போலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி?

|

ஏடிஎம் மையத்திற்கு வரும் கொள்ளையர்களை குறி வைத்து, அவர்களுக்கு உதவுவது போல நடித்து, ஒரிஜினல் ஏடிஎம் கார்டுகளுக்கு பதிலாக, போலி ஏடிஎம் கார்டுகளை வழங்கி கொள்ளையத்து வந்த இளைஞர் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.

போலிஏடிஎம் கார்டு:முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன்சிக்கியது எப்படி?

தமிழில் கூறும் பழ மொழிபோல பல நாள் திருடன் ஒரு நாள் வசமாக அகப்படுவான். அதுபோலத்தான் இந்த கொள்ளையன் வசமாக சிக்கியுள்ளான். இவர் சிக்கியவிதத்தை பார்தால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

போலி ஏடிஎம் கார்டு:

போலி ஏடிஎம் கார்டு:

வயதானவர்கள் ஏடிஎம் மையத்திற்கு வரும் போது, அவர்களை குறி வைத்து, ஏற்கனவே போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து இருக்கும் ஒரு நபர், ஏடிஎம் மையத்திற்கு வெளியே நிற்பார். அவர் முகம் தெரியாதபடி உடையும் அணி இருப்பார். முதியவர்களிடம் பணக்கும் எடுக்க உதவுவது போல் நடித்து, அவர்களிடம் போலி ஏடிஎம் கார்டுகளை வழங்கி நூதன கொள்ளையில் அடிப்பது குறித்து புகார் எழுந்தது.

கொள்ளை இப்படித்தான்:

கொள்ளை இப்படித்தான்:

போலி ஏடிஎம் கார்டுகளை தயார் நிலையில் வைத்து இருக்கும் அந்த நபர், முதியவர்கள் ஏடிஎம் மையத்திற்கு நுழைந்து, அவர்களுக்கு உதவுவது போல், நடித்து, முதியவர்களின் ஓரிஜினல் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எத்தனை வங்கியில் இருக்கின்றது. ரகசிய குறியீட்டையும் தெரிந்து கொள்வான். பிறகு, குறைந்த அளவில் பணம் எடுத்த பிறகு, உடனடியாக அவர்கள் அசரும் நேரத்தில் போலி வங்கி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு மாயமாவனான்.

<strong>செப்டம்பர் 18-முதல்: யுடியூப்பில் இந்த வசதி நீக்கப் படுகிறது.! ஏன்?</strong>செப்டம்பர் 18-முதல்: யுடியூப்பில் இந்த வசதி நீக்கப் படுகிறது.! ஏன்?

வங்கி கணக்கில் பணம் அபேஸ்:

வங்கி கணக்கில் பணம் அபேஸ்:

சிறிது நேரம் கழித்து மற்றொரு வங்கியில் முதியர்களின் இருந்து கைப்பற்றிய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரகசிய எண்ணையும் பதிவிட்டு, அப்போதே கொள்ளையன் பணம் எடுத்துவிட்டு தப்பிவிடுவான். இதுபோல பல்வேறு பகுதிகளில் இந்த தொடர் சம்பவம் நடந்தால், இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையாக கொண்டு, கொள்ளையனை தேடி வந்தனர்.

15 ஆயிரம் அபேஸ்:

15 ஆயிரம் அபேஸ்:

விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில், கப்பலாம்பாடி பகுதியை சேர்ந்த தேவிகா என்பவரிடமும் அந்த நபர் கைவரிசை காட்டி 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்ததாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

<strong>இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.!</strong>இலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.!

சந்தேக நபர்:

சந்தேக நபர்:

சந்தேகத்திற்கிடமாக தலையில் தொப்பி அணிந்துகொண்டு போலீசாரை பார்த்ததும் ஓட்டெமெடுத்த நபரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடந்த விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் எரும்பூண்டி பகுதியை சேர்ந்தவர் நவீன் என்பதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

<strong>பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 55இன்ச் டாப்-5 ஸ்மார்ட் டிவிகள்.!</strong>பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் 55இன்ச் டாப்-5 ஸ்மார்ட் டிவிகள்.!

ஒரே ஆண்டில் 5 லட்சம்:

ஒரே ஆண்டில் 5 லட்சம்:

கடந்த ஓரே ஆண்டில் மட்டும் சுமார் 5 லட்ச ரூபாய்யை கொள்ளையடித்து தெரியவந்தது. மேலும், அவனிடம் இருந்து சுமார் ரூ.2லட்சம் மட்டும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Money Laundering Using Fake ATM Card : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X