Home
News

Mobile பயன்படுத்துபவர்கள் இந்த 9 விஷயங்களை எப்போதுமே மறக்க கூடாது! நீங்க எதை மறந்தீங்க?

அவசரமயமான இந்த வாழ்க்கையில், நாம் பல முக்கியமான விஷயங்களை மறந்து வருகிறோம். அப்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களான நாம் மறந்த சில முக்கியமான விஷயங்களைத் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த 9 விஷயங்களை நீங்கள் மறந்திருந்தால் உங்கள் போன் பாதுகாப்பானதில்லை.

பூமியில் ஏறக்குறைய சுமார் 5 பில்லியன் செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. இதில் 2.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இருப்பினும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் எல்லோரும் சில முக்கிய விஷயங்களைப் பின்பற்ற மறந்துவிடுகிறோம். நாம் மறந்த முக்கியமான விஷயங்களை நினைவுகூரவே இந்த பதிவு.

Mobile பயன்படுத்துபவர்கள் இந்த 9 விஷயங்களை எப்போதுமே மறக்க கூடாது!

ஸ்மார்ட்போன் பயனர்கள் மறக்கவே கூடாதா 9 விஷயங்கள்.!

1. பாஸ்வோர்ட் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்வது அவசியம்.
2. உங்கள் Mobile போனிற்கு வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தவிர்க்கவும்.
3. உங்கள் ஸ்மார்ட்போனின் சாப்ட்வேர் அப்டேட்டை மிஸ் செய்யாமல் அப்டேட் செய்யவும்.
4. ஆன்லைனில் ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட பாஸ்வோர்டை பயன்படுத்தவும்.
5. ஓபன் வைஃபை நெட்வொர்க்குகளில் VPN ஐப் பயன்படுத்தவும்.
6. புகழ்பெற்ற ஆப்ஸ் ஸ்டோர்களில் இருந்து ஆப்ஸ்களைப் டவுன்லோட் செய்யவும்.
7. உங்கள் டேட்டாவை லேப்டாப் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் இல் பேக் அப் எடுத்துவைக்கவும்.
8. உங்கள் போனில் ரிமோட் வைப்பிங் அம்சத்தை ஆக்டிவேட் செய்து வைக்கவும்.
9. உங்கள் போனில் செக்யூரிட்டி ஆப்ஸ் இருப்பது அவசியம்.

Mobile பயன்படுத்துபவர்கள் இந்த 9 விஷயங்களை எப்போதுமே மறக்க கூடாது!

செய்யவே கூடாத.. மொபைல் விஷயங்கள்.!

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த அடிப்படை விஷயங்களை மறவாமல் தொடர்ந்து பின்பற்றுவது அவசியம். இதில் உள்ள சில விஷயங்கள் சிலர் இப்போது பின்பற்றி வருவீர்கள் என்றாலும், இந்த அனைத்து விஷயங்களையும் பின்பற்றுபவர்கள் கட்டாயம் இந்த விஷயங்களைத் தொடர்ந்து பின்பற்றுவது போனிற்கு மிகவும் பாதுகாப்பானது. உங்கள் போனில் நீங்கள் செய்ய கூடாத சில விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

முதலில் நீங்கள் செய்யக் கூடாத சில விஷயங்களில் அதிகமாக நாம் கேள்விப்படும் விஷயம், உங்கள் போன் குறைந்த சார்ஜ்ஜில் இருக்கும் பொழுது, அதை காதிற்கு அருகில் வைத்து பேசக் கூடாது. இது உங்கள் மூளைக்கு ஆபத்தானது. இந்த நேரத்தில் உங்கள் போனில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதனால் இது ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile பயன்படுத்துபவர்கள் இந்த 9 விஷயங்களை எப்போதுமே மறக்க கூடாது!

100% வரை உங்கள் போனை சார்ஜ் செய்வது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

அதேபோல், உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் பொழுது எப்போதும் நீண்ட நேரம் சார்ஜ் செய்யக் கூடாது. குறிப்பாக, 100% வரை சார்ஜ் செய்யும் பழக்கம் ஆபத்தானது. ஆம், உங்கள் போனை 100% வரை சார்ஜ் செய்ய கூடாது, இது உங்கள் போனின் ஆயுளை குறைந்துவிடும். எப்போதும், 90% அல்லது 98% சதவீதத்தில் இருக்கும் போது சார்ஜரில் இருந்து நீக்கிவிட வேண்டும்.

எப்போதும் உங்கள் மொபைல் போனை 15% அல்லது 5% அளவிற்கு முன் சார்ஜ் செய்வது நல்லது. போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் சார்ஜ் செய்யும் பழக்கம் தவறானது. போனின் பேட்டரி முழுமையாக தீர்ந்த பின் சார்ஜ் செய்தால், உங்கள் போனின் ஆயுள் முழுமையாக குறைந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், உறங்கும் போது இரவு முழுக்க சார்ஜ் செய்யும் பழக்கத்தை கைவிடுதல் சிறப்பானது.

ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றுவது மிகவும் பாதுகாப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mobile users should never forget these 9 things
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X