Home
News

உயரும் ஸ்மார்ட்போன்களின் விலை..! அரசு அறிவித்த புதிய வரிவிதிப்பு..! காரணத்தை விளக்கிய ICEA!

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. வாடிக்கையாளர்களும் தொடர்ந்து பலவிதமான ஸ்மார்ட்போன்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வாங்கி வருகின்றனர். ஆனால், இனி ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம் என்ன என்பதையும் ICEA விளக்கமளித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் டிஸ்பிளேகளுக்கு அரசு தற்பொழுது 10 சதவீதம் வரை வரி விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை உயரும் என்று ICEA தெளிவாக தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ICEA, ஏன் இறக்குமதி டிஸ்பிளேகளுக்கு 10 சதவீத வரி விதித்துள்ளது என்ற காரணத்தையும் விளக்கியுள்ளது.

டிஸ்பிளேகளை இறக்குமதி

ஸ்மார்ட்போன்களுக்கான டிஸ்பிளேகளை இறக்குமதி செய்வதற்கான வரியை அரசாங்கம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மொபைல் போன்களின் விலை சுமார் 3 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தொழில்துறை அமைப்பு ICEA அறிவித்துள்ளது. இந்த புதிய இறக்குமதி வரி காரணமாக, இனி இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை உயரும் என்று ICEA தலைவர் பங்கஜ் மோஹின்று தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் அதிகரிக்கப்பட்டு

இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்களில் ஆப்பிள், சியோமி, ஹுவாய், விவோ மற்றும் விங்ஸ்டரான் ஆகிய நிறுவனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிவிதிப்பின் முக்கிய நோக்கம் உள்நாட்டில் ஸ்மார்ட்போன்களுக்கான டிஸ்பிளே உற்பத்தியை உருவாக்கும் என்றும், இதனால் பொருளாதாரம் அதிகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி அதிகரிக்கும்

இதன் காரணமாகத் தான் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் டிஸ்பிளேகளுக்கு புதிய வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்று ICEA தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் நாட்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டிஸ்பிளேகள் குறைக்கப்பட்டு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Mobile phones to get costlier as govt imposes 10 display duty ICEA : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X