Freedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டா நபர்: மீண்டும் மோசடியில் சிக்கினார்.!

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, Freedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டாப நபர் மீண்டும் சுமார் 200 கோடி ரூபாய் உலர்பழ வியாபர மோசடியில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.

Freedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டா நபர்.!

அதாவது கடந்த 2015-ம் ஆண்டு ரிங்கிங்பெல் என்ற நிறுவனத்தை தொடங்கிய மோஹித் கோயல் என்பவர் ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக அறவித்தார். அதன்பின்பு இதில் பல கோடி மோசடி நடைபெற்றது.

இதுதொடர்பான புகாரின் பேரில், அந்நிறுவனம் மூடப்பட்டு மோஹித் கைதானார். மேலும் 2017-ம் ஆண்டு விடுதலையான மோஹித் கோயல், மீண்டும் ஒரு நிறுவனத்தை தொடங்கி, ரூ.2,399-ல் ஆண்ட்ராய்டு கைப்பேசியும், ரூ.9,990-ல் 32-இன்ச் எல்சிடி டிவியும் அளிப்பதாக அறிவித்து மோசடி செய்தார். இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்ட மோஹித்துக்கு 2018-ல் ஜாமீன் கிடைத்தது.

மேலும் இதுவரை பொதுமக்களை ஏமாற்றிய கும்பல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளது. இதற்காக உணவு பொருட்கள் ஏற்றுமதி எனும் பெயரில் ஒன்றன் பின் ஒனறாக நிறுவனங்களை தொடங்கி மோசடி செய்துள்ளனர். குறிப்பாக பாசுமதி அரிசி, உலர் பழங்கள், மாசாலா வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை முன்பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு, பாக்கித் தொகையை தராமல் ஏமாற்றுவது மோஹித்தின் மோசடியாக இருந்துள்ளது.

Freedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டா நபர்.!

அதாவது இப்பொருட்களை சந்தையில் தாங்கள் வாங்கியதைவிடக் குறைந்த விலைக்கு வற்று அதையும் பணமாக்கி கொண்டுள்ளனர். டிரை புரூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், துபாய் டிரைபுரூட்ஸ் உள்ளிட்ட 6 பெரிய நிறுவனங்களை தொடங்கிய மோஹித் மீது 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் புகார்கள் பதிவாகி உள்ளன.

ஆனாலும் தனது நண்பர்கள் மற்றும் பணியாளர்களின் பெயரில் இந்த நிறுவனங்களை தொடங்கி ஏமாற்றிய மோஹித் கோயல், அதன் பின்னணியில் மறைந்து இருந்தார். பின்பு இந்த நிறுவனங்கள் மீதான பல்வேறு புகார்கள் உ.பி.யின் நொய்டாவிலும் பதிவாகி இருந்தது.

Freedom 251 என்று போனில் மோசடி செய்து தப்பித்த நொய்டா நபர்.!

எனவே இவற்றை தனிப்படை அமைத்து விசாரிக்க தொடங்கினார் அதன் துணை ஆய்வாளரான சு.ராஜேஷ். இவர் கோவில்பட்டியை சேர்ந்த தமிழரான இவரிடம், மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மோஹித் கோயலும் அவரது முக்கிய சகாவான ஜாங்கிட்டும் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mohit Goyal arrested on dry fruit fraud charges: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X