2020-ல் பிரதமர் மோடி, தளபதி விஜய், கேப்டன் கோலி தான் டாப்: டுவிட்டர் அறிவிப்பு

|

அனைத்து ஆண்டையும் போல் இந்த 2020 அமையவில்லை என்றே கூறலாம். கொரோனா பரவல் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அனைவருக்குமான இணைப்பாக சமூகவலைதளம் அமைந்தது.

சமூகவலைதளங்களில் நேரத்தை செலவிட்ட மக்கள்

சமூகவலைதளங்களில் நேரத்தை செலவிட்ட மக்கள்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வீட்டில் முடங்கி இருந்த பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை சமூகவலைதளங்களில் செலவிட்டனர். சமூகவலைதள பயன்பாட்டில் பிரதானமாக இருப்பது பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையாகும்.

2020 ஆம் ஆண்டில் அதிகம் கவர்ந்த டுவிட்கள்

2020 ஆம் ஆண்டில் அதிகம் கவர்ந்த டுவிட்கள்

இந்த நிலைியல் டுவிட்டரில் 2020 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டுவிட்கள் குறித்து டுவிட்டர் இந்திய நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் அதிகம் ரீடுவிட், அதிகம் லைக், அதிகம் மேற்கோள்காட்டிய டுவிட், அதிக பேரால் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் உள்ளிட்ட விவரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜய் எடுத்துக் கொண்ட செல்பி

இதில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்பி அடங்கிய டுவிட்தான் 2020 ஆம் ஆண்டில் அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட டுவீட் ஆகும். இந்த செல்பி புகைப்படத்தை இதுவரை 1,45,700 பேர் ரீடுவிட் செய்துள்ளனர். மேலும் 3,76,600 பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

படப்பிடிப்பு தளத்திற்கு குவிந்த ரசிகர்கள்

படப்பிடிப்பு தளத்திற்கு குவிந்த ரசிகர்கள்

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் எடுத்துக் கொண்ட செல்பி அதிக பேரால் ரீடுவிட் செய்யப்பட்டதன் காரணம், நெய்வேலியில் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அங்கு நேரடியாக வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க கூட்டமாக கூட்டமாக வந்தனர்.

397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

அதிகபேரால் ரீடுவிட் செய்யப்பட்ட செல்பி

அதிகபேரால் ரீடுவிட் செய்யப்பட்ட செல்பி

இதையடுத்து கேராவேன்மீது ஏறி ரசிகர்களை பார்த்த விஜய் அவர்களோடு செல்பி எடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஐடி ரெய்டினால் தான் சோர்ந்து போகவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இருந்த இந்த செல்பி அதிகபேரால் ரீடுவிட் செய்யப்பட்டது.

அதிகம் லைக் செய்யப்பட்ட டுவிட்

அதேபோல் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை விராட்கோலி டுவிட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021-ல் பிறக்கப் போகிறது" என்ற டுவிட்டை விராட்கோலி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இந்த டுவிட்தான் 2020 ஆம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட டுவிட்டாக உள்ளது.

அமிதாப் பச்சன் பதிவிட்ட டுவிட்

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து அமிதாப் பச்சன் பதிவிட்ட டுவிட் அதிகம் பேரால் மேற்கோள் காட்டப்பட்ட டுவிட்டாக உள்ளது. அதில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்கும்படி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட்

அதேபோல் அரசியல் சார்ந்த பதிவு குறித்து பார்க்கையில், விளக்குகள் ஏற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட டுவிட் அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட பதிவாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் என டுவிட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்

அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்

விளையாட்டு பிரிவில், #IPL2020, #WhistlePodu, #TeamIndia ஆகியவை அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளாக உள்ளன. பொழுதுபோக்குப் பிரிவில் #DilBechara, #SooraraiPottru, #SarileruNeekevvaru ஆகியவை அதிகம் பேர் பயன்படுத்திய ஹேஷ்டேக்குகளாக உள்ளன.

Best Mobiles in India

English summary
Modi, Vijay, Kohli Top Trends in India: 2020 Most Liked, Retweeted Tweet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X