கெத்தான ஆளுங்கலாம் இந்த டைப்பிங் ட்ரிக்கை தான் யூஸ் பண்ணுவாங்க.! நீங்க யூஸ் பண்ணலையா?
Mobile Tying Trick: இப்போது சந்தையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட் போன் (smartphone) சாதனங்களில் வழங்கப்படும் டிஸ்ப்ளே மிகவும் பெரியதாக உள்ளன. உண்மையைச் சொல்லப் போனால், பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை (big display smartphone) தான் மக்களும் வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இது ஒரு புறம் உங்களுடைய வீடியோ (video) அனுபவத்தைச் சிறப்பாக மாற்றுகிறது என்றாலும் கூட, பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்களால் ஒரு பெரிய சிக்கலும் எழுகிறது. இதை நாம் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் போது அனுபவித்திருப்போம் என்பதே உண்மையாக இருக்கிறது. அது என்னவென்று கேட்கிறீர்களா?

அது தான் 'மெசேஜ் டைப்பிங் மக்களே' (message typing tricks).. பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட் ஃபோன்களில் இரண்டு கைகளைப் பயன்படுத்தித் தான் உங்களால் வேகமாக டைப் (fast typing) செய்ய முடியும். அதுவும், உங்களுடைய கையில் வேறு ஏதேனும் பொருள் உள்ளது என்று வைத்துக் கொண்டால், உங்களால் ஒற்றை கையில் மெசேஜை டைப் (one handed message typing) செய்யவே முடியாது.!
நீங்கள் என்ன தான் கில்லாடியாக இருந்தாலும் கூட, நீங்கள் ஒற்றை கையில் டைப் செய்ய முயன்றாலும், உங்களால் வேகமாக டைப் செய்ய முடியாது. இந்த சிக்கலைப் பெரும்பாலானோர் பயணத்தின் போது சந்தித்திருப்பர். ஒரு கையில் காபி கப் அல்லது டீ கப் இருக்கும் போது; ஒற்றை கையில் மெசேஜ் டைப் (message typing) செய்வது எவ்வளவு சிரமம் என்று அவர்களிடம் கேட்டால் தான் தெரியும்.
ஆனால், சிரமமே இல்லாமல் - வேகமும் குறையாமல் ஒரு ப்ரோ ஸ்மார்ட்போன் யூசர் (Pro smartphone users) போல நீங்கள் செயல்பட வேண்டுமானால்; உங்களுடைய ஸ்மார்ட்போனில் இந்த செட்டிங்கை (smartphone setting) உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.! இதை மாற்றி அமைத்தால் போதும், இனி கெத்தாக ஒற்றை கையில், "சும்மா சூப்பர் ஸ்டார்" போல ஸ்டைலாக டைப் செய்யலாம்.

நீங்கள் ஆண்ட்ராய்டு (android) ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உண்மையில் பாக்கியசாலிகள் தான். ஏனெனில், இந்த அம்சம் இப்பொழுது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 12 (Android 12) அல்லது அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் இந்த அம்சம் சிறப்பாகச் செயல்படும். இந்த அம்சத்தின் பெயர் 'ஒன் ஹேண்டட் மோட்' (One Handed Mode) என்று அழைக்கப்படுகிறது.
இதன் பெயரே, இதனுடைய அர்த்தத்தை விளக்கப்படுத்தி இருக்கும். ஒற்றை கையில் டைப் செய்ய அனுமதிக்கும் அம்சம் தான் இது. சரி, இந்த அம்சத்தை எப்படி உங்கள் போனில் ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.
- உங்கள் ஸ்மார்ட்போனில் டைப் செய்யக்கூடிய ஏதேனும் ஒரு ஆப்பை திறந்து கொள்ளுங்கள்.
- பிறகு உங்கள் கீபோர்டில் காணப்படும் மூன்று புள்ளி ஐக்கானை கிளிக் செய்யவும்.
- இப்பொழுது அங்கு காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து ஒன் ஹேண்டட் (One Handed) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- நீங்கள் இடது கை பழக்கமுடையவர் என்றால் இடது புறத்தில் இருக்க ஏரோவை (Arrow) பிரஸ் செய்யவும்.
- நீங்கள் வலது கை பழக்கம் உடையவர் என்றால் வலது புற ஏரோ மார்க்கை பிரஸ் செய்யவும்.
- உங்களுடைய கீபோர்டை பெரியதாக்க வேண்டும் என்றால் நான்கு பக்க ஏரோ மார்க்கை கிளிக் செய்ய வேண்டும்.
இதே போல் மற்றொரு முறைப்படியும் உங்களுடைய ஃபோனில் ஒற்றை கை மெசேஜ் டைப்பிங் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்யலாம்.
- இதற்கு நீங்கள் உங்கள் போனின் செட்டிங்ஸ் (Settings) செல்ல வேண்டும்.
- அங்கு காண்பிக்கப்படும் கெஸ்டர் ஆப்ஷனை (Gesture Option) கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் கீழ் இருக்கும் ஒன் ஹேண்டட் மோட் (One Handed Mode) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- அவ்வளவுதான் உங்கள் மொபைல் கீபோர்டு (Mobile Keyboard) இப்பொழுது சிறியதாக ஆகிவிடும்.
- உங்கள் விரல் அளவிற்கு ஏற்றார் போல இந்த கீபோர்டை பிளேஸ் செய்து ஈசியாக டைப் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








