உஷார்: தலையணைக்கு கீழ் வைத்திருந்த போன் வெடித்து தீப்பற்றியது- தூக்கத்தில் நேர்ந்த சோகம்!

|

இரவில் தலையணைக்கு கீழ் வைத்திருந்த நோக்கியா தொலைபேசி வெடித்து சிதறியதில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சார்ஜ் செய்யப்படாத நிலையில் இருந்த நோக்கியா தொலைபேசி வெடித்து சிதறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள்

புதிய அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள்

தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களோடு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி சந்தைகளை ஆட்கொண்டு வந்தாலும் நோக்கியா தொலைபேசிக்கென தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. அதற்குகாரணம் அதன் நீண்ட கால உழைப்பு.

தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நோக்கியா

தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நோக்கியா

கேரளா மாநிலத்தில் இரவில் தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நோக்கியா தொலைபேசி வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் நோக்கியா தொலைபேசியை பயன்படுத்திய அந்த நபருக்கு இடது கை மற்றும் தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இடதுகை, தோள்பட்டையில் பலத்த காயம்

இடதுகை, தோள்பட்டையில் பலத்த காயம்

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்தில் வெளியான தகவலின்படி, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவர் நோக்கியா தொலைபேசி பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சமயத்தில் அவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது நோக்கியா தொலைபேசி தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்துள்ளது. திடீரென தலையணைக்கு அடியில் இருந்த நோக்கியா போன் வெடித்ததில் பாபுவின் இடதுகை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

வீட்டில் தனியாக இருந்த நபர்

வீட்டில் தனியாக இருந்த நபர்

இதுகுறித்து தி நியூஸ் மினிட் செய்திதளத்தில் பதிவிட்டுள்ளபடி, நீண்ட தூர பயணம் மேற்கொண்ட 53 வயதான சந்திரபாபு வீடு திரும்பி அசதியில் உறங்கியுள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சந்திரபாபு திடீரென தனது தோள்பட்டையில் பலத்த வலியை உணர்ந்து எழுந்துள்ளார். தனது படுக்கையை பார்த்த சந்திரபாபு அதிர்ச்சி அடைந்துள்ளார். தலையணை தீப்பற்ற தொடங்கிய நிலையில் இருந்துள்ளது. நோக்கியா தொலைபேசி வெடித்து தீப்பொறி வந்துள்ளது. உடனடியாக அதை கீழே நோக்கியா போனை தரையில் தள்ளிவிட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சந்திரபாபு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

வெற்றிகரமாக 10 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-49!வெற்றிகரமாக 10 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-49!

உண்மையான காரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை

உண்மையான காரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை

இந்த சம்வத்தில் தலையணைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த போது தொலைபேசி சார்ஜ் செய்யப்படவில்லை. இருப்பினும் எப்படி வெடித்தது என தெரியவில்லை. மொபைல்போன் வெப்பமடைந்து பேட்டரி வீங்கி வெடித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் பயணத்த இளைஞர்

இருசக்கர வாகனத்தில் பயணத்த இளைஞர்

அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணத்து கொண்டிருந்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் திடீரென வெடித்து சிதறியது. இதனால் நிலைகுலைந்து போன சரத் இருசக்கர வாகனத்தோடு அருகில் இருந்த குளத்துக்குள் விழுந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தின் சரத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.சரத் பயன்படுத்தியது சீன தயாரிப்பு மொபைல் எனவும் அதை அவர் பெங்களூருவில் வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டது. மொபைல் அதிக சூடாகி வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் செல்போன் வெடிப்பு சம்பவம்

பல்வேறு பகுதிகளில் செல்போன் வெடிப்பு சம்பவம்

அதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பகுதியில் குணா பிரதான் என்ற இளைஞர் தூங்கச்செல்வதற்கு முன்னால் தனது தலைப்பகுதிக்கு அருகில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு உறங்கியுள்ளார். சூடான செல்போன் திடீரென வெடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் ஹெல்மெட்டுக்குள் வைத்து போன் பேசிக்கொண்டே வாகன் ஓட்டிய போது, போன் வெடித்து சிதறியதில் ஒருவருக்கு கை, காது, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

பாதுகாப்பாக கையாள வேண்டும்

பாதுகாப்பாக கையாள வேண்டும்

எத்தனை விலைக் கொடுத்து தொலைபேசிகளை வாங்கினாலும் அதுவும் எலெக்ட்ரானிக் சாதனமே எனவே அதை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

file images

Source: indiatvnews.com

Best Mobiles in India

English summary
Mobile Exploded in Kerala While Kept Under the Pillow: Man Injured

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X