மொபைல்போனின் ரோமிங் கட்டணம் ரத்து!

Posted By: Staff
மொபைல்போனின் ரோமிங் கட்டணம் ரத்து!

அடுத்த ஆண்டில் இருந்து மொபைல்போனுக்கான ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், மொபைல் கட்டணம் வெகுவாக உயரும் என்று கருதப்படுகிறது.

மொபைல்களில் வசூலிக்கப்பட்டு வரும் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கடந்த மே 31ம் தேதி நமது தமிழ் கிஸ்பாட்டில் ஒரு செய்தி வெளியானது. அடுத்த ஆண்டில் இருந்து ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கபில் சிபில் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் இப்படி ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதால், மொபைல் கட்டணங்கள் உயர வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெட்ரோல், பால் என்று தினசரி பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் வரிசையாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதை அடுத்து, மொபைல் தொலை தொடர்பு சேவைகளின் கட்டணம் வெகுவாக உயரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

மொபைலின் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்யப்படுவதாக தேசிய தொலை தொடர்பு கொள்கை (நேஷனல் டெலிகாம் பாலிஸி) மூலம் தகவல்கள் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அலைகற்றையின் ஏலம் பற்றிய விவரங்களும் முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் தொலைத்தொடர்பு செயலாளர் ஆர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதனால் அலைக்கற்றைகள் பற்றிய விலை விவரங்கள் தெளிவாக முடிவுக்கு வந்த பின்னர் மொபைல் கட்டணங்கள் உயர்கிறதா? இல்லை, குறைகிறதா? என்பது பற்றிய தகவல்கள் தெரிய வரும். இந்த செய்தியை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் மலையாளத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot