Home
News

நாமக்கல்: சார்ஜ் போட்டபடி செல்போன் பேசியதால் ஒருவர் உயிரிழப்பு.!

பொதுவாக எவ்வளவு அவசரம் என்றாலும் சரி சார்ஜ் போட்டபடி செல்போன் பேசவே கூடாது, பின்பு செல்போன் சார்ஜ் ஆகும் போது, செல்போன் அருகில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. இந்நிலையில் சார்ஜ் போட்டு செல்போனை
பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவந்திரன்

தேவந்திரன்

அதன்படி ஈரோடு அருகே தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் மேனேஜராக பணி புரிந்து வருபவர் தேவந்திரன். இவர நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஒடப்பள்ளியைச் சேர்ந்தவர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்

மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்

தேவந்திரன நேற்று தனது ஆண்ட்ராய்டு செல்போனை வழக்கம் போல் சார்ஜ் போட்டுள்ளார், சார்ஜ் ஏறிக்கொண்டிருந்தபோதே
தனது போனை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி தேவந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறிப்பாக தேவேந்திரன் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தலையணையின் கீழ் வைக்க கூடாது

தலையணையின் கீழ் வைக்க கூடாது

குறிப்பாக சார்ஜ் போடும்போது செல்போனை உங்கள் தலையணையின் கீழ் வைக்க கூடாது,அது மிகவும் ஆபத்து. பின்பு நீங்கள் வாங்கும் போனுக்கு ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துவது, மிகவும் நல்லது. அடுத்து ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தவிருங்கள், இது பேட்டரியை சேதம் செய்யும், பின்பு மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் செல்போனை தண்ணீருக்கு அருகில் சார்ஜ் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தவிர்த்துக்கொள்ளுங்கள்

தவிர்த்துக்கொள்ளுங்கள்

போன் சார்ஜில் இருக்கும்போது போனில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் போனை வைக்க பழகிக்கொள்ளுங்கள். போனின் கீபேடு லாக்கை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்வது சிறந்த வழி. மேலும், தினமும் போனை மெல்லிய துணியால் சுத்தம் செய்யுங்கள்.

ஒரிஜினல் பேட்டரி

ஒரிஜினல் பேட்டரி

பேட்டரி பழுதாகிவிட்டால், போலி தயாரிப்புகளை வாங்காமல் விலை கூடுதலாக இருந்தாலும், தரமான மற்றும் அந்தந்த நிறுவனத்தின் ஒரிஜினல் பேட்டரிகளை வாங்குங்கள்.

Best Mobiles in India

English summary
Mobile phone explosion: Namakkal Person Electrocuted by Charging Smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X