Home
News

வேங்க மவன் ஒத்தையில நிக்கான்.. Airtel-ன் ஆல்-இன்-ஒன் பிளான்.. இனி ஒவ்வொரு மாசமும் இந்த ரீசார்ஜ் தான்!

அதெல்லாம் பழைய காலம் என்று கூறும் அளவிற்கு, ஒரு காலத்தில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மொபைல் டேட்டா (Mobile Data) ஆகிய 3 நன்மைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த மொபைல் ரீசார்ஜ்கள் - இப்போது மலையேறி விட்டன.

தற்போது டெலிகாம் நிறுவனங்கள் ஆனது - டிஜிட்டல் சேவைகள் (Digital services), கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) மற்றும் கன்டென்ட் சந்தாக்கள் (Content Subscriptions) ஆகிய கூடுதல் நன்மைகளை "வழக்கமான" மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் உடன் சேர்த்து தொகுப்பாக வழங்கு வருகின்றன.

Airtel-ன் ஆல்-இன்-ஒன் பிளான்.. இனி ஒவ்வொரு மாசமும் இந்த ரீசார்ஜ் தான்!

இப்படியாக பேஸிக் ஆன கனெக்டிவிட்டி சேவைகளை தாண்டி, இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு சேவைகள் எவ்வாறு "பரிணாம வளர்ச்சி" அடைந்து உள்ளன என்பதற்கு பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 மதிப்புள்ள போஸ்ட்பெய்ட் திட்டம் (Bharti Airtel Rs.449 postpaid plan) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. இதில் அன்லிமிடெட் டேட்டா (4ஜி மற்றும் 5ஜி) மற்றும் ஓடிடி (OTT) சேவைகள் போன்ற நன்மைகள் அடங்கும். சுவாரசியமாக இந்த திட்டம் நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது.

பார்தி ஏர்டெல் ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விவரங்கள்:
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
- 30 நாட்களுக்கு 300ஜிபி ஹைஸ்பீட் (வரம்பற்றதாகக் கருதப்படும்) 4ஜி மற்றும் 5ஜி டேட்டா
- தினமும் 100 எஸ்எம்எஸ்கள்
- கூகுள் ஒன் (Google One) சேவையின் கீழ் 100ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்

- ஓராண்டுக்கு ரூ.4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா
- ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா
- ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியமின் கீழ் பல்வேறு ஓடிடி தளங்களுக்கான அணுகல்

கிஸ்பாட்டின் கருத்து: வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் ஆகிய 3 முக்கிய நன்மைகளை மட்டுமின்றி ஏர்டெல்லின் ரூ.449 திட்டம் பொழுதுபோக்கையும் மற்றும் அதை தாண்டியும் பல நன்மைகளை வழங்குகிறது. ஓடிடி நன்மைகள் பெரும்பாலும் அதிக கவனத்தை ஈர்த்தாலும், ஏர்டெல்லின் ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங்கை தாண்டிய பல டிஜிட்டல் சேவைகளும் உள்ளன.

சந்தாதாரர்கள் 100ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜை பெறுகிறார்கள்; இது பல்வேறு டிவைஸ்களில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க (backup) பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த இத்திட்டம் 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது. இதன் மூலம், தனித்தனியாக சந்தா செலுத்த வேண்டிய பிரீமியம் டெம்ப்ளேட்கள், டிசைன் டூல்கள் மற்றும் கன்டென்ட் ஜெனெரேட்டிங் அம்சங்களை பயனர்கள் அணுக முடியும்.

இந்த கூடுதல் நன்மைகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் பாரம்பரிய குரல் மற்றும் டேட்டா சேவைகளுக்கு அப்பால் எவ்வாறு அதிகளவில் கவனம் செலுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மொபைல் திட்டத்தை இணைப்பு வசதிக்கான ஒரு தயாரிப்பாக மட்டும் நிலைநிறுத்துவதற்கு பதிலாக, நிறுவனங்கள் சந்தாதாரரை சுற்றி ஒரு பரந்த டிஜிட்டல் சூழலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன.

கிளவுட் ஸ்டோரேஜ் அல்லது கன்டென்ட் ஜெனரேஷன் டூல்களுக்கு ஏற்கனவே தனியாக பணம் செலுத்தும் நுகர்வோருக்கு, இந்த தொகுக்கப்பட்ட நன்மைகள், மொபைல் சேவையை விட அதிக மதிப்பை சேர்க்கக்கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒரே மாதாந்திர கட்டணத்தின் கீழ் பல டிஜிட்டல் சேவைகளை சேர்ப்பது, தொலைத்தொடர்பு துறையில் ஒரு பரந்த அளவிலான டிரெண்டை (wider trend) பிரதிபலிக்கிறது. இதை மதிப்புக்கூட்டு சலுகைகள் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள செய்யும் ஒரு வியாபார தந்திரம் என்றும் கூறலாம்.

Best Mobiles in India

English summary
Mobile Recharges are no more for Voice Data SMS Benefits Only Best Example is Airtel Rs 449 postpaid plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X