இதுமட்டும் மனிதனுக்கு வச்சா?- ஜூஸ் குடித்து கொண்டு வீடியோகேம் விளையாடும் குரங்கு- மூளையில் இருக்கும் ஒரே சிப்!

|

உலகம் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. முன்னற்றம் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வைத்தே கணிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.

எலான் மஸ்க் என்றால் தனித்துவம்

எலான் மஸ்க் என்றால் தனித்துவம்

எலான் மஸ்க் என்றால் தனித்துவம் என்றே கூறலாம். அவர் கனவுத்திட்டங்கள் எல்லாம் உலகத்தை அடுத்துக் கட்டத்தை நோக்கி செலுத்தும் விதமாகவே இருக்கும். எலான் மஸ்க் என்றதும் நினைவுக்கு வருவது டெஸ்லா நிறுவனம். ஆனால் அதையும்தாண்டி எலான் மஸ்க் கனவுத்திட்டத்தின் நிறுவனமாக இருப்பது ஸ்பேஸ் எக்ஸ், நியூரோலிங்க் ஆகும்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆனால் இதற்கான முன்மாதிரி விண்கலம் சோதனையின்போது வெடித்து சிதறியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ப்ரோட்டோடைப் பூமிக்கு திரும்பியபோது வெடித்து சிதறியது. இருப்பினும் அடுத்தடுத்த முயற்சிகள் மூலம் வெற்றிக்கான முன்னேற்றத்தை தொடர்ந்து அடைந்து வருகிறார்.

எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம்

எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம்

அதேபோல் எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் குரங்கின் மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி சோதனை செய்து வருகிறது. குரங்கின் உடலுக்குள் கருவி எங்கே உள்ளது என்றே யாராலும் கண்டுபிடிக்க முடியாது எனவும் இதன்மூலம் குரங்கு மூளைக்குள்ளேயே வீடியோ கேம் விளையாடுவதாகவும் மஸ்க் கூறினார்.

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூரோலிங்

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூரோலிங்

எலோன் மஸ்க்-ன் நியூரோலிங் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மனிதனின் மூளையை இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சியை ஆராய்ந்தது.

போங்க் விளையாட்டு விளையாடும் மூளை

போங்க் விளையாட்டு விளையாடும் மூளை

அவர் ஒரு மகிழ்ச்சியான குரங்கு என்று குறிப்பிட்ட எலான் மஸ்க், அந்த குரங்கின் மூளை போங்க் விளையாட்டு பிறருடன் விளையாடி வருவதாகவும், மூளை மற்றும் முதுகெலும்பு காயங்களை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும் எனவும் குறிப்பிட்டார். அதோடு பொருத்தப்பட்ட சிப்பின் மூலம் நபர்கள் இழந்த திறனை உருவாக்கவும் முடியும் என மஸ்க் கூறினார்.

பன்றியின் மூளையில் கணினி சிப்

பன்றியின் மூளையில் கணினி சிப்

மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சியின் முன்னோட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. சிப் பொருத்தப்பட்ட நாளில் இருந்தே பன்றி நலமுடனே காணப்பட்டதாக கூறப்பட்டது.

குரங்கு மூளைக்குள் சிப்

குரங்கு மூளைக்குள் சிப்

தற்போது குரங்கு மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூரோலிங் வெளியிட்ட வீடியோ குறித்து பார்க்கையில், குரங்கு வீடியோகேம் விளையாடி கொண்டிருக்கிறது. இந்த குரங்கிற்கு பேஜர் என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ குறிப்பை தெளிவாக பார்க்கையில், வீடியோ கேமில் குரங்கு ஒவ்வொரு முறை பந்தை சரியாக ஆரஞ்சு நிறப் பெட்டியில் போடும் போதும் குரங்கிறகு ஒரு குழாய் மூலம் வாழைப்பழ ஜூஸ் கொடுக்கப்படுகிறது.

பந்து விளையாடி வாழைப்பழ ஜூஸ்

குரங்கும் சரியாக பந்தை ஆரஞ்சு நிறப்பெட்டிக்குள் பந்தை போட்டு வாழைப்பழ ஜூஸை குடித்துக் கொண்டே விளையாடுகிறது. குரங்கின் மூளையில் பொருத்தப்பட்ட சிப் மூலம் மூளையில் உருவாகும் அலைகள் கணினிக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இது அடுத்தக்கட்டம் என்றே கூறலாம்.

மூளையில் நினைத்தால்போதும்

காரணம் குரங்கு ஜாய்ஸ்டிக் இல்லாமல் பந்தை நகர்த்தும். குரங்கு மூளையில் பொருத்தப்பட்ட சிப்தான் இதற்கு காரணம். குரங்கு ஜாய்ஸ்டிக்கை அசைக்க வேண்டும் என நினைத்தால் போதும் குரங்கு மூளையில் இருக்கும் சிப் மூலமாக அலைகள் ஏற்பட்டு மூளை இட்ட கட்டளையை வயர்லெஸ் தொடர்பு மூலம் நேரடியாக கணினி கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் குரங்கு நினைத்தால்போது அது வயர்லெஸ் தொடர்பு மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு தாமாகவே நடக்கும்.

மனிதர்களால் இயக்க முடியும்

மனிதர்களால் இயக்க முடியும்

இதே சிப் சாதனத்தை மனிதர்களுக்கு பொருத்தும்போது என்ன பலன் கிடைக்கும் என்றே கேள்வி வரலாம். பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு இந்த சிப் பொருத்தும்போது அவர் நினைத்தவுடன் ஸ்மார்ட்போனை இயக்க வைக்க முடியும், செயற்கை கைகள் இணைத்து அதை மூளையுடன் இணைத்தால் மூளையில் நினைத்தவுடன் செயற்கை கை தானாகவே இயங்கி பயன்படத் தொடங்கும்.

கம்யூட்டர் சிப்கள் மனிதனை இயக்கும்

கம்யூட்டர் சிப்கள் மனிதனை இயக்கும்

மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோப்போகள் உதவியுடன், மனிதர்களின் தலைமுடியைவிட சிறய கம்யூட்டர் சிப்கள் மனிதனை இயக்கும் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார். கம்பியூட்டர் சிப் பொருத்தம் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களும் கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை அடுத்த கட்டமல்ல பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Monkey Playing Video Game with Banana Juice: Elon Musks Neuralink Chip Implant in Brain

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X