Home
News

மொபைல் வசதிகளை வழங்கும் புதுமையான வாட்ச்!

By Super
மொபைல் வசதிகளை வழங்கும் புதுமையான வாட்ச்!

மொபைல் வசதிகளை கொண்ட ரிஸ்ட் வாட்ச்களை உருவாக்கி உள்ளது பர்கு நிறுவனம். நெதர்லாந்தை சேர்ந்த இந்த பர்கு நிறுவனத்தின் மொபைல் வாட்ச், மொபைல்களுக்கு போட்டி என்று கூட சொல்லலாம்.

இந்த மொபைல் வாட்ச்கள் மூலம் ட்ராக் லொக்கேஷன் வசதியையும் பெறலாம். இது எப்படி என்றால் இன்டர்நெட் சர்வரின் தொழில் நுட்ப துணை கொண்டு இந்த ட்ராக் லொக்கேஷன் வசதியினை வழங்கும்.

இந்தியாவில் இந்நிறுவனம் அதிக ஸ்டோர்களை திறக்க இருப்பதாக தெரிய வருகிறது. இதில் முதலில் வடஇந்தியாவிலும், அதன் பிறகு தென்னிந்தியாவிலும் அதிக ஸ்டோர் வசதிகளை உருவாக்க இருப்பதாக பர்கு குலோபில் சேல்ஸ் உயர் அதிகாரி கோயின் பீட்டர்ஸ் கூறியுள்ளார்.

இந்த மொபைல் வாட்ச்களில் புளூடூத், ஸ்பீட் டையல், டச் ஸ்கிரீன், எஸ்எம்எஸ், 2 மெகா பிக்ஸல் கேமரா, மல்டிபில் ரிங்டோன், எஃப்எம் ரேடியோ, மல்டி லேன்குவேஜ், இன்பில்டு சிம் கார்டு வசதி என்று அத்தனை மொபைல் வசதிகளை அசத்ததலாக வழங்கும்.

மேலும் இது 2-லித்தியம் அயான் பேட்டரி இருக்கும் என்பதால் 2 மணி நேரம் டாக் டைம் மற்றும் 48 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும். அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் டில்லி, கொல்கத்தா, கூர்கான் போன்ற இடங்களில் பர்கு நிறுவனத்தின் வாட்ச் ஸ்டோர்கள் இருக்கிறது.

இந்த பர்கு மொபைல் வாட்ச்களை ரூ.9,000 விலையில் இருந்து ரூ.23,000 விலை வரையில் பெற முடியும். இதனால் வாட்சிலேயே மொபைல் வசதியையும் பெறலாம் என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு டூ இன் ஒன் வசதியை அளிக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X