13 இலக்க நம்பர் பொது மக்களுக்கு அல்ல: பிஎஸ்என்எல் விளக்கம்.!

|

"ஒரு மிகப்பெரிய வளர்ச்சி நோக்கத்தின் கீழ், இனி புதிய தொலைபேசி எண்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண் கிடைக்கும்" என்று ஒரு பிஎஸ்என்எல் அறிக்கை வெளியாகியுள்ளதாக தொடர்ச்சியான முறையில் - ஒரு கடிதத்தின் புகைப்படம் - இணையத்தில் பரவி வருகிறது.

அதனையடுத்து, அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் மொபைல் எண்களை 13 இலக்காக மாற்ற திட்டமிட்டுள்ளது என்று வதந்திகள் பரவி வருகின்றன.

திட்டம் ஏதும் கொண்டிருக்கவில்லை.!

திட்டம் ஏதும் கொண்டிருக்கவில்லை.!

இதுசார்ந்த விளக்கத்தில், பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க மொபைல் எண்ணை வழங்கும் திட்டம் ஏதும் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்துள்ளது.

இந்த முறை பொது மக்களுக்கு பொருந்தாது.!

இந்த முறை பொது மக்களுக்கு பொருந்தாது.!

பிஎஸ்என்எல் ஆனது அதன் புதிய 13 இலக்க நெறிமுறையை மெஷின் டூ மெஷின் (எம்2எம்) தொடர்புக்கு தான் கொண்டுவந்துள்ளதாகவும், இந்த முறை பொது மக்களுக்கு பொருந்தாது என்றும் பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது.

தகவல்தொடர்பு முறை.!

தகவல்தொடர்பு முறை.!

எம்2எம் தொடர்பு என்பது ஒரு தகவல்தொடர்பு முறையாகும். இந்த முறையானது நிறுவனத்தின் பிணைய சாதனங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றங்களை, மனிதர்களின் எந்த கையேடு உதவியும் இல்லாமல் நிகழ்த்தும் ஒரு முறையாகும்.

How to check PF Balance in online (TAMIL)
கவலைப்பட தேவையில்லை.!

கவலைப்பட தேவையில்லை.!

ஆக, தங்களின் 10 இலக்க மொபைல் எண்களானது 13-இலக்க எண்களாக மாறுமென்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. மேலும் பக்க டெலிகாம் சார்ந்த அப்டேட்ஸ்களுக்குதமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.!

Best Mobiles in India

English summary
Mobile Numbers Might Have 13 Digits From July 1 And People Are Freaking Out. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X