வீடியோ கேம் விளையாடும் குரங்கு.! வீடியோ வெளியிட்ட எலான் மஸ்க்.!

|

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார்.

கனவுத் திட்டமாக கூறப்படுவது

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

MindPong வீடியோ கேம்

இந்நிலையில் MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதுபற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

ஆப்பிள் நிறுவனம் போல சொந்தமாக சிப்செட் தயாரிக்கும் சியோமி மற்றும் ஒப்போ.. காரணம் என்ன தெரியுமா?ஆப்பிள் நிறுவனம் போல சொந்தமாக சிப்செட் தயாரிக்கும் சியோமி மற்றும் ஒப்போ.. காரணம் என்ன தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள சான்

அதாவது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!

அதன்படி இந்நிறுவனம் அண்மையில் telepathy என்ற முறையில் இயந்திரத்தின் செயல்பாட்டை உணர்ந்து அதன் அடிப்படையில் குரங்கை விளையாட வைத்துள்ளனர். மேலும் சிறப்பாக விளையாடிய பேஜர் (pager)) என்ற அந்த குரங்குக்கு வாழைப்பழம் பரிசாக கொடுக்கப்பட்டது. தற்சமயம் இந்த வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது என்று தான் கூறவேண்டும்.

எலான் மஸ்க் தொடர்ந்து தனது கனவுத்திட்டங்களான உட்சபட்ச வேக ஹைப்பர் லூப் பயணம், அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்கள், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் என அனைத்திலும் கவனம் செலுத்தி முன்னோக்கி செல்கிறார்.

ரூ. 6999 விலையில் புது டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே ரெடி ஆகுங்கள்..ரூ. 6999 விலையில் புது டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே ரெடி ஆகுங்கள்..

தனது ஊழியர்களை

மேலும் ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று, தற்போது ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி உலகின் பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

News Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Monkey playing video game! Elon Musk posted the video: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X