டமால்.. விமானத்திற்குள் வெடித்த மொபைல் சார்ஜர்.. ஜஸ்ட் மிஸ்.. தெரியாம கூட இந்த தப்பை செஞ்சிடாதீங்க!
உதய்பூரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் மொபைல் பேட்டரி வெடித்து சிதறியதே (Mobile Charger Blast) இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சற்றும் எதிர்பாராத இந்த திடீர் விபத்தை அடுத்து ஏஐ470 என்கிற விமானம் உதய்பூர் விமான நிலையத்தில் (Udaipur Airport Terminal) அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த காயமும் / ஆபத்தும் ஏற்படவில்லை; அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல கடந்த ஆண்டும் ஒரு சம்பவம் நடந்திருந்தது. திப்ருகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோவின் விமானத்தில், பயணி ஒருவரின் மொபைல் போன் நடுவானில் தீப்பிடித்தது. உடனே விமான குழுவினர் தீயை அணைக்கும் கருவியின் உதவியுடன் அதை அணைத்து அடுத்தடுத்து வரவிருந்த ஆபத்துகளை தவிர்த்து பயணிகளை காப்பாற்றினர்.
அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் பரப்பரப்பாக பேசப்படுவதோடு சரி, ஒரு ஸ்மார்ட்போன் வெடிக்க என்ன காரணம்? ஒரு மொபைல் போன் தீப்பிடித்து எரிய என்ன காரணம்? ஒரு மொபைல் சார்ஜர் திடீரென "வீங்குவதற்கு" என்ன காரணம்? என்பதை பற்றியெல்லாம் பலரும் பேசுவதில்லை; பொருட்படுத்துவதும் இல்லை!
ஒருவேளை ஒரு ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சார்ஜர் வெடிப்பதற்கான அல்லது தீப்பிடிப்பதற்கான காரணங்களை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால்.. கீழ்வரும் 5 தவறுகளை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த 5 தவறுகள் தான் ஒரு மொபைலை அல்லது சார்ஜரை வெடிக்க அல்லது தீப்பிடிக்க வைக்கும் பொதுவான காரணங்கள் ஆகும்!
01. சான்றளிக்கப்படாத சார்ஜர்கள், கேபிள்கள் அல்லது அடாப்டர்களை பயன்படுத்துவது: மூன்றாம் தரப்பு கேபிள்கள் மற்றும் சார்ஜர்களை பயன்படுத்துவது தான் மொபைல் / சார்ஜர் வெடிப்புக்கு அல்லது தீக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். எனவே எப்போதுமே அதிகாரப்பூர்வ சார்ஜர்களை / கேபிள்களை பயன்படுத்தவும். சார்ஜர்கள் மற்றும் அடாப்டர் விஷயங்களில் பணத்தை சேமிக்க வேண்டாம்.
02. வீக்கம் அடைந்த மொபைல் / சார்ஜர்களை பயன்படுத்துவது: அடிக்கடி மற்றும் பலமாக கீழே விழுந்த மொபைல் போனோ அல்லது சார்ஜரோ லேசாக வீக்கம் அடைந்துள்ளது போல் நீங்க உணர்ந்தால், அதை மேலும் பயன்படுத்துவதை உடனே தவிர்க்கவும். இல்லையென்றால் ஷார்ட் சர்க்யூட், ஓவர் ஹீட்டிங் அல்லது லீக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்; பின்னர் அடித்து வெடிக்கலாம் / தீப்பிடிக்கலாம்.
03. தலையணைக்கு அடியில் வைத்து மொபைலை சார்ஜ் செய்தல்: கேட்பதற்கு இது ஒரு வேடிக்கையான விஷயமாக தோன்றலாம். ஆனால் உண்மையில் இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். இப்படி செய்வதால், உங்கள் போன் சூடாகி தீபிடிக்கலாம் அல்லது ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம்.
04. அதிகமான வெப்பநிலை உள்ள இடங்களில் அதிக நேரம் மொபைலை விட்டு விடுவது: நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் வெவ்வேறு வெப்பநிலை வரம்புகள் உள்ளன நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறினால் முதலில் உட்புற சேதங்கள் ஏற்படும், பின்னர் செயலிழப்புகளுக்கு வழிவகுக்கும்; ஒருகட்டத்தில் இது வெடிக்க கூட செய்யலாம்.
05. சார்ஜ் செய்யும் போது மொபைல் போனை பயன்படுத்துதல்: இது பலரும் செய்யும் மிகவும் பொதுவான ஒரு தவறாகும். பெரும்பாலான போன்கள் சார்ஜ் செய்யும் போது சிறிது வெப்பமடைவதால், அதே நேரத்தில் அவற்றைப் பயன்படுத்துவது அதிக வெப்பத்தை உருவாக்கும். இது ஆபத்தில் சென்று முடியலாம்.


Click it and Unblock the Notifications








