அழகான செல்பீ எடுக்க இந்த ஸ்மார்ட்போன் தான் நல்லது.!!
இன்று ஸ்மார்ட்போன் வாங்கும் பெரும்பாலானோரின் முக்கிய ஆசை அவைகளை கொண்டு சிறப்பான செல்பீ எடுப்பதே ஆகும். ஃபேஸ்புக்கில் செல்பீ போட்டு கடுப்பேற்றுபவர்களை பழி வாங்கவே இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர் என்றும் கூறலாம்.
நிலைமை இப்படி இருக்க அனைவரையும் அழகாக காட்டும் செல்பீ கேமரா கொண்ட தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என உங்களுக்கு தெரியுமா. செல்பீ ப்ரியர்கள் மற்றும் அழகான புகைப்படம் எடுக்க தகுந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

10.
சந்தையில் ரூ.18,710க்கு விற்பனையாகும் இந்த கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான செல்பீ எடுக்க 5 எம்பி கேமரா போதுமானது என்பதோடு இதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் புகைப்படங்களை இன்னும் அழகாக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

09.
இந்த கருவியின் விலை சற்றே அதிகம் என்றாலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் 5 எம்பி முன் பக்க கேமரா மூலம் எச்டிஆர் தரத்தில் செல்பீ எடுக்க முடியும். மேலும் இந்த கருவியின் எடை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

08.
இந்த கருவியின் முக்கிய அம்சமே இதன் கேமரா என கூறலாம். 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு இதில் வழங்கப்பட்டிருக்கும் கேமரா அம்சங்கள் புகைப்படங்களை இன்னும் அழகாக்கும்.

07.
சந்தையில் ரூ.19,595க்கு கிடைக்கும் இந்த கருவியை கொண்டு அழகான புகைப்படங்ளை எடுக்க முடியும். மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் 5 எம்பி முன்பக்க கேமராவில் வைடு ஆங்கிள் வழங்கப்பட்டிருப்பதால் செல்பீ புகைப்படங்களை அதிக அழகாக எடுப்பதோடு துள்ளியமாகவும் எடுக்க முடியும்.

06.
ஆக்டா கோர் பிராசஸர் கொண்ட இந்த கருவியில் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் கேமரா அம்சங்களை கொண்டு அழகான செல்பீ எடுக்க முடியும்.

05.
ரூ.12,000 பட்ஜெட்டில் கிடைக்கும் இந்த கருவியில் முக்கிய அம்சமாக கேமரா இருக்கின்றது. 13 எம்பி ப்ரைமரி மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருப்பதால் அழகான செல்பீ எடுப்பதோடு வீடியோ கால் செய்யவும் இந்த கருவி தலைசிறந்த ஒன்றாக இருக்கின்றது.

04.
இந்த கருவியின் அட்டகாசமான அம்சமாக கேமரா இருக்கின்றது. 13 எம்பி சுழலும் கேமரா கொண்டிருக்கின்றது. இதனால் ஒரே கேமரா ஆனால் இடத்திற்கு தகுந்தார் போல் புகைப்படங்களை எடுக்க முடியும்.

03.
ஒப்போ என்1 கருவியிலும் 13 எம்பி சுழலும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் ப்ரைமரி கேமரா மற்றும் செல்பீ கேமரா என இரண்டுமே ஒன்று தான். 13 எம்பி என்பதால் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பதோடு எடுத்த புகைப்படங்களை கேமரா அம்சங்களை கொண்டு மேலும் அழகாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

02.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 5 கருவியில் 16 எம்பி ப்ரைமரி மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதை தவிற இந்த கேமராவில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் அனைத்து புகைப்படங்களையும் அழகூட்டுகின்றது என்றே கூற வேண்டும்.

01.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவயில் 12 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருக்கின்றது. வழக்கமான ஆப்பிள் தரம் இதன் புகைப்படங்களில் நன்றாகவே பிரதிபலிக்கின்றது என்றே கூற வேண்டும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications