Home
News

UPI மூலம் தவறுதலாக யாருக்காவது பணம் அனுப்பிட்டீங்களா.. திரும்ப பெற வழிமுறைகள் இதோ..

இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற பல யுபிஐ செயலிகள் மூலம் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கும் சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது. எனவே தான் இந்த யுபிஐ சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆனாலும் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் போது சில நேரங்களில் சிக்கல் வந்துவிடுகிறது. அதாவது சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது. இப்படி தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு வோ (Undo) செய்ய முடியாது.

UPI மூலம் தவறுதலாக யாருக்காவது பணம் அனுப்பிட்டீங்களா..

இருந்தபோதிலும் யுபிஐ மூலம் தவறுதலாக வேறு ஒருவருக்குச் செலுத்திய பணத்தைத் திரும்ப பெறமுடியும். அதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திரும்ப பெற வழிமுறைகள்

1.அதாவது முதலில் நீங்கள் பணத்தைத் தவறாகச் செலுத்திய அந்த நபரை அணுகி உங்களது நிலைமையை விவரியுங்கள். அவர் ஒப்புக்கொண்டால் உங்களுக்குப் பணத்தை அவரே திருப்ப அனுப்ப வாய்ப்பு உள்ளது.

2.அந்த நபர் பணத்தைத் திருப்பி கொடுக்க ஒப்புக்கொள்ளாத நிலையில் அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே ரிப்போர்ட் செய்யுங்கள்.

3. அதன்பின்பு நடந்த விஷயத்தை விளக்கமாக எழுதி உங்கள் வங்கியிடம் புகார் கொடுங்கள். நேரில் செல்ல முடியவில்லை என்றால் புகாரை மெயில் செய்யுங்கள்.

4. அப்போது கூட பிரச்சனை சரியாகவில்லை என்றால் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) 'Dispute Redressal Mechanism' செல்லில் புகார் கொடுக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகார் கொடுக்க முடியும். குறிப்பாக இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் விரைவாகப் பணம் திரும்ப வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு

அதேபோல் சமீபத்தில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு குறித்த முக்கிய தகவல் வெளியானது. இது குறித்த தகவல்களையும் இந்த பதிவில் சற்று விரிவாப் பார்க்கலாம்.

அதன்படி, 2025 டிசம்பர் 31-ம் தேதிக்குள் பான் (PAN) எண்ணை ஆதார் (aadhaar) எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். குறிப்பாக இதைச் செய்யாதவர்களின் பான் கார்டு எண் 2026 ஜனவரி 1-ம் தேதி முதல் செயலிழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண் மட்டும் முடக்கப்பட்டால் உங்களால் வங்கி கணக்கைத் தொடங்க முடியாது. டீமேட் கணக்கையும் தொடங்க முடியாது. இதனால் நீங்கள் பங்குச் சந்தையிலோ அல்லது ஈடிஎப்ஃகளிலோ வர்த்தகம் செய்ய முடியாது. அதேபோல் ரூ.50,000-க்கு மேல் நிலையான வைப்புத்தொகை வைத்திருக்கவும் பான் தேவைப்படுகிறது. வாகனம் வாங்கவோ அல்லது வீடு வாங்கலோ பான் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் இது செயலிழக்கப்பட்டால், சிக்கல் அதிகரிக்கும்.

UPI மூலம் தவறுதலாக யாருக்காவது பணம் அனுப்பிட்டீங்களா..

அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கும் பான் கணக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதுவும் பான் கார்டு இல்லாமல் எந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும் பான் எண் இல்லாமல் வங்கிகளிடமிருந்தோ அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்தோ கடன் கூட பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண் முடக்கப்பட்டிருந்தால், வரிப் பணத்தை திரும்பப் பெற முடியாது, நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வட்டி எதுவும் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Money transferred to the wrong number through UPI? Here are the instructions to get it back
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X