கல்லூரி வளாகத்திற்குள் காதலி கண்முன் கொலை செய்யப்பட்ட காதலன்: சிடிஆர் முறைப்படி கைது.!

கால்ஸ் டீடைல் ரெகார்ட் அனாலிசிஸ் முறைப்படி(CDR) கர்நாடக காவல்துறை போலீசார் அண்மையில் நடந்த கொலை வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

|

கால்ஸ் டீடைல் ரெகார்ட் அனாலிசிஸ் முறைப்படி(CDR) கர்நாடக காவல்துறை போலீசார் அண்மையில் நடந்த கொலை வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சிடிஆர்:கல்லூரி வளாகத்திற்குள் காதலி கண்முன் கொலை செய்யப்பட்ட காதலன்.!

கர்நாடக கல்லூரி வளாகத்திற்குள் காதலி கண்முன் கொலை செய்யப்பட்ட காதலன் வழக்கில் தேடப்பட்டுவந்த கொள்ளையர்களை சி.டி.ஆர். முறைப்படி கர்நாடக காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.

கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற கொலை

கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற கொலை

கர்நாடக: அளந்து பகுதிலயில் இருக்கும் கர்நாடக சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில், கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயலஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஹைதெராபாத் தனியார் கல்லூரியில் படித்துவரும் பிரசாத்(23), செப்டம்பர் 22 ஆம் தேதி தன் காதலி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கீதா-வின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கர்நாடக சென்ட்ரல் பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்.

விபரீதம் ஆன பிறந்தநாள் கொண்டாட்டம்

விபரீதம் ஆன பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடக் காதல் ஜோடிகள், கல்லூரி வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட ஆள் இல்லாத கட்டிடத்திற்கு சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்த காதல் ஜோடியிடம் இரண்டு மர்ம நபர்கள் கத்தியை கட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போன்களை வழிப்பறி செய்ய முயன்றிருக்கின்றனர், மொபைல் மற்றும் பணத்தை கொடுக்க மறுத்த பிரசாத்தை அவர் காதலியின் கண் முன்னே மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

திட்டமிட்டு கொலை

திட்டமிட்டு கொலை

பிரசாத் கொலை செய்யப்பட்ட விபரம் அறிந்த பிரசாத்தின் அண்ணன் ஆத்மானந்த, நரோனா காவல் நிலையத்தில் பிரசாத்தின் காதலி கீதா மீது புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளார். அப்புகாரில் பிரசாத்தின் காதலி, சதித்திட்டம் தீட்டி தனது தம்பியை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

 பிரசாத்தின் மொபைல் போன்

பிரசாத்தின் மொபைல் போன்

வழக்குப் பதிவு செய்து கீதாவிடம் முதற்கட்ட விசாரணையைத் துவங்கிய கர்நாடக போலீசார், கீதா நிரபராதி என தெரிவித்தனர். பிரசாத்தை கொலை செய்த இரண்டு மர்ம நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், கொலை செய்யப்பட்ட பிரசாத்தின் மொபைல் போன் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பதாக கீதா மூலம் கர்நாடக போலீசாருக்கு துப்பு கிடைத்தது.

கைது

கைது

அதன் அடிப்படியில் கர்நாடக போலீசார் கால்ஸ் டீடைல் ரெகார்ட் அனாலிசிஸ் முறைப்படி பிரசாத்தின் ஸ்மார்ட் போன் ஐ ட்ராக் செய்து சாந்தப்பா(23) மற்றும் கணேஷ்(18) என்ற இரண்டு பேரை கர்நாடக காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் அக்கல்லூரி வளாகத்திற்கு அருகில் ஆடு மேய்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Mobile call records help Aland police to solve CUK murder case : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X