Mobile-ல் இன்டர்நெட் ஸ்பீட் மந்தமாக இருக்கிறதா? 'இது' தான் காரணம் மக்களே.. உடனே செட்டிங்கில் இதை மாற்றுங்க..
நீங்கள் மொபைல் (Mobile) பயன்படுத்தும் பொழுது, சில நேரங்கள் அல்லது பல நேரங்களில் உங்கள் இணைய வேகம் குறைந்து, (slow internet speed on mobile) உங்களை கடுப்பேற்றுகிறதா? என்ன தான் ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data plans) நன்மை கிடைக்கும் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தாலும், அவ்வப்போது, உங்கள் போனில் இன்டர்நெட் வேகம் குறைவதை (slow speed internet issue) கண்டு கவலை அடைகிறீர்களா? இதற்கான காரணம் நெட்வொர்க் கவரேஜாக இருக்குமென்று தவறாக புரிந்துகொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான் மக்களே.
என்னதான் நீங்கள் ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை கிடைக்கும் திட்டத்தை அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்திருந்தாலும் கூட, உங்கள் இணைய வேகம் இன்னும் சில நேரங்களில் மெதுவாக லோட் ஆகிறதா? இதற்கு நீங்கள் இருக்கும் இடத்தில் நெட்வொர்க் கவரேஜ் (bad network coverage) சரியாக கிடைக்கவில்லை என்று தவறாக நினைத்துக்கொண்டு, உங்கள் மனதை நீங்களே தேத்திக்கொள்ள, சில காரணங்களை தேடுகிறீர்களா? அப்படியானால், உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே.

உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் வேகம் மந்தமாக இருக்கிறதா?
உங்கள் போனில் ஏற்படும் ஸ்லோ இன்டர்நெட் சிக்கலுக்கு உங்களுடைய டேட்டா பேக்கோ அல்லது உங்கள் நெட்வொர்க்கோ ஒரு காரணம் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ரீசார்ஜ் செய்த ஹை ஸ்பீடா டேட்டா திட்டம், உண்மையிலேயே வேகமாக இணைய சேவையை வழங்கினாலும், உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்டிருக்கும் சில தகவல்களால் தான் உங்கள் இன்டர்நெட் வேகம் குறைகிறது என்ற உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தை புரிந்துகொண்டு, இதை சரி செய்துவிட்டாலே, உங்கள் போனில் இன்டர்நெட் வேகம் நீங்கள் எதிர்பார்த்ததை போல வேகமாகிவிடும். மந்தமாக செயல்படும் உங்கள் போனில், இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றி தான் இப்போது இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளப் போகிறோம். இந்த பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, உங்கள் போனின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க செய்யுங்கள்.
உங்கள் போனில் இன்டர்நெட் வேகம் குறைய என்ன காரணம்?
உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் சேவ் செய்யப்பட்டிருக்கும் பிரௌசர் டேட்டாக்களை (browser data) மற்றும் இன்டர்நெட் தகவல்களால் (stored internet data informations) தான் உங்கள் இணைய வேகம் மெதுவாகிறது. இதை சரி செய்ய, சில குறிப்பிட்ட செட்டிங்கை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும் (how to increase data speed in your mobile). இதை மாற்றி அமைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
1. நீங்கள் பயன்படுத்தும் வெப் பிரௌசரை திறக்க வேண்டிய நேரம் இது:
- உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் கூகுள் குரோம் (Google chrome browser) செல்லுங்கள்.
- அல்லது நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் வெப் பிரவுசரை (web browser) திறந்துக்கொள்ளுங்கள்.
- பிறகு, அதன் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்யவும்.
- பிறகு செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை கிளிக் செய்க.
- அதன் உள்ளிருக்கும் சைட் செட்டிங் (Site Settings) என்ற விருப்பத்தில் ஒரு கிளிக் போடுங்க.
- கீழே ஸ்க்ரோல் செய்து ஸ்டோரேஜ் (Storage) அல்லது டேட்டா ஸ்டோர்டு (Data stored) கிளிக் செய்யவும்.
- இப்போது கிளியர் ஆல் டேட்டா (Clear all data) என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்கு தெரியாமல் சேவ் செய்யப்பட்ட இன்டர்நெட் டேட்டாக்கள் அனைத்தும் கிளியர் செய்யப்படும். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் வேகம் கொஞ்சம் அதிகரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது மக்களே.
2. இத்துடன் கூடுதல் மாற்றங்களை செய்ய மறக்காதீர்கள்:
- மீண்டும் கூகுள் குரோம் பிரவுசரை திறக்கவும்.
- மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி ஐகானை கிளிக் செய்வும்.
- செட்டிங்ஸ் சென்று சிங்க் ஆன் (Sync On) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது இந்த ஆப்ஷன் ஆஃப் (OFF) நிலைக்கு மாறிவிடும்.
- இப்படி செய்வதன் மூலமாகவும் உங்கள் போனின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியும்.
3. உங்கள் Mobile settings ஓபன் செய்யுங்கள்:
- உங்கள் போனில் உள்ள நார்மல் செட்டிங்ஸ் மெனுவிற்கு செல்லுங்கள்.
- அதில் மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து, டேட்டா சேவர் (Data saver) விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
- டேட்டா சேவர் அம்சம் ON நிலையில் இருக்கிறதா? என்பதை செக் செய்யுங்கள்.
- ON-ல் இருந்தால், அதை OFF நிலைக்கு மாற்றவும்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் போனில் மந்தமாக செயல்படும் இன்டர்நெட் வேகத்தை உங்களால் அதிகரிக்க முடியும். அதேபோல், பேக்ரவுண்டில் இயக்கப்படும் தேவையில்லாத சில ஆப்ஸ்கள் உரியும் டேட்டாவை தடுப்பதும், உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கும். இப்படி செய்வதன் மூலம், நீங்கள் முழுமையான இணைய வேகத்தை அனுபவிக்க முடியும். குறிப்பாக, நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் அல்லது வெப் பிரௌசருக்கு முழுமையான டேட்டா கிடைக்கும். இதன் மூலம் ஸ்பீடான இன்டர்நெட் அனுபவத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








