ரூ.16 லட்சம் மோசடிக்கு கைது, அப்போது மீதமுள்ள பல கோடிகள் எங்கே.?

தேசியக்கோடி சின்னத்தை போட்டதால் நேற்று ஏமாந்தோம். இன்றும் ஏமாறுகிறோம். நாளையும் நிச்சயமாக ஏமாறுவோம்.!

|

வெறும் ரூ.251/-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக ஆரட்டர்களை வாங்கி குவித்துவிட்டு அப்படியே எஸ்கேப் ஆன மோஹித் கோயல், இப்போது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு காஸியாபாத் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை நேற்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். காஸியாபாத்தை சார்ந்த அவம் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் ஒருவரின் ரூ.16 லட்சம் மோசடி புகாரின் கீழ் மோஹித் கோயல் காது செய்யப்பட்டுள்ளார். ஆக, அவர் பிரீடம் 251 ஸ்மார்ட்போன் என்ற ஏமாற்றுவேலைக்காக கைது செய்யப்படவில்லையா என்பது தான் பெரிய கேள்வி.!!??

உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போன் என்று இந்தியாவை மட்டுமின்றி சர்வதேச நிறுவனங்களையே வியப்பிற்குள் ஆழ்த்திய ப்ரீடம் 251 நிறுவனத்தை நாம் முழுமையாக மறந்து விட்ட நிலையில் (தமிழ்நாட்டின் நிலை அப்படி) இருக்கிறோம். ப்ரீடம் 251 நிறுவனமும் அதன் வாக்குறுதிகளும் என்னவாகிற்று.? ப்ரீ-ஆர்டர் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேலான கருவிகள் எங்கே.?

நீங்கள் தனியாக இல்லை

நீங்கள் தனியாக இல்லை

ரூ.251/-க்கு உலகின் மிக மலிவான ஸ்மார்ட்போனை முன் பதிவு செய்து மற்றும் அதன் நொய்டா சார்ந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்த தகவலையும் நீங்கள் பெறவில்லை என்றால், பயப்படவேண்டாம் நீங்கள் தனியாக இல்லை, ப்ரீ-ஆர்ட்ர் செய்யப்பட்ட "சுமார் 2 லட்சத்திற்கும்மேற்பட்ட ப்ரீடம் 251 கைபேசிகள்" நிலையும் அதேதான்.

கேஷ் ஆன் டெலிவரி

கேஷ் ஆன் டெலிவரி

கடந்த ஜூலை மாதத்தில் 5,000 ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்த பின்னர் ரிங்கிங் பெல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது கேஷ் ஆன் டெலிவரி மூலம் ஆர்ட்ர் செய்தவர்களுக்கு மேலும் 65,000 கருவிகளை டெலிவரி செய்யும் என்று கூறியது.

மிகப்பெரிய ஏமாற்றம்

மிகப்பெரிய ஏமாற்றம்

அதன் பின்னர், எந்தவிதமான புதிய எண்களையும் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கி தோல்வியில் முடிந்ததை அது காட்டுகிறது. உடன் ப்ரீடம் நிறுவனம் தொலைக்காட்சிகள் மற்றும் பிற ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி ஆகியவைகளை தயாரிக்க திட்டமிட்டு ப்ரீடம் 251 ஸ்மார்போனை ஒரு கனவாகவே மாற்றியது. அப்படியாக இந்த ஆண்டின் தேசிய மற்றும் உலக தலைப்பு செய்தியாகிய ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் தான் 2016-ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஏமாற்றமும் என்றாகியது.

ஆரவ் மிகுதி

ஆரவ் மிகுதி

படிப்பறிவு கொண்ட ஒவ்வொருவரும் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தெளிவு கொண்ட அனைவருமே ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் மீது சந்தேகம் கொண்டன. சிலர் என்னவாக இருக்கும் என்ற ஆரவ் மிகுதியால் ஆர்டர்களை நிகழ்த்தினர். அதற்காக அதை ஒரு வெற்றியாக நாம் எடுத்துக்கொள்ள கூடாது அது நிச்சயமாக தோல்விதான் என்று கூறியுள்ளார் பைசல் கவூசா, முதன்மை ஆய்வாளர் (டெலிகாம்) சைபர்மீடியா ஆராய்ச்சி (சி.எம்.ஆர்).

டிஜிட்டல் வயது ஏமாற்றுவேலை

டிஜிட்டல் வயது ஏமாற்றுவேலை

ப்ரீடம் 251 நிறுவனத்தின் பேமண்ட் கேட்வே க்ராஷ் ஆகும் முன்பு வரையிலாக சுமார் 70 மில்லியன் கருவிகள் புக்கிங் செய்யப்பட்டது மற்றும் இந்த பிப்ரவரி மத்திக்குள் 2.5 மில்லியன் கைபேசிகளை வழங்கவும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதனால் "இதை மிகப்பெரிய தொழில்நுட்ப ஏமாற்றம் என்று அழைப்பதற்கு பதிலாக ஒரு டிஜிட்டல் வயது ஏமாற்றுவேலை எனலாம் என்கிறார் பைசல் கவூசா.

ஒரு வார்த்தை கூட

ஒரு வார்த்தை கூட

இது சார்ந்த விளக்கம் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திடம் கேட்ட போது விநியோகஸ்தர்கள் மூலமாக வலைப்பின்னல்கள் சென்றடையும் பணி நடைபெற்று வருவதாக கூறியதே தவிர்த்து ப்ரீடம் 251 காணாமல் போயுள்ளமை தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ப்ரீ-ஆர்டர்கள் ரத்து

ப்ரீ-ஆர்டர்கள் ரத்து

சில நிபுணர்கள் எந்தவொரு ஸ்மார்ட்போன் கருவியையும் ரூ .2,000/-க்கும் குறைவான உற்பத்தி செலவில் தயாரிக்க முடியாது என்று விளக்கமளித்த பின்னரே ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் மீது சந்தேகங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ப்ரீடம் 251 நுகர்வோர்களை அடைய முடியவில்லை அதனால் அதன் ப்ரீ-ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு நுகர்வோருக்கு பணத்தை திரும்பி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

மிகவும் சவாலான விடயம்

மிகவும் சவாலான விடயம்

இறுதியாக, நல்ல கண்டுபிடிப்புக்ளுக்கு அரசாங்கம் நேர்மறையாகயும் ஊக்குவிக்கும் வண்ணமும் செயல்பட வேண்டியது அவசியம் தான். உடன் குறிப்பிட்ட கண்டுபிடிப்பானது வெற்றி பெறுமா அல்லது தோல்விஅடையுமா என்பதை முன்னதாகவே முடிவு செய்வதும் மிகவும் சவாலான விடயமாகும். ஆக அனைத்திற்கும் ஒரு நியாயமான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும், அதேசமயம் சில அடிப்படை நிலை மதிப்பீடு, வணிக நம்பகத்தன்மை ஆகியவைகளை சரிபார்க்க வேண்டியதும் அவசியம் ஏனெனில் அது எல்லோருடைய வாழ்க்கையையும் பாதிக்கும் சாத்தியம் கொண்டது என்று பைசல் கவூசா விளக்கமளித்துள்ளார்.

ஒரு பெரிய 'ஏமாத்து வேலை'..?

ஒரு பெரிய 'ஏமாத்து வேலை'..?

ப்ரீடம் 251 கருவியின் பரபரப்பு உச்சக்கட்டதில் இருந்தப்பொழுது இது சாத்தியமே இல்லை - ஃப்ரீடம் 251 ஒரு பெரிய 'ஏமாத்து வேலை'..? என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் கிஸ்பாட்டில் வெளியான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Mohit Goel, director of company that made Freedom 251 phones, detained for fraud. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X