Home
News

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டண உயர்வு.. தேர்தலுக்கு பிறகு வரும் முக்கிய மாற்றம்.. பயனர்கள் ஷாக்..

இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது மொபைல் ரீசார்ஜ் (Mobile recharge) திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது மக்களவை தேர்தலுக்குப் பிறகு ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி திட்டத்தை மேம்படுத்துவதற்காக அதிக அளவில் முதலீடுகளை செய்து வருகின்றனர். எனவே இந்த தேர்தலுக்கு பிறகு 25 சதவீதம் ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டண உயர்வு.. பயனர்கள் ஷாக்..

குறிப்பாக 25 சதவீதம் கட்டண உயர்வு என்பது உண்மையிலேயே அதிகமானது தான். ஆனாலும் கிராமப்புற பயனர்கள் நிர்வகிக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. குறிப்பாக இதன் அடிப்படையில் ஏர்டெல்லின் (airtel) சராசரி கட்டணத்தில் 29 ரூபாயும், ஜியோவின் (jio) சராசரி கட்டணத்தில் 26 ரூபாயும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 5ஜி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டுவதால், அது தொடர்பான தொழில்துறையிலும், 10 முதல் 15 சதவீதம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக ஒரு ஆண்டில் தோராயமாக ஒரு சந்தாதாரருக்கு 100 ரூபாய் அதிகரிக்கலாம். இதனால் இனிவரும் காலங்களில் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டண உயர்வு.. பயனர்கள் ஷாக்..

குறிப்பாக தேர்தலுக்குப் பிறகு விரைவில் இந்த கட்டண உயர்வை ஏர்டெல் மற்றும் ஜியோ கொண்டுவரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதேபோல் இந்த கட்டண உயர்வு மூலம் வலுவான நெட்வொர்க் கவரேஜ் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவை அதிகரிக்கும் என்பதால், பயனர்கள் அதிவேக நெட்வொர்க் இணைப்பைத் தடையின்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த கட்டண உயர்வு மூலம் சக்கி தவிப்பது சராசரி பொதுமக்கள் தான்.

டெலிகாம் நிறுவனங்கள் தற்போது கட்டணத்தை உயர்த்தினால் இது தேர்தலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே தேர்தல் முடிந்த பிறகு இதை அமல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான தகவலின்படி, வரும் ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவைகள் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பிஎஸ்என்எல் 4ஜி சேவை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 8 லட்சம் நுகர்வோரை பிஎஸ்என்எல் நிறுவனம் சேர்த்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டண உயர்வு.. பயனர்கள் ஷாக்..

அதேசமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது 4ஜி இயக்கப்பட்ட சிம்களில் மட்டும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே பயனர்கள் தங்களது பழைய சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பெறவேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி சேவையை வழங்குவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) மற்றும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான C-DOT ஆகியவற்றை உள்ளடக்கிய உள்நாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்த சில மாதங்களில் 5ஜி சேவையை கூட அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தற்போது மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மையைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Mobile recharge prices will be hiked after elections: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X