தயாராகுங்கள்., அடுத்த ஆறு மாதங்களில் கட்டணம் உயரும்: ஏர்டெல் தலைவர் உறுதி
அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் கட்டண சேவை அதிகரிக்கும் எனவும் தற்போது இருக்கும் டேட்டாவின் விலை முறையானது இல்லை எனவும் பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியா
உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது பெயரை நிலைநாட்ட போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகள் அறிவிப்பது வழக்கம்.

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இந்திய சந்தையை பொருத்தவரை ஜியோ வருகைக்கு முன்பு பின்பு என்றே பிரிக்கலாம். குறுகிய காலத்தில் தனது சலுகையின்மூலம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக ஜியோ மாறியது. ஜியோவின் சலுகைகளுக்கு பிற நிறுவனங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

மொபைல் சேவைக்கான கட்டணம் அதிகரிக்கும்
உலகளவில் ஒரு ஜிபி டேட்டா குறைந்த விலையில் கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் சேவைக்கான கட்டணம் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல்
பாரதி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் கூறிய கருத்துகளை முழுவதுமாக பார்க்கலாம். தற்போதைய விலையில் டேட்டா உபயோகிக்கும் வாடிக்கையாளர்களே கூடுதல் தொகை செலுத்த தயாராகுங்கள்.

2 டாலர் முறையல்ல
அமெரிக்கா அல்லது ஐரோப்பா போன்று 50-60 டாலர்கள் செலுத்த வேண்டியதில்லை. இருப்பினும் 1 மாதத்திற்கு 16 ஜிபி டேட்டாக்கு 2 டாலர் என்பது நிலையானது அல்ல என கூறினார்.

குறைந்த கட்டணத்தில் தரவுகள்
குறைந்த கட்டணத்தில் தரவுகள் வழங்குவது என்பது தொலைத் தொடர்புத் துறைக்கு நிலையானவை அல்ல. ரூ.160-க்கு மாதத்திற்கு 16 ஜிபி டேட்டா என்பது வருந்தக் கூடியது என குறிப்பிட்டார். இந்த விலையில் மாதத்திற்கு 1.6 ஜிபி டேட்டா என்பதே சரி என குறிப்பிட்டார்.

ரூ.200 வரை உயர்த்தப்படும்
டிஜிட்டல் உள்ளடக்க நுகர்வு மூலம் பயனரின் சராசரி வருவாய் ஏஆர்பியூ ரூ.200 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள் உள்ளிட்டவைகள் பார்க்க விரும்பினால் அதற்கேற்ற இணைய சேவையை பெற வேண்டும் என கூறினார்.

முதலீடு செய்ய வேண்டிய நிலை
தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் கடினமான சூழலில் நாட்டிற்கு சேவை செய்து வருகின்றன. மேலும் தொழில் 5ஜி, அதிக ஆப்டிகல் ஃபைபர்கள், நீர்மூழ்கிக் கேபிள்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது என மிட்டல் கூறினார்.

ரூ.200 விலையை கடக்கலாம்
தொலைதொடர்பு இல்லாத வணிகங்களும் டிஜிட்டலை பின்பற்ற வேண்டும். இந்தியா மிகவும் விலை உணர்வுள்ள சந்தை. ஆறு மாத காலப்பகுதியில் நாம் ரூ.200 விலையை கடக்கலாம். 250 சிறந்ததாக இருக்கும் என மிட்டல் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications