சீனா வாலை நறுக்க இந்தியாவுக்கு வரும் கிரிகோரோவிச் போர் கப்பல்.!
அதில், ஒன்று அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்படர்கள் இருந்தாலும், தற்போது அதற்கு போர் செய்து எதிரி நாட்டு கப்பலையும் தூளாக்க ரஷ்யாவிடம் இருந்து கிரிகோரோவிச் வகை போர் கப்பலை
பாகிஸ்தான்-சீனா இந்தியாவுடன் ஆகாய வழியில் போர் கொடுத்தாலும், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகள் இந்தியாவை காக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடல் வழியாக வந்து போர் செய்தால், என்ன செய்வது என்று திட்டமிட்டு வந்த இந்தியா மேலும், இரண்டு பிளான்களை அதிரடியாக அரங்கேற்றி வருகின்றது.

அதில், ஒன்று அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்படர்கள் இருந்தாலும், தற்போது அதற்கு போர் செய்து எதிரி நாட்டு கப்பலையும் தூளாக்க ரஷ்யாவிடம் இருந்து கிரிகோரோவிச் வகை போர் கப்பலை இந்தியா வாங்குகின்றது.
இந்திய ஆழ்கடல் பகுதியும், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினால் அது சீனாவுக்கு பாகிஸ்தானுக்கும் பெரும் ஆபத்தை இந்தியாவால் விளைக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

பெரும் படை பலம்:
அணு ஆயுதங்கள் முதல் நவீன போர் கப்பல்கள், ஹெலிகாப்படர்கள், நீர்மூழ்கி கப்பல் என்று அனைத்தையும் தன் வசம் வைத்துள்ளது சீனா. மேலும் ராணுவத்தில் அதிக ஆட்களையும் நியமித்துள்ளது. அதில் தொழில் நுட்பங்களையும் முப்படைகளிலும் சீனா பயன்படுத்தி வருகின்றது.
மேலும், பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன.

ஆழ்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்:
ஆழ்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மற்ற நாடுகளில் அருகே தனது போர்கப்பலையும் நிறுத்தி அச்சுறுத்தி வருகின்றது. போர் செய்யும் பணியில் நீர் மூழ்கி கப்பலையும் இந்திய எல்லை பகுதியின் அருகே கொண்டு வருகின்றது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

சீனாவுக்கு ஒத்துழைப்பு பாகிஸ்தான்:
சீனாவில் இருந்து பாகிஸ்தான் வரை சாலையும் அமைத்துள்ளது சீனா. அங்கு தனது படைகளையும் அனுப்பி வருகின்றது. மேலும், பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் போர் கப்பலையும் கொடுத்துள்ளது. ஓரே ரேத்தில் இருந்து பாகிஸ்தான், சீனாவும் தாக்குதல் நடத்தினால், தப்பிப்பது இந்தியாவின் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

வானில் வழி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி:
ஒருவேளை பாகிஸ்தானும், சீனாவும் வான்வழியில் தாக்குதல் நடத்தினால், ரஷ்யாவிடம் இருந்து ரூ.36000 கோடியில் வாங்கிய 5 எஸ்-400 ஏவுகணை (நகரும் வாகனத்தில் இருந்து ஏவுக் கூடியது) வாங்கியுள்ளது. இதனால் ஓரே நேரத்தில் 90 இடங்களில் தாக்குதல் நடத்த இயலும். மேலும் வானில் போர் விமானங்கள், டிரோன், ஏவுகணைகளையும் வானிலேயே அழித்து விடும்.

ஆழ்கடல் பகுதியிலும் ஆப்பு:
நீர்மூழ்கி கப்பல்களில் வந்து தாக்குதல் நடத்தினால், இதற்காக அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிடம் அரிஹந்த்:
உள்நாட்டு உற்பத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இது எதிரி நாட்டு நீர்மூழ்க்கி கப்பலையும் தாக்கி அழித்து விடும்.

ரஷ்யாவுடன் 2 போர் கப்பல் கட்டுகிறது:
கோவா கப்பல்கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் ரஷ்யாவும் கையொப்பமிட்டுள்ளன. ரஷ்யாவின் கிரிகோரோவிச் வகைப் போர்க்கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கோவா கப்பல்கட்டும் தளத்தில் அவ்வகைக் கப்பல்களைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.

கையெழுத்தானது:
இந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான 3565கோடி ரூபாய் மதிப்புள்ள உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ளது.

2027ம் ஆண்டு கடற்படை:
ரஷ்யத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் போர்க்கப்பல்கள் 2027ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்படும். கிரிகோரோவிச் வகையைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்களை 7131கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் உடன்படிக்கை கையொப்பமாகிச் சில வாரங்களிலேயே இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்ற உடன்படிக்கை செய்து கொள்ளப்படுகின்றது.

2022 ரஷ்ய போர் கப்பல்:
ரஷ்யாவின் கலினின்கிராட் துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் அந்தக் கப்பல்கள் 2022ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும். இதனால் இந்தியாவுக்கு சீனாவாலும், பாகிஸ்தானலும் ஓரே நேரத்தில் பேரர் தொடுத்தாலும், அதை வெற்றிகரமாக முறியடித்து விடும்.


Click it and Unblock the Notifications