2.0மாயமாகும் செல்போன்கள்: வலுக்கும் செல்போன் ஆப்ரேட்டர்களின் எதிர்ப்பு.!

நாளை இந்த படம் வெளியாகும் நிலையில், தற்போது செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த படத்தின் அந்த காட்சி மற்றும் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோர

|

நடிகர் ரஜினி-எமிஜாக்ஷன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. இந்த படம் நாளை (29ம் தேதி) உலகம் முழுக்க வெளியாகின்றது.

சங்கர் இயக்கியுள்ளார். ஏற்கனவே டீசர் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த படம் சுமார் 450 கோடியில் உருவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டாக படமாக்கப்பட்டது.

2.0மாயமாகும் செல்போன்கள்: வலுக்கும் செல்போன் ஆப்ரேட்டர்களின் எதிர்ப்பு

இந்த படத்தில் செல்போன்கள் மாயமாகும் காட்சிகளும், செல்போன்கோபுரத்தில் நடிகர் அக்ஷய்குமார் இருப்பது போன்றும் இருக்கும். அதில் செல்போன்கள் திடீர் மாயம், மக்கள் பீதி என்று வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

நாளை இந்த படம் வெளியாகும் நிலையில், தற்போது செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த படத்தின் அந்த காட்சி மற்றும் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து போர் கொடியை தூக்கியுள்ளனர்.

2.0 திரைப்படம்:

2.0 திரைப்படம்:

எந்திரன் படத்தின் தொடர்ச்சியே 2.0 ஆகும். இந்த திரைப்படம் கடந்த 3 ஆண்டாக படமாக்கப்பட்டது. மேலும், இதற்கு ரூ.450 கோடி செலவிடப்பட்டது. இந்த படத்திற்கு ஏர்ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். நாளை உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 லைக்கா நிறுவனம்:

லைக்கா நிறுவனம்:

இலங்கையை சேர்ந்த நிறுவனமான லைக்கா 2.0 படத்தை தயாரித்துள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி-எமிஜாக்ஷன்- அக்ஷய்குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் படத்திற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளனர்.

10000 ஆயிரம் திரையரங்குகள்:

10000 ஆயிரம் திரையரங்குகள்:

இந்த திரைப்படம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் படத்திற்கு இணையாகவும் 3டியில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் கிராபிக்ஸ் காட்சிகளும் பின்னி பெடல் எடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளது.

டீசரில் மயாமாகும் செல்போன்கள்:

கடந்த மாதம் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியிட்டப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. 2.0 படத்தில் செல்போன்கள் திடீரென மாயமாகும், செல்போன் கோபுரத்தில் நடிகர் அக்ஷய்குமார் நிற்பது போன்றும் இடம் பெற்றுள்ளன.

மேலும், செல்போன்கள் திடீர் மாயம், மக்கள் பீதி என்று வசனங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

செல்போன் ஆப்ரேட்டர்கள் எதிர்ப்பு:

செல்போன் ஆப்ரேட்டர்கள் எதிர்ப்பு:

செல்போன் மாயமாகும் காட்சிகளும், செல்போன்கள் குறித்த வசனமும் இடம் பெற்றுள்ளத்திற்கு செல்போன் சேவை நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், செல்போன்களையும் சேவை நிறுவனங்களையும் எந்த ஒரு ஆதாராமில்லாமல் விமர்சித்துள்ளத்தாகவும் செல்போன் சேவை நிறுவனங்கள் புகார் தெரிவித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தணிக்கை செய்ய வேண்டும்

தணிக்கை செய்ய வேண்டும்

அறிவியல் தொழில் நுட்பத்தை தவறாகவும் சித்தரித்துள்ளதால், செல்போன் சேவை நிறுவனங்களை காட்சியை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் பிரச்னை:

தமிழ் ராக்கர்ஸ் பிரச்னை:

ஏற்னவே தமிழ் ராக்கர்ஸ் இந்த படத்தை வெளியிட போகவதாகவும் அறிவித்துள்ள நிலையில், செல்போன் சேவை நிறுவனங்கள் புதிய போர்க்கொடி தூக்கியுள்ளதால், இந்த செய்தி காட்டுத் தீ போல பரவி வருகின்றது. இந்த படத்திற்கும் இது புரமோவாக அமைந்தும் உள்ளது.

Best Mobiles in India

English summary
mobile phone operators want film certification revoked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X