ஆரம்பமே அட்டகாசம்: மோடியின் முதல் இலக்கு கிராமங்கள்.!

|

பாராளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமருடன், பல்வேறு அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பமே அட்டகாசம்: மோடியின் முதல் இலக்கு கிராமங்கள்.!

பின்பு புதிய மத்திய அமைச்சரவை பதிவு ஏற்றவுடன் டிஜிட்டல் கிராம திட்டம் மற்றும் 100நாட்களில் 1000 கிலோ மீட்டருக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் பயன்:

டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் பயன்:

குறிப்பாக டிஜிட்டல் கிராமத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, அதன்படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும்.

சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!சிறுவனுக்காக ஆக்டோபஸ் உடையை உருவாக்கிய பிட்காயின் மில்லியனர்!

எத்தனை கிராமங்கள் தேர்வு?

எத்தனை கிராமங்கள் தேர்வு?

இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் தலா ஒரு கிராம் என 700ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைஃபை வசதி செய்யப்பட உள்ளது.

 மலிவு விலையில் கம்ப்யூட்டர் மையங்கங்கள்

மலிவு விலையில் கம்ப்யூட்டர் மையங்கங்கள்

மேலும் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த

கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளன.

கிராம தொழிலாளர்களுக்கு பயிற்சி

கிராம தொழிலாளர்களுக்கு பயிற்சி

மத்திய அறிவித்துள்ள இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும், மேலும் இந்த மையங்கள் மூலம் கிராம் மக்களுக்கு மருத்து ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரசே மாநிலம்

உத்திரபிரசே மாநிலம்

இந்த திட்டத்தின் மூலம் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ள. இந்த திட்டம் முதலில் உத்திரபிரசே மாநிலத்தில் அதிகபட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த டிஜிட்டல் கிராமத் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் ஏவும் போது இரஷ்ய இராக்கெட்-ஐ தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ.!விண்ணில் ஏவும் போது இரஷ்ய இராக்கெட்-ஐ தாக்கிய மின்னல்! வைரல் வீடியோ.!

காணொலி காட்சி

காணொலி காட்சி

மத்திய அரசு அறிவித்துள்ள மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை,மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன்

மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும்.

இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி

செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி

மேலும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி. மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன, இந்த திட்டத்தின் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!

தமிழகத்திற்கு கிடைக்குமா?

தமிழகத்திற்கு கிடைக்குமா?

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக தமிழகத்திற்கும் கிடைக்கும், பின்பு 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது. குறிப்பாக ஏரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Modi-Govt -next-project-Digital-Village : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X