலுமினியம் மற்றும் இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆக்சைடுகள் போன்ற கனிமங்கள் கடினமான பாறை, தூசி, சரளை மற்றும் மேற்பரப்பை உள்ளடக்கிய கற்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

மனிதர்கள் நிலவில் உயிர் வாழ இந்த முக்கிய மூலப்பொருள் கட்டாயம் தேவை

மனிதர்கள் நிலவில் உயிர் வாழ இந்த முக்கிய மூலப்பொருள் கட்டாயம் தேவை

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை உரையாடல், சந்திரனின் ஆழமான ஹார்ட் ராக் பொருளில் உள்ள ஆக்சிஜனை பிரித்து எடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது. நிலவின் பறைப்படிவுகளில் காணப்படும் ஆக்சிஜன் நிச்சயமாக எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் வாழ்வதற்கான முக்கிய மூலப்பொருளாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சில மதிப்பீடுகள் திட்டமிடப்பட்டுள்ள படி வந்தடையும் பச்சத்தில் இது சாத்தியமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் படி, நிலவில் எவ்வளவு போதுமான ஆக்சிஜன் இருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

800 கோடி மக்கள் 1,00,000 ஆண்டுகள் என்ற கணக்கு எப்படி சாத்தியம்?

800 கோடி மக்கள் 1,00,000 ஆண்டுகள் என்ற கணக்கு எப்படி சாத்தியம்?

அதன்படி, ரெகோலித்தின் சராசரி ஆழம் நிலவில் சுமார் 10 மீட்டர் என்று வைத்துக்கொள்ளலாம், அதிலிருந்து அனைத்து ஆக்ஸிஜனையும் ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுக்க முடியும் என்று நம்புகின்றனர். அப்படி, ரெகோலிதில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் முயற்சி வெற்றிபெற்றால், "சந்திரனின் மேற்பரப்பின் மேல் 10 மீட்டர் ஆழம் வரை இருக்கும் ரெகோலிதின் மூலம், பூமியில் உள்ள எட்டு பில்லியன் மக்களை நிலவில் ஆதரிக்கத் தேவையான, போதுமான ஆக்ஸிஜனை இது வழங்கும் என்றும், இது 800 கோடி மக்களை நிலவில் எங்கோ சுமார் 1,00,000 ஆண்டுகள் வரை உயிர் வாழ வைக்கும்." என்று கூறப்பட்டுள்ளது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

2025 ஆம் ஆண்டில் இது உண்மையில் நடக்குமா? ஆக்சிஜனை பிரிக்கும் திட்டம் ரெடியா?

2025 ஆம் ஆண்டில் இது உண்மையில் நடக்குமா? ஆக்சிஜனை பிரிக்கும் திட்டம் ரெடியா?

இந்த ஆண்டு, பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சர்வீசஸ், எலெக்ட்ரோலிஸிஸ் மூலம் ரெகோலிதில் இருந்து ஆக்ஸிஜன் வெளியீட்டை மேம்படுத்தக்கூடிய மூன்று சோதனை உலைகளில் தனது வேலையைத் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அணுஉலைகள் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நேரடியாக நிலவில் செயல்படும்படி அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரோலிஸிஸ் அணுஉலை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இன் சிட்டு வள பயன்பாட்டு (ISRU) பணியின் ஒரு பகுதியாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவு, பூமி மற்றும் விண்வெளி தொடர்பான கூடுதல் அறிவியல் சார்ந்த சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் கிஸ்பாட் பக்கத்தை பார்வையிடுங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Moon Top Layer Regolith Can Provide Enough Oxygen For 8 Billion People For 100000 Years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X